இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சீனாவின் கிழக்கு மாகாணமான
ஜெஜியாங்கில் உள்ள நிங்காய் நகரில் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான
தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில், இங்குள்ள வீட்டு உபயோக
பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் மாலை தொழிலாளர்கள்
வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக
தொழிற்சாலைக்குள் தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ சற்று
நேரத்தில் தொழிற்சாலை முழுவதும் பரவியது.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த
தொழிலாளர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறியடித்தபடி தொழிற்சாலையை விட்டு வெளியே
ஓடினர். ஆனால் அதற்குள் தீ நாலாபுறமும் சூழ்ந்து கொண்டதால் பலர் உள்ளே
சிக்கிக்கொண்டனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள்
விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
எனினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி
19 தொழிலாளர்கள் உடல் கருகி உயிர் இழந்தனர். அதே சமயம் பலத்த தீக்காயங்களுடன் 8
பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று
வருகின்றனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து
விசாரிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக