இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களின் கையில் எது இருக்கிறதோ
இல்லையோ, ஸ்மார்ட்போன் இல்லாதவரே இல்லை என்றே கூறலாம்.
தங்கள் உள்ளம் கையிலேயே உலகத்தை ஆளும் தலைமுறையினரின்
இன்றைய குழப்பமே எந்த பிராண்ட், விலை என்ன? இது தான்? ஆனால் இதன் பின் விளைவுகள்
என்ன? இதனால் இந்தியா என்னென்ன பிரச்சனைகளளை சந்திக்கும் என்று யோசித்து
பாருங்கள்.
இன்று நாம் உபயோகிக்கும் மொத்த ஸ்மார்ட்போன்களில் 60
சதவிகிதம் சீனாவுடையது என்றால் நம்புவீர்களா? ஆனால் அது தான் உண்மை.
இந்தியாவை
ஆளும் சீனா
வருடத்துக்கு வருடம் ஸ்மார்ட்போன் சந்தையில் கிட்டதட்ட 10
சதவிகிதம் வளர்ச்சி கண்டு வருகிறது இந்தியா. இதுவே காலாண்டுக்கு சுமார் 15
சதவிகிதம் வளர்ச்சியும் கண்டு வருகிறது. இந்த வகையில் நாம் நம்மையும் அறியாமல்
சீனவினால் ஆளப்படுகிறோம். இன்றைய ஸ்மார்ட்போன் சந்தையில் கிட்டதட்ட 60%
ஸ்மார்ட்போன்கள் சீனாவுடையது தான். இது ஸ்மார்ட்போனில் மட்டும் அல்ல இன்னும் பல
பொருட்களில் கூட அப்படி தான் இருக்கிறோம்.
ஜியோமி
தான் டாப்
நடப்பாண்டில் ஜனவரி - மார்ச் மற்றும் ஏப்ரல் - ஜூன்
மாதத்தில் முறையே அதன் சந்தை மதிப்பில் ஜியோமி தான் முதலிடம், இது முதல் மூன்று
மாதங்களில் 29% வளர்ச்சியும், இரண்டாவது மூன்று மாதங்களில் 28% வளர்ச்சியும், இதே
சாம்சங் முறையே 24% மற்றும் 25%மாகவும், இதே விவோ முறையே 12% மற்றும் 12%
வளர்ச்சியினையும், இதே ரியல்மி முறையே 7% மற்றும் 9%ஆகவும், இதே ஒப்போ முறையே 7%
மற்றும் 8%மாகவும் விற்பனையாகியுள்ளது. இதே மற்ற ஸ்மார்ட்போன்கள் ஆப்பிள், எல்.ஜி,
ஹீவாயின் ஹானர், ஆசுஸ், கூகுள், லெனோவா, மோட்டோரோலா உள்ளிட்ட நிறுவங்கள் முறையே
21% மற்றும் 18% மாகவும் காணப்படுகிறது.
சீனா
போன்கள் விலை குறைவு
இன்றைய காலகட்டத்தில் என்னதான் இது நல்ல பிராண்ட், இதன்
மூலம் இத்துணை நன்மைகள் உண்டு என கூறினாலும், சராசரி விலையிலான போன்களே அதிகளவு
விற்பனையாகின்றன, உதாரணத்திற்கு 1லட்சம் ரூபாய் போட்டு வாங்கும் ஐபோனில் உள்ள
வசதிகள் அனைத்தும், 15 மதிப்புள்ள சிறு பிராண்டுகளில் இருந்தால் நாம் அதைத் தான்
வாங்குகிறோம், ஆனால் ஆப்பிள் போன்ற பிராண்டுகள் 5 வருடங்கள் உபயோகிக்க முடியும்
எனில் மற்ற போன் களை 1 வருடத்துக்கு மேல் உபயோகிக்க முடிவதில்லை. எனினும்
வருடத்துக்கு ஒரு புது புதுப்போன் வாங்கலாமே என்ற எண்ணம் மக்கள் மனதில் இருக்கும்
நிலையில் தான், இந்த விற்பனை வித்தியாசம் காணப்படுகிறது. இதைதான் சீனா நிறுவனங்கள்
இன்று கையாழுகின்றன.
என்ன
பிரச்சனை
ஒரு புறம் வர்த்தக பற்றக்குறை அதிகரிக்கிறது என்பது
உண்மையாக இருந்தாலும், தற்போதைக்கு அதை யாரும் ஏற்றுக் கொள்வதாய் இல்லை. அமெரிக்கா
போன்ற மிகப்பெரிய பொருளாதார நாடுகள் கூட இந்த வர்த்தக பற்றாக்குறையால் தான்
பாதிக்கப்படுகின்றன. இதனால் தான் மிகப்பெரிய வர்த்தகபோரே நடந்து கொண்டிருக்கிறது.
அதிலும் ஏற்கனே சீனாவின் ஹீவாய் நிறுவனம், அமெரிக்காவின் ரகசியங்களை
தெரிந்துகொள்வதாகவும், இதனால் அமெரிக்காவில் இருந்தே தடை செய்தார் அமெரிக்க
ஜனாதிபதி. இந்த நிலையில் இந்தியாவுக்கும் அதே நிலை வர எவ்வளவு நாள் ஆகும் என்று
தான் தெரியவில்லை.
இந்திய
நிறுவனங்களின் நிலை
இன்று நம்மில் எத்துனை பேருக்கு தெரியும் இந்திய மொபைல்
பிராண்டுகள் எத்துனை என்று, அதிலும் நிறுவனங்கள் இங்கிருந்தாலும், அதிலும் அன்னிய
நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன என்று. ஆக வர்த்தக பற்றாக்குறை என்பதோடு, அன்னிய
நிறுவனங்களை அதிகளவில் இங்கே கொண்டு வருவதையடுத்து, நாளை அமெரிக்கா போன்றதொரு
நிலைதான் இந்தியாவுக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக