இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இந்தியாவின்
மத்தியப் பிரதேச மாநிலம், சிவபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவா கேவட் (35) என்பவரை
தொடர்ந்து 3 ஆண்டுகளாக காகங்கள் பழிவாங்குவதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சிவா கேவட் செய்தியாளர்களிடம்
புதன்கிழமை கூறியதாவது:
சிவபுரி
மாவட்டத்தின் சுமீலா கிராமத்தில் வசித்து வரும் நான், தினக்கூலியாக வேலை
செய்கிறேன். 3 ஆண்டுகளுக்கு முன் காக்கைக் குஞ்சு ஒன்று வலைக்குள் சிக்கிக்
கொண்டிருந்ததைக் கண்டேன். அதைக் காப்பாற்றுவதற்கு நான் எவ்வளவோ முயற்சித்தேன்.
ஆனால் என்னால் அந்த காக்கையைக் காப்பாற்ற இயலவில்லை. ஆனால், அதைக் கண்ட மற்ற
காகங்கள் நான்தான் அந்த காக்கையை கொன்றுவிட்டேன் என நினைத்துக் கொண்டன.
அதுமுதல்
இன்றுவரை நான் செல்லும் வழியெங்கும் என்னைப் பின்தொடர்ந்து வந்து தாக்கி
வருகின்றன. நான் எங்கு சென்றாலும் காகங்கள் கூட்டமாக வந்து என்னைத் தாக்கும்.
இப்போதெல்லாம் நான் வெளியில் சென்றால், கையில் குச்சியுடன் வானத்தை பார்த்து
காக்கைகளை விரட்டிக் கொண்டே செல்கிறேன் என்று அவர் கூறினார்.
இதுதொடர்பாக
இந்தூரில் உள்ள பறவைகள் நிருணர் அஜய் கடிகார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பறவைகளுக்கு
நினைவுத் திறன் மிக அதிகமாக இருக்கும். சில பறவைகளுக்கு மனிதர்களை விட நினைவுத்
திறன் கூர்மையாக இருக்கும். அதனால்தான் பல ஆயிரம் மைல்கள் தாண்டி பறவைகள் பறந்து
சென்றாலும், தங்கள் இடத்துக்கு சரியாகத் திரும்பி விடுகின்றன. மனிதர்களின் முகத்தை
காக்கைகள் அவ்வளவு எளிதாக மறந்து விடாது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக