இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சாம்சங்
நிறுவனத்தின் கடந்த மூன்றாவது காலாண்டில் விற்பனை 56% குறைந்து 6.44 பில்லியன்
டாலர்களாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்த நிறுவனம் கூறியுள்ளது.
எனினும் இது முந்தைய மதிப்பீட்டை சற்று பரவாயில்லை என்றும் கூறப்படுகிறது.
கடந்த
ஆகஸ்ட் மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங்கின் புதிய கேலக்ஸி நோட் 10
ஸ்மார்ட்போன் விற்பனை சற்று வலுவடைந்துள்ளதாகவும், இதே மெமரி சிப் வணிகத்தில்
தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவதையடுத்து, இந்த வணிகத்தை குறைத்துக் கொண்டதாகவும்
கூறப்படுகிறது.
இந்த
நிலையில் இந்த மாதத்தில் நல்ல விற்பனையை கண்டுள்ள சாம்சங் நிறுவனம் மூன்றாவது
காலாண்டில் முந்தைய மாதங்களை விட சற்று மேம்படும் என்றும் கூறப்படுகிறது.
விற்பனை அதிகரிப்பு
சீனாவின்
உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி முக்கியத்துவத்தால், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான
காலாண்டில் அதன் இயக்க லாபம் 56% மாக குறைந்து, 6.44 பில்லியன் டாலர்களாக குறையும்
என்றும் கருதப்படுகிறது.
எனினும் இது முன்னர் கணித்திருந்த விற்பனை குறைப்பை விட
இது பரவாயில்லை என்றும் கூறப்படுகிறது. அதிலும் ஆகஸ்ட் 23ம் தேதியன்று
அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி 10 தொடரின் விற்பனை அமோகமாக உள்ளது என்றும்
இந்த நிறுவனம் கூறியுள்ளது.
வர்த்தகப்போரால்
பயன்
தென்
கொரியாவைச் சேர்ந்த மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சாம்சங் நிறுவனம், 5ஜி
தொலைபோசிகளிலேயே 1 மில்லியனுக்கும் அதிகமான விற்பனையை செய்துள்ளது என்றும், இது
இந்த நிறுவனத்தின் மிக வேகமான விற்பனை என்றும், ஹூவாயின் மீதான அமெரிக்கா தடையால்
இந்த விற்பனை அதிகரிப்பு என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்கா சீனா வர்த்தகபோரால்,
அமெரிக்கா சீனாவின் ஹூவாய் நிறுவனத்தின் மீது தடையை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் சாம்சங் பயனடைந்துள்ளது என்றும் ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
சாம்சங்
நிறுவனத்துக்கு பயனா?
அமெரிக்காவால்
தடை செய்யப்பட்ட ஹூவாய் நிறுவனத்தால் ஒரு புறம் சாம்சங் நிறுவனத்துக்கு நன்மையே
என்றாலும், மறுபுறம் சாம்சங் நிறுவனத்தின் வருவாய் சீனாவினால் குறைந்து வருகிறது
என்பதும் உண்மையே. ஒரு புறம் சீனா தனது உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க, பல
ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து வருகிறது,
இது தற்போது சாம்சங் நிறுவனத்துக்கு
போட்டியாகவே அமைந்துள்ளது என்றும் கூறலாம். மேலும் சாம்சங் நிறுவனத்தின் மெமரி கார்டுகளை
அதிகளவில் வாங்குபவர் ஹூவாய் நிறுவனமே. இந்த நிலையில் தற்போது அதற்கும் ஆப்பு
வைக்கும் விதமாக சீனா உள்நாட்டு உற்பத்தியில் விரிவாக்கம் செய்து வருவதால் சரிவு
என்பது நிச்சயம் தான் என்றாலும், அதிகளவிலான வீழ்ச்சி தற்போதைக்கு குறையும்
என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மூன்றாவது காலாண்டில் வருவாய்
மூன்றாவது
காலாண்டில் வருவாய் 5.3% வீழ்ச்சி கண்டு 62 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது
என்றும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் மொபைல்
வணிகமானது, அதன் மெமரி சிப் வணிகத்தினை விட சிறியது என்றும் ஆய்வாளர் பார்க்
கூறியுள்ளார். இந்த நிலையில் மொத்த லாபத்தில் 20% ஸ்மார்ட்போன் விற்பனையில்
இருந்து பெற்றுள்ளது என்றும், எனினும் சாம்சங் விரைவில் அனைத்து சிக்கல்களையும்
சரிசெய்யும் திறன் கொண்டுள்ளது என்றும், விரைவில் மீண்டு வரும் பார்க்
கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக