Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 4 அக்டோபர், 2019

10-வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்..! காட்டிக்கொடுத்த ஒத்த செருப்பு..! விளக்கும் பரபர பின்னணி..!

Image result for 10-வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்..!
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



 விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள நல்லாளம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு கவிதா-ஸ்ரீ என்ற 10-வயது மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த 3-ஆம் தேதி அன்று, கவிதா மளிகை கடைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், பதறிய கிருஷ்ணமூர்த்தி வெளியில் சென்று தேடியுள்ளார்.
எங்கு தேடியும் கிடைக்காததால், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டின் பின்புறத்தில் இருக்கும் கல்குவாரி அருகே சிறுமியின் சடலம் இருப்பதாக தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த சடலம் கவிதா-ஸ்ரீ என்று உறுதி செய்தனர். பின்னர் அங்கிருக்கும் தடயங்களை பார்த்துக்கொண்டிருக்கும் போது, ஒரு செருப்பு கிடைத்துள்ளது. அந்த செருப்பு யாருடையதாக இருக்கும் என்று கிருஷ்ணமூர்த்தியின் மனைவியிடம் போலீசார்  கேட்டனர்.
அதற்கு அவர் அளித்த பதிலில், இந்த வழக்கில் இருந்த நீண்ட முடிச்சு அவிழ்க்கப்பட்டது. ஆம், இந்த செருப்பு யாருடையது என்று போலீசார் கேட்டபோது, பக்கத்து வீட்டை சேர்ந்த கூழித்தொழிலாளி மகேந்திரனுடையது என்று அவர் தெரிவித்தார்.
இதையடுத்து மகேந்திரனிடம் நடத்திய விசாரணையில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், சிறுமியை கற்பழித்து கொலை செய்ததை அவர் ஒத்துக்கொண்டார். எனக்கும், கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே இருந்த முன்பகை காரணமாக இவ்வாறு செய்தேன் என்றும் அந்த நபர் வாக்குமூலம் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து மகேந்திரனை கைது செய்த காவல்துறையினர், கடலூர் சிறையில் அடைத்தனர். நடிகர் பார்த்திபன் நடித்த ஒத்தசெருப்பு படத்தில் குற்றவாளியை கொலை நடந்த இடத்தில் கிடந்த ஒத்த செருப்பை வைத்து கண்டுபிடிப்பார்கள். அதே போல் திண்டிவனத்தில் மாணவியை கொன்ற குற்றவாளியை ஒத்த செருப்பை வைத்து போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக