இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram:
pudhiya.podiyan
Contact us :
oorkodangi@gmail.com
மோட்டோரோலா
நிறுவனம் விரைவில் முதல் பாப்-அப் செல்பீ கேமரா கொண்ட மோட்டோரோலா ஒன் ஹைப்பர்
ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது. குறிப்பாக இந்த மாதம்
இறுதியில் மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் இந்த சாதனத்தின் புகைப்படங்கள் மற்றும் பல்வேறு
அமசங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.
டிஸ்பிளே அம்சம்
விரைவில்
வெளிவரும் மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போன் ஆனது 6.39-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ்
டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1080 x
2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு
அம்சங்களுடன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாப்-அப்
செல்பீ கேமரா
இந்த
ஸ்மார்ட்போன் மாடல் 32-இன்ச் பாப்-அப் செல்பீ கேமரா கொண்டுள்ளது என்றும், ஏஐ
எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் அடக்கம் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8எம்பி டெப்த்
சென்சார் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது. குறிப்பாக மோட்டோரோலா ஒன் ஹைப்பர்
சாதனம் 4கே வீடியோ பதிவு செய்யும் ஆதரவுடன் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டோரோலா ஒன் ஹைப்பர் சிப்செட்
மோட்டோரோலா
ஒன் ஹைப்பர் சிப்செட் வசதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.
அதன்படி இந்த சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675சிப்செட் வசதியும்,
ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் இடம்பெறும் என அந்நிறுவனம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
128ஜிபி
உள்ளடக்க மெமரி
மோட்டோரோலா
ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி
ஆதரவுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு
ஆதரவு இவறறுள் அடக்கம்.
3500ஏம்ஏச் பேட்டரி
மோட்டோரோலா ஒன்
ஹைப்பர் ஸ்மார்ட்போனில் 3500ஏம்ஏச் பேட்டரி பொறுத்தப்படும்,பின்பு யுஎஸ்பி டைப்-சி
போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள்
அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் விலை சற்று உயர்வாக இருக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக