Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 1 அக்டோபர், 2019

தாய்லாந்தில் சாலையில் பஸ் கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் 13 பேர் பலியாகினர்.

 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



தாய்லாந்தில் கோர விபத்து: லையில் பஸ் கவிழ்ந்து கல்லூரி மாணவர்கள் 13 பேர் பலி
 
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சிலர் பாங்காக்கின் புறநகர் பகுதியில் இருக்கும் ஒரு தொழிற்சாலையில் “இன்டர்ன்ஷிப்” என அழைக்கப்படும் தொழிற்முறை பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
 மாணவர்களின் பயிற்சி நிறைவடைந்ததை தொடர்ந்து, தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில் அவர்களுக்கு சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக கல்லூரி மாணவர்கள் 15 பேரும், தொழிற்சாலை அதிகாரிகள் 3 பேரும் ஒரு பஸ்சில் புறப்பட்டு சென்றனர்.
பஸ் அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிகெட்டு ஓடிய பஸ் சாலையில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் கல்லூரி மாணவர்கள் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.
மேலும் தொழிற்சாலை அதிகாரிகள் உள்பட 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!