இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தமிழ்நாடு அரசுப் பணிகளில் துணை வணிக வரி அலுவலர்,
சார்பதிவாளர் நிலை-2, தொழிலாளர் உதவி ஆய்வாளர், உதவி வேலைவாய்ப்பு அலுவலர், பேரூராட்சி
செயல் அலுவலர் நிலை 2, கைத்தறி ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர் (வருவாய்த்துறை)
உள்ளிட்ட 18 பணிகளுக்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II (Combined Civil
Services Examination – II) மூலம் இடங்கள் நிரப்பப்படும்.
இளநிலைக் கூட்டுறவுக் கணக்காய்வாளர், சட்டமன்றப்
பணிகளுக்கான இளநிலை எழுத்தர், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர்
பணியிடங்கள் உட்பட 26 பணிகளுக்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II A
(Combined Civil Services Examination – II A) மூலம் தகுதியுடையவர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்தத் தேர்வுகளை
நடத்திப் பணியமர்த்திவருகிறது.
அண்மையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II மற்றும் II A (Combined Civil Services
Examination – II & II A) பாடத் திட்டத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்
பாடங்களை நீக்கிவிட்டு, புதிய பாடத்திட்டத்தை வரையறைசெய்து வெளியிட்டிருக்கிறது.
இதனால், தமிழக மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்; பிற மாநிலத்தவர்கள் அதிக
அளவில் தமிழ்நாடு அரசுப் பணிகளில் இடம்பெற்றுவிடுவார்கள்; இனிமேல் தமிழ் மொழிப்
பாடங்களைக் கற்பது குறைந்து போய்விடும்... என்றெல்லாம் பலவிதமான கருத்துகளை
முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலரும் பதிவுசெய்து வருகிறார்கள்.
தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த மாற்றத்துக்குத் தங்கள்
எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தார்கள்.
இந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார், தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றம்
செய்யப்பட்டது குறித்து விளக்கமளித்திருக்கிறார். இருந்தாலும், தமிழ்நாடு அரசின்
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுகளை எழுத விரும்புபவர்கள், மொழிப் பாடம்
நீக்கப்பட்டால் தங்களுக்குப் பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்கிற அச்சத்தில்
இருக்கிறார்கள். `அவர்களின் அச்சம் ஏற்புடையதுதானா?’, `தமிழ் மொழி ஆர்வலர்களும்
வலைப்பதிவர்களும் சொல்வதுபோல், தமிழ்நாட்டில் தமிழ் மொழி பின்னுக்குத் தள்ளப்படுகிறதா?’
என்பது போன்ற சில கேள்விகளுக்கு முதலில் விடை தேடுவோம்...
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II-க்கு (Combined
Civil Services Examination – II) முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam),
முதன்மைத் தேர்வு (Main Exam) என இருவகையான எழுத்துத் தேர்வுகள் நடத்தப்படும்.
பிறகு, நேர்முகத்தேர்வு (Interview) நடத்தப்படும். ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்
தேர்வு – II A-க்கு (Combined Civil Services Examination – II A) நேர்முகத்தேர்வு
இல்லாமல் இரு வகையான எழுத்துத் தேர்வுகள் மட்டும் நடத்தப்படுகின்றன. இவற்றில்
முதல்நிலைத் தேர்வு என்பது கொள்குறி வகைத் தேர்வாகவும் (Objective Type),
முதன்மைத் தேர்வு என்பது விரிவான எழுத்துத் தேர்வாகவும் (Descriptive Type)
இருக்கும்.
முதல்நிலைத் தேர்வுக்கான (Preliminary Exam) முந்தைய
பாடத்திட்டத்தில்
·
பொது அறிவியல் (General Science)
·
நடப்பு நிகழ்வுகள் (Current Events)
·
புவியியல் (Geography)
·
இந்திய வரலாறு மற்றும் பண்பாடு (History and
Culture of India),
·
இந்திய ஆட்சியியல் (Indian Polity)
·
இந்தியப் பொருளாதாரம் (Indian Economy)
·
இந்திய தேசிய இயக்கம் (Indian National
Movement)
·
திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு
(Aptitude and Mental Ability)
·
பொதுத் தமிழ் - பத்தாம் வகுப்புத் தரத்தில்
(General Tamil)
·
பொது ஆங்கிலம் (General English - SSLC
Standard)
·
ஆகிய 10 வகையான தலைப்புகளின் கீழ் பல்வேறு
பாடங்கள் இடம்பெற்றிருந்தன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்போது
செய்திருக்கும் மாற்றத்தில், முந்தைய பாடத்திட்டத்தில் கடைசியாக இருக்கும் இரு வகை
மொழிப் பாடங்கள் மட்டும் நீக்கப்பட்டிருக்கின்றன. அதற்குப் பதிலாக, `தமிழ்நாட்டின்
வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள்’ (History, Culture,
Heritage and Socio - Political Movements in Tamilnadu) மற்றும் `தமிழகத்தில்
வளர்ச்சி நிர்வாகம்’ (Development Administration in Tamilnadu) என்று இரண்டு
புதிய தலைப்புகளில் பாடங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
புதிதாகச் சேர்க்கப்பட்ட `தமிழ்நாட்டின் வரலாறு, மரபு,
பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள்’ எனும் தலைப்பின் கீழ்,
(i) தமிழ்ச் சமுதாய வரலாறு, அது தொடர்பான தொல்லியல்
கண்டுபிடிப்புகள், சங்ககாலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு.
(ii) திருக்குறள்:
அ) மதச்சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம்.
ஆ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத்தன்மை.
இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்.
ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமத்துவம்,
மனிதேநயம் முதலானவை.
உ) சமூக, அரசியல், பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின்
பொருத்தப்பாடு.
subjects
ஊ) திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்.
(iii) விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு –
ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்ககாலக் கிளர்ச்சிகள் – விடுதலைப் போராட்டத்தில்
பெண்களின் பங்கு.
(iv) பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில்
தமிழ்நாட்டின் சமூக அரசியல் இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி – நீதிக்கட்சி,
பகுத்தறிவுவாதத்தின் வளர்ச்சி - சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் மற்றும் இந்த
இயக்கங்களுக்கான அடிப்படைக் கொள்கைகள், தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவின்
பங்களிப்புகள்.
ஆகிய பாடங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
முதல்நிலைத் தேர்வில் இடம் பெற்றிருந்த மொழி தொடர்பான
பாடங்கள் நீக்கப்பட்டிருந்தாலும், சங்ககாலம் முதல் இந்தக் காலம் வரையிலான தமிழ்
இலக்கிய வரலாறு, எந்தக் காலத்துக்கும் பயன்படும் திருக்குறளின் சிறப்புகள்,
விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்களிப்புகள், பத்தொன்பது மற்றும் இருபதாம்
நூற்றாண்டுகளில் தமிழக அரசியல் இயக்கங்களின் வளர்ச்சி போன்ற பாடங்கள் இடம்
பெற்றிருப்பதால், இந்தத் தேர்வுக்கு தமிழ் மொழியை மட்டுமன்றி தமிழர் வரலாற்றையும்
சேர்த்துப் படிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
சமையல் முதல் இலக்கியம் வரை புத்தகச் சந்தையாக தி.
நகர்.
புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் மற்றொரு தலைப்பான,
`தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்’ எனும் தலைப்பின் கீழ்,
(i) தமிழ்நாட்டின் மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகள் -
அவற்றை தேசிய மற்றும் பிற மாநிலங்களுக்கான குறியீடுகளுடன் ஒப்பாய்வு செய்வது -
தமிழகத்தின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு சமூக மறுமலர்ச்சி இயக்கங்களின்
பங்களிப்பு.
(ii) அரசியல் கட்சிகளும் பலதரப்பு மக்களுக்கான
நலத்திட்டங்களும் – இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கான நியாயங்களும் சமூக வளங்களைப்
பெறும் வாய்ப்புகளும் – தமிழகத்தின் பொருளாதாரப் போக்குகள் - தமிழகத்தின் சமூக
பொருளாதார வளர்ச்சியில் சமூகநலத் திட்டங்களின் தாக்கமும் பங்களிப்பும்.
(iii) சமூகநீதியும் சமூக நல்லிணக்கமும், சமூகப் பொருளாதார
மேம்பாட்டின் மூலாதாரங்கள்.
(iv) தமிழகத்தின் கல்வி மற்றும் நலவாழ்வு முறைமைகள்.
(v) தமிழகப் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில்
அவற்றின் தாக்கமும்.
(vi) பல்வேறு துறைகளில் தமிழகம் நிகழ்த்தியிருக்கும்
சாதனைகள்.
(vii) தமிழகத்தில் மின்னாளுகை
ஆகிய பாடங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
இதன் மூலம் முதல்நிலைத் தேர்வில், தமிழகத்தின் சமூக
வளர்ச்சி நிலைகள், சமூக நலத்திட்டங்கள், கல்வி மற்றும் நல்வாழ்வு, தமிழகத்தினரின்
சாதனைகள், தமிழகத்தில் மின்னாளுகைத் திட்டச் செயல்பாடுகள் எனத் தமிழர்களின்
பல்வேறு வளர்ச்சி நிலைகளைத் தேர்வு எழுதுபவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய அவசியம்
ஏற்பட்டிருக்கிறது.
மேலே 1 முதல் 5 வரை கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்புகளுக்கு
`தமிழ்நாட்டின் வரலாறும், மரபும், பண்பாடும்’ எனும் தலைப்பின் கீழாக,
1.1 தமிழர் நாகரிகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் – செவ்வியல்
காலம் முதல் இக்காலம் வரை.
1.2 தமிழ்மொழி வளர்ச்சியில் சங்ககால இலக்கியமும் வரலாற்றுச்
சான்றுகளும்.
1.3 தமிழ்நாட்டின் இசை மரபு – நாட்டுப்புற இசை, நாட்டுப்புற
நடனம், நாட்டுப்புற இசைக் கருவிகள் மற்றும் நாட்டுப்புற நாடகங்கள் – செவ்வியல்
காலம் தொடங்கி பின் நவீனக் காலம் வரை அதன் மாறுபாடுகள்.
1.4 நாடகக்கலை - வீதி நாடகம் – நாட்டார் அரங்கம் – மரபு
வழியிலான நாடக உத்திகள்.
1.5 சமூகப் பொருளாதார வரலாறு - கடல் கடந்த வணிகம் – சங்க
இலக்கியச் சான்றுகள் (பட்டினப்பாலை முதலியன).
1.6 பகுத்தறிவு இயக்கங்கள் - திராவிட இயக்கம், சுயமரியாதை
இயக்கம்.
1.7 தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார முன்னேற்றம் மற்றும்
சமூக நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதலில் சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு -
இடஒதுக்கீடும் அதன் பயன்களும் – தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில்
சமூகநீதி மற்றும் சமூக ஒற்றுமையின் பங்கு.
1.8 பெண்ணியம் - சமுதாயத்தில் பெண்ணியம், இலக்கியத்தில்
பெண்ணியம் - பல்வேறு கருத்துகளும் பார்வைகளும்.
1.9 இக்காலத் தமிழ்மொழி - கணினித் தமிழ், வழக்குமன்றத்
தமிழ், நிர்வாக மொழியாகத் தமிழ், புதிய வகைமைகள்.
ஆகிய பாடங்களிலிருந்து கேள்விகள் இடம்பெறும் என்று
குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இரு மொழிகளிலான மொழிபெயர்ப்புகள், சுருக்கி வரைதல், பொருள்
உணர்திறன், சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல் போன்றவை
`தமிழ்நாட்டின் வரலாறும், மரபும், பண்பாடும்’ தொடர்புடையதாகவே இருக்கும் என்று
தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் திருக்குறளை மையமாகக்கொண்டு கட்டுரைகள்
அமைப்பது மற்றும் கடிதங்கள் வரைதல் போன்றவையும் தமிழ் மொழியை முழுமையாக
அறியச்செய்யக் கூடியவையாக இருக்கின்றன.
இதேபோல் முதன்மைத் தேர்வுக்கான (Mail Exam) முந்தைய பாடத்திட்டத்தில்
1. இந்தியா மற்றும் தமிழகத்தின் வளர்ச்சியில் அறிவியல்
மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு (Role and Impact of science and Technology in
the Development of India and Tamilnadu).
2. ஒன்றியப் பகுதி மற்றும் மாநிலங்களில் நிர்வாகம்,
சிறப்புக் குறிப்புகளுடன் தமிழ்நாடு (Administration of Union and States with
special reference to Tamilnadu).
3. இந்திய / தமிழக சமூக – பொருளாதாரப் பிரச்னைகள் (Socio –
Economic Issues in India/Tamilnadu).
4. தேசிய அளவிலான நடப்பு நிகழ்வுகள் (Current Issues at
National Level).
5. மாநில அளவிலான நடப்பு நிகழ்வுகள் (Current Issues at
State Level).
ஆகிய ஐந்து தலைப்புகளிலான பாடங்கள் இடம்பெற்றிருந்தன.
வளர்ச்சி
தற்போது, முதன்மைத் தேர்வானது,
1. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல் (Tamil to
English translation).
2. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல் (English
to Tamil translation).
3. சுருக்கி வரைதல் (Precis writing).
4. பொருள் உணா்திறன் (Comprehension).
5. சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல் (Hints
Development).
6. திருக்குறளிலிருந்து கீழ்க்காணும் தலைப்புகள் தொடர்பாகக்
கட்டுரை எழுதுதல் (Essay writing on the following topics from ‘Thirukkural’).
அ) மதச்சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம் (Significance
as a Secular literature).
ஆ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை (Relevance to
Everyday Life).
இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம் (Impact of
Thirukkural on Humanity).
ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமத்துவம்,
மனிதேநயம் முதலானவை (Thirukkural and Universal Values - Equality, Humanism,
etc..)
உ) சமூக, அரசியல், பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின்
பொருத்தப்பாடு (Relevance to Socio - Politico - Economic affairs).
ஊ) திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள் (Philosophical
content in Thirukkural).
7. கடிதம் வரைதல் - அலுவல் சார்ந்தது (Letter writing –
Official)
ஆகிய ஏழு தலைப்புகளின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
இந்தத் தேர்வை தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில்
எழுதலாம். எனினும், ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் திருக்குறள் மற்றும் தமிழ் மொழியின்
சிறப்புகள், தமிழர் பண்பாடு, தமிழர் அரசியல், தமிழக இயக்கங்கள், தமிழக வளர்ச்சி
எனத் தமிழ் மற்றும் தமிழர் வரலாறு பற்றி அதிகமாகப் படித்துத் தெரிந்துகொள்ள
வேண்டும் என்கிற கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இங்கு கால
மாற்றத்துக்கேற்ப கணினித் தமிழ், வழக்குமன்றத் தமிழ், நிர்வாக மொழியாகத் தமிழ்
போன்றவை இடம்பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. இதன் மூலம், `தமிழக அரசுப்
பணியிடங்களில் பிற மாநிலத்தவர் இடம் பிடித்துவிடுவார்கள்’ என்று சொல்வது சிறிதும்
ஏற்புடையதல்ல. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் இதன் மூலம், தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் தனிச்சிறப்பை
ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
முதல்நிலைத் தேர்வானது (Preliminary Exam) மேற்காணும்
பொதுப்பாடங்களில் (General Studies) பட்டப்படிப்பு அளவிலான கேள்விகளாக 175
கேள்விகளும், பத்தாம் வகுப்பு அளவிலான திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு
(Aptitude and Mental Ability) கேள்விகளாக 25 கேள்விகளும் என்று மொத்தம் 300
மதிப்பெண்களுக்கு 3 மணி நேர அளவிலான தேர்வாக நடைபெறும். இந்தத் தேர்வில் குறைந்தது
90 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் மட்டுமே முதன்மைத் தேர்வுக்குச் செல்ல முடியும்.
முதன்மைத் தேர்வானது (Main Exam) பகுதி - அ (Part-A)
மற்றும் பகுதி - ஆ (Part - B) என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. பகுதி
அ-வில்,
1. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல் (Tamil to
English translation).
2. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல் (English
to Tamil translation).
ஆகிய மொழிபெயர்ப்புக்கான இரு தலைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.
இந்தப் பகுதியில் ஒவ்வொரு தலைப்பிலும் இரு கேள்விகள் இடம்பெற்றிருக்கும். ஒரு
கேள்விக்கு 25 மதிப்பெண்கள் வீதம் ஒரு தலைப்புக்கு 50 மதிப்பெண்களும், இரண்டு
தலைப்புகளுக்கும் சேர்த்து மொத்தம் 100 மதிப்பெண்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
பகுதி - ஆ-வில்
1. சுருக்கி வரைதல் (Precis writing)
2. பொருள் உணா்திறன் (Comprehension)
3. சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல் (Hints
Development)
4. திருக்குறளிலிருந்து கீழ்க்காணும் தலைப்புகள் தொடர்பாகக்
கட்டுரை எழுதுதல் (Essay writing on the following topics from ‘Thirukkural’)
5. கடிதம் வரைதல்
ஆகிய ஐந்து தலைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தப்
பகுதியில் ஒவ்வொரு தலைப்பிலும் இரு கேள்விகள் இடம்பெற்றிருக்கும். ஒரு கேள்விக்கு
20 மதிப்பெண்கள் வீதம் ஒரு தலைப்புக்கு 40 மதிப்பெண்களும், ஐந்து தலைப்புகளுக்கும்
சேர்த்து மொத்தம் 200 மதிப்பெண்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
முதன்மைத் தேர்வில் பகுதி அ மற்றும் பகுதி ஆ சேர்த்து
மொத்தம் 300 மதிப்பெண்கள் இருக்கின்றன. இதில் பகுதி அ (Part – A) பகுதியில்
இருக்கும் கேள்விகளுக்கான 100 மதிப்பெண்களில் குறைந்தது 25 மதிப்பெண்கள் எடுத்து,
தகுதி பெற வேண்டும். அப்படிப் பெற்றிருந்தால் மட்டுமே பகுதி ஆ (Part – B)வில்
வரும் கேள்விகளுக்கான மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்பு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II (Combined
Civil Services Examination – II) தனியாகவும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்
தேர்வு – II A (Combined Civil Services Examination – II A) தனியாகவும்
நடத்தப்பட்டு வந்தன. இனிமேல், ஒரே தேர்வாக நடத்தப்படும்.
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II முதன்மைத்
தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு, நேர்முகத்தேர்வு நடத்தப்படும். முதன்மைத்
தேர்வு (எழுத்துத் தேர்வு) – 300 மதிப்பெண்கள், நேர்முகத்தேர்வு - 40 மதிப்பெண்கள்
என்று மொத்தம் 340 மதிப்பெண்களுக்குக் கணக்கிட்டு, அதிக மதிப்பெண் பெற்றவர்களைக் கொண்டு,
தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றிப் பணியமர்த்தப்படுவார்கள்.
இந்தப் பணியிடங்களுக்கு அனைத்து வகுப்பினரும் குறைந்தது 102 மதிப்பெண்களைப்
பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு அல்லாத பணிகளுக்கு (ஒருங்கிணைந்த குடிமை
பணிகள் தேர்வு – II A) முதன்மைத் தேர்வின் மொத்த மதிப்பெண் 300-க்கு அதிக
மதிப்பெண்கள் பெற்றவர்களைக்கொண்டு, தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறைகளைப்
பின்பற்றித் தேர்வு செய்யப்பட்டுப் பணியமர்த்தப்படுவார்கள். இந்தப்
பணியிடங்களுக்கு அனைத்து வகுப்பினரும் குறைந்தது 90 மதிப்பெண்களைப் பெற்றிருக்க
வேண்டும்.
`பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே’ (நன்னூல் 462)
என்று நன்னூலில் குறிப்பிட்டதுபோல், தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II; II A பாடத்
திட்டத்தில் காலத்துக்கேற்ப புதிய மாற்றங்கள் செய்தது வரவேற்புக்குரியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக