Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 9 அக்டோபர், 2019

சொத்துக்களை அடமானம் வைத்து முதலீடு..! Oyo சிஇஓ அதிரடி..!

 Image result for ஓயோ

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


ஓயோ (Oyo) உலகின் இரண்டாவது பெரிய ஹோட்டல் செயின் நிறுவனம். உலகம் முழுக்க சுமார் 35,000 ஹோட்டல்கள் மற்றும் 1,25,000 சுற்றுலா விடுதிகள் வழியாக சுமார் 12 லட்சம் அறைகளை நிர்வாகத்தில் வைத்து இருக்கிறார்களாம்.
இதை ஓயோ (Oyo) நிறுவனமே சொல்லி இருக்கிறார்கள். அதோடு உலகம் முழுக்க உள்ள 80 நாடுகளில் சுமார் 800 நகரங்களில், Oyo Homes, Belvilla, Danland and Dancenter என பல பிராண்டின் பெயரில் ஹோட்டல் அறைகள் மற்றும் சுற்றுலா விடுதிகளை நிர்வகித்து வருகிறார்களாம்.
ஓ... நம் நாட்டில் தொடங்கப்பட்ட ஓயோ (Oyo)நிறுவனம் இந்த அளவுக்கு வளர்ந்து விட்டதா..? சரி வேறு என்ன பிரச்னை என்று கேட்கிறீர்களா..? வாருங்கள் பார்ப்போம்

1.5 பில்லியன் டாலர் முதலீடு

ஓயோ (Oyo) ஹோட்டல்ஸ் அண்ட் ஹோம்ஸ் நிறுவனம் தற்போது 1.5 பில்லியன் டாலர் முதலீட்டை பெறப் போவதாகச் சொல்லி இருக்கிறார்கள். அதில் 700 மில்லியன் டாலர் முதலீட்டை ஓயோ நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி (சிஇஓ) ரித்தேஷ் அகர்வாலிடம் இருந்தே பெறப் போகிறார்களாம். மீதமுள்ள 800 மில்லியன் டாலரை ஏற்கனவே ஓயோ நிறுவனத்தில் முதலீடு செய்து வரும் முதலீட்டாளர்களிடமே பேசி திரட்டப் போகிறார்களாம்.

ஏன் இந்த முதலீடு

இந்த 1.5 பில்லியன் டாலர் முதலீட்டை வைத்து ஓயோ நிறுவனம், அமெரிக்காவில் இருக்கும் தன் வியாபாரத்தை வளர்க்கப் போகிறார்களாம். அமெரிக்காவில், ஓயோ நிறுவனம் தற்போது சுமார் 21 மாகாணங்களில், 60 முக்கிய நகரங்களில் வியாபாரம் பார்த்து வருகிறார்களாம். ஒட்டு மொத்தமாக சுமார் 7,500 ஹோட்டல் மற்றும் சுற்றுலா விடுதி அறைகள் ஓயோ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறதாம்.

சொத்து விற்பனை

ஓயோவின் முதன்மைச் செயல் அதிகாரி ரித்தேஷ் அகர்வால் நேரடியாக தன் ஓயோ நிறுவனத்தில் முதலீடு செய்யாமல், சாஃப்ட் பேங்கின் சில நிறுவனத்தில் முதலீடு செய்யப் போகிறாராம். அந்த முதலீட்டுப் பணம் தான் மீண்டும் ஓயோ நிறுவனத்துக்கு சாஃப்ட் பேங்க் வழியாக முதலீடாக வரப் போகிறதாம். ஓயோ நிறுவனத்தின் சி இ ஓ-விடம் 700 மில்லியன் டாலர் எப்படி எனக் கேள்வி எழுகிறதா...?

700 மில்லியன் எப்படி

ஓயோ நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி, ரித்தேஷ் அகர்வால், தன் கை வசம் இருக்கும் ஓயோ நிறுவனத்தின் பங்குகளை எல்லாம் பணையம் வைத்து சுமார் 2.2 பில்லியன் டாலர் வரை கடன் வாங்கப் போகிறார். இந்த கடன் வாங்கும் தொகையில் இருந்து தான் 700 மில்லியன் டாலரை சாஃப்ட் பேங்க் வழியாக ஓயோ நிறுவனத்தில் முதலீடு செய்யப் போகிறார்கள். அப்படி என்றால் மீதி 1.5 பில்லியன் டாலர்..? என்ன செய்யப் போகிறார்

1.5 பில்லியன் டாலர்

Lightspeed Venture Partners மற்றும் Sequoia Capital ஆகிய இரண்டு ஃபண்டிங் நிறுவனங்களும் ஓயோ நிறுவனத்தில் பங்குகளை வாங்கி முதலீடு செய்து இருக்கிறார்கள். ரித்தேஷ் அகர்வால், தன் பங்குகளை அடமானம் வைத்து திரட்டும் 2.2 பில்லியன் டாலர் கடனில், சுமார் 1.5 பில்லியன் டாலரை, மேலே சொன்ன இரண்டு நிறுவனங்கள் வைத்திருக்கும் ஓயோ (Oyo)நிறுவன பங்குகளை மீண்டும் தானே வாங்கிக் கொள்ளப் பயன்படுத்தப் போகிறாராம்.

என்ன நன்மை

ஓயோ நிறுவனத்தில் ஏற்கனவே முதலீடு செய்திருந்த Lightspeed Venture Partners மற்றும் Sequoia Capital ஆகிய ஃபண்டிங் நிறுவனத்திடம் இருந்து மீண்டும் பங்குகளை வாங்குவதால், இனி ரித்தேஷ் அகர்வாலுக்கு ஓயோ நிறுவனத்தில் வைத்திருக்கும் பங்குகளின் அளவு 10 சதவிகிதத்தில் இருந்து சுமார் 30 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்கிறார்கள் ஓயோவின் இந்த முதலீடு மற்றும் கடன் விவரங்கள் தெரிந்தவர்கள்.

சுருக்கமாக

1. ஓயோ நிறுவனத்தின் சிஇஓ ரித்தேஷ் அகர்வால் 2.2 பில்லியன் டாலர் கடன் வாங்குகிறார்.
2. அதில் 1.5 பில்லியன் டாலரை வைத்து 2 ஃபண்டிங் நிறுவனங்களிடம் இருக்கும் ஓயோ நிறுவன பங்குகளை திரும்ப வாங்கிக் கொள்கிறார்.
3. மீதமுள்ள 700 மில்லியன் டாலரைத் சாஃப்ட் பேங்க் நிறுவனத்தில் முதலீடு செய்து, அதை மீண்டும் ஓயோ நிறுவனத்துக்கே முதலீடாக கொண்டு வரப் போகிறார்
4. ஓயோ நிறுவனத்தின் மொத்த 1.5 பில்லியன் டாலர் முதலீட்டில் 700 மில்லியன் டாலர் போக மீதமுள்ள 800 மில்லியன் டாலரை, ஏற்கனவே ஒயோவில் முதலீடு செய்திருக்கும் ஃபண்டிங் நிறுவனங்களிடம் இருந்தே திரட்டப் போகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக