இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சென்னை: தமிழகத்தில்
பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் காலை 6
மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை வெடிக்கலாம்.
தீபாவளியன்று
காலை 6 மணி முதல் 7 மணி வரையும், அதேபோல மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு
வெடிக்க வேண்டும். அதாவது இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்
என்றும், மற்ற நேரங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி பட்டாசு வெடித்தால் அபராதம் விதிக்கப்படும்
எனவும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல
தான் கடந்த ஆண்டும் (2018) தமிழக அரசு சார்பாக தீபாவளியன்று இரண்டு மணி நேரம்
மட்டும் பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே
நேற்று, மத்திய அரசு சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், சீன நாட்டு
பட்டாசுகளை விற்கவும் கூடாது, அதை வாங்கவும் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் விதியை மீறி சட்டவிரோத சீன நாட்டு பட்டாசுகளை இறக்குமதி செய்யவோ அல்லது
விற்கவோ கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. நாடு முழுவதும் காற்றின் தரம்
மோசமடைந்து வருவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது எனவும் கூறப்பட்டு
உள்ளது.
சுங்க
சட்டம் 1962 இன் கீழ் சீன நாட்டு பட்டாசுகளை இறக்குமதி செய்யவோ அல்லது விற்கவோ
கூடாது. மீறினால் அது தண்டனைக்குரிய குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக