Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 22 அக்டோபர், 2019

ட்விட்டர் ரில் பேட்டரியை சேமிக்கும் புதிய தீம் அறிமுகம்; எனேபிள் செய்வது எப்படி?

 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


சுவாரசியமான விடயம் என்னவென்றால் இந்த புதிய தீம் ஆனது ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துபவர்களுக்கு அட்டகாசமான வேலை செய்கிறதாம்.

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஐஓஎஸ் டிவிட்டர் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ட்ராக் மோட் தீம் ஆனது சரியாக ஆறு மாதங்கள் கழித்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைத்துள்ளது.

டிவிட்டர் தளத்தின் இந்த டார்க் மோட் தீம் ஆனது ‘லைட்ஸ் அவுட்’ என்று அழைக்கப்படுகிறது. இதை வழக்கமான டார்க் மோட் என நினைத்துக்கொள்ள வேண்டாம், இது டார்க் மோட் தீம் ஆகும். இருப்பினும் தற்போது வரையிலாக, இது ஆண்ட்ராய்டு டிவிட்டர் ஆப்பின் ஆல்பா வெர்ஷன் வழியாக மட்டுமே அணுக கிடைக்கிறது.

இந்த லைட்ஸ் அவுட் தீம் ஆனது வழக்கமான டார்க் மோடை விட சற்று வித்தியாசமானது ஆகும். இந்த தீம் ஆனது OLED டிஸ்ப்ளேவை பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களுக்கு நன்றாக வேலை செய்கிறது.
 

இந்த லைட்ஸ் அவுட் அம்சம் ஆனது டிவிட்டர் ஆப்பின் யூஸர் இன்டர்பேஸை அடர் நீலம் அல்லது அடர் சாம்பல் நிறத்திற்கு மாற்றுவதற்கு பதிலாக அடர் கருப்பு நிறமாக மாற்றுகிறது. நிச்சயமாக இது அதிக பேட்டரியை சேமிக்க உதவும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

இதை எனேபிள் செய்வது எப்படி?

இந்த புதிய டார்க் மோட் தீமை எனேபிள் செய்ய விரும்புபவர்கள், டிவிட்டர் ஆப்பின் Settings and Privacy விருப்பத்திற்குள் நுழைந்து Display and sound பட்டனை கிளிக் செய்யவும்.

நீங்களொரு ஆல்பா வெர்ஷன் பயனராக இருப்பின் இதை கிளிக் செய்யவும் Dark mode Appearance மெனுவை நீங்கள் காண்பீர்கள். அதனுள் ‘Dim’ மற்றும் ‘Lights Out’ என்கிற இரண்டு விருப்பங்களை காண்பீர்கள். டார்க் மோடை எனேபிள் செய்ய ‘Lights Out’ என்கிற விருப்பத்தை தேர்வு செய்யவும், அவ்வளவுதான்!

  எந்த அப்டேட்டில் கிடைக்கிறது?

வெளியான தகவலின்படி ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான ட்விட்டரின் ஆல்பா வெர்ஷன் ஆன 8.19.0-alpha.03 வழியாக இந்த புதிய தீம் அணுக கிடைக்கிறது.

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த லைட்ஸ் அவுட் மோட் ஆனது ஒருவழியாக ஆண்ட்ராய்டுக்கு வந்துவிட்டாலும் கூட, 'ஆட்டோமெட்டிக்' டார்க் மோட் தீம் ஆனது எப்போது டிவிட்டர் தளத்திற்கு வரும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

ஆட்டோமெட்டிக் டார்க் மோட் ஆனது பயனர்களின் நேர மண்டலத்திற்கு ஏற்ப ஒளியிலிருந்து இருண்ட பயன்முறை மாற அனுமதிக்கும் ஒரு அம்சம் ஆகும். இது பயனர்களின் நேரத்தை அதிக அளவில் சேமிக்கும் என்பதில் சந்தேக வேண்டாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக