Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 3 அக்டோபர், 2019

அருள்மிகு சட்டைநாதசுவாமி கோவில்

Image result for அருள்மிகு சட்டைநாதர் திருக்கோவில் சீர்காழி
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




சீர்காழி பிரமபுரீஸ்வரர், சட்டைநாதசுவாமி கோவில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் நாகை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் சம்பந்தரின் அவதாரத் தலம் எனப்படுகிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 14 வது தேவாரத்தலம் ஆகும்.

மூலவர் : சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர்

உற்சவர் : சோமாஸ்கந்தர்

அம்மன் : பெரியநாயகி, திருநிலைநாயகி

தல விருட்சம் : பாரிஜாதம், பவளமல்லி

தீர்த்தம் : 22 தீர்த்தங்கள்

ஆகமம் : பஞ்சரத்திர ஆகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : பிரம்மபுரம், சீர்காழி

ஊர் : சீர்காழி

மாவட்டம் : நாகப்பட்டினம்

தல வரலாறு :

சமயக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர், சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர்- பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாகப் பிறந்தார். இவரை முருகனின் அம்சம் என்றும், இளைய பிள்ளையார் என்றும் வழங்குவர்.

இவர் தனது மூன்றாவது வயதில் தந்தையுடன் இத்தலத்திலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராட வந்தார். தந்தை இவரை குளக்கரையில் உட்காரவைத்து விட்டு, தான் மட்டும் நீராடச் சென்றார். அப்போது சம்பந்தருக்கு பசி ஏற்பட, 'அம்மா! அப்பா!" என அழுதார். இவரது அழுகுரல் கேட்ட சிவன், பார்வதியை நோக்கி குழந்தையின் பசிக்கு பால் கொடுக்குமாறு கூறினார். அதன்படி சிவனுடன் சம்பந்தருக்கு தரிசனம் தந்து மெய்ஞானம் கலந்த பாலை புகட்டினாள் அம்பிகை. பசி தீர்ந்த சம்பந்தர் வாயில் பால் வழிய அமர்ந்து விட்டார். குளித்து விட்டு வந்த தந்தை, 'பால் கொடுத்தது யார்? யாராவது ஏதாவது கொடுத்தால் வாங்கிச் சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா? அபச்சாரம் செய்து விட்டாயே," எனச்சொல்லி குச்சியால் சம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார்.

அப்போது சம்பந்தர், சிவனும் பார்வதியும் தரிசனம் தந்த திசையை காட்டி, 'தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடி காடுடைய சுடலைப்பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன் ஏடுடைய மலரான் உனை நாட்பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரம்மாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே" என்று பாடினார். தந்தை அசந்து போனார்.

தன் குழந்தைக்கு இறைவனே காட்சி தந்து பாலூட்டியது அறிந்து பரவசப்பட்டார். இத்தலத்தைபற்றி சம்பந்தர் 67 பதிகங்களும், திருநாவுக்கரசர் 3 பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

தலச்சிறப்பு :

இத்திருத்தலம் தேவாரப்பாடல் பெற்ற 274 தலங்களில் 14வது தேவாரத்தலம் ஆகும். சட்டைநாதர் சுவாமி திருத்தலம் நகர் நடுவில் நாற்புறமும் கோபுரங்களுடனே உயர்ந்த திருச்சுற்று மிதில்களோடு விளங்குகின்றது.

அதனுள் பிரம்ம புரீசுவரருக்கும், திருநிலை நாயகிக்கும், திருஞான சம்பந்தருக்கும் தனித்தனியே ஆலயங்கள் உள்ளன. இவை கிழக்குப்பார்த்த சன்னதிகளே, சுவாமிகோவில் மகா மண்டபத்தில் திருஞானசம்பந்தர் உற்சவ மூர்த்தியாக எழுந்தருளி இருக்கிறார்.

வடக்கு உட்பிரகாரத்தில் ஸ்ரீமுத்து சட்டைநாதரும், தெற்கு உட்பிரகாரத்தில் திருமாளிகைப் பத்தியில் அறுபத்து மூவர்களும் உள்ளனர். இவைகள் பன்னீருகத்தும் விளங்கிவந்த பெயர்களா மென்பது 'வசையில் காட்சி" என்னும் திருக்கழுமல மும்மணிக் கோவை 10 வது பாடலால் விளங்கும் அங்கேயே சட்டைநாதர் பலிபீடமும் இருக்கின்றது.

மேலைப் பிரகாரத்திலும் வடக்குப் பிரகாரத்தில் மேலே மலைக்குப் போகப் படிக்கட்டுகள் அமைந்திருக்கின்றன. சுவாமி கோவிலை ஒட்டிக் கட்டுமலையில் இருகது புள்ளினம் ஏந்தும் ஐதீகத்தில் ஸ்ரீஉமாமகேசுவரர் பெரிய உருவத்துடன் எழுந்தருளி இருக்கின்றார். இவ்விரு முர்த்தங்களும் சுதையாலானவை.

ஸ்ரீசட்டைநாதர் சுவாமி மிகவும் மூர்த்திகரம் மிக்கவர். இவர் திருநாமங்கொண்டே இத்தேவஸ்தானம் விளங்குகிறது. இம்மலை திருத்தோணிமலை எனப் பெயர்பெறும். சுவாமி கோவில் வெளிப்பிரகாரம் வடமேற்கு மூலையில் திரு ஞானசம்பந்தர் திருக்கோவில் விளங்குகிறது. அதற்கு அணித்தாக ஈசானத்தில் அம்மையின் ஆலயம் உள்ளது. அம்மை சன்னதியில் பிரம்ம தீர்த்தம் நாற்புரமும் கருங்கற் படிகட்டுகளுடன் விளங்குகிறது. சுவாமி சன்னதியில் மடைப்பள்ளியும் தேவஸ்தான அலுவலகமும் தனித்தனியே அமைந்திருக்கின்றன.

இத்தலத்தில 47 கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டில் இத்தலம் இராஜராஜவன் நாட்டுத் திருக்கழுமல நாட்டுப் பிரமதேயம் திருக்கழுமலம் என்று குறிக்கப் பெற்றுள்ளது. பிரம்மபுரீசுவரர் திருக்கழுமலமுடையார் என்றும், தோணியப்பர் திருத்தோணிபுரம் உடையார் என்றும், தோணியப்பர் பக்கத்திலுள்ள அம்மை பெரியநாச்சியார் என்றும், திருஞானசம்பந்த பெருமான் ஆளுடைய பிள்ளையார் என்றும் குறிக்கப் பெறுகின்றார்கள்.

விழாக்கள் :

இவ்வாலயத்தில் நாள்தோறும் ஆறு காலப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. இதில் இரண்டாம் திருவிழா, திருமுலைப்பால் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. திருநிலை நாயகிக்கு ஆடிப்பூர உற்சவமும், நவராத்திரி உற்சவமும் நடைபெறுகின்றன.

சட்டை நாதருக்கு வெள்ளிக் கிழமைதோறும் நள்ளிரவில் நடைபெறும் பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவருக்கு புனுகுச் சட்டம் சார்த்தி வடை, பாயசம் படைக்கப்படுகிறது.

பிராத்தனை :

வழக்குகளில் பிரச்சனை உள்ளவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு. குழந்தை இல்லாதவர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

நேர்த்திக்கடன் :

சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோவில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக