இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பொது
இடங்களில் நடக்கும் கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களை கண்காணிக்க ஒரு புதிய
யுக்தியை தொடங்கியுள்ளனர் காசியாபாத் சிட்டி போலீசார்.
குற்றங்களை தடுக்க ''தேஜஸ்
யூனிட்''... காவலர்கள் கையாளும் புதிய யுக்தி..!
நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில்
ஏற்படும் குற்ற சம்பவங்களை தடுக்க காவலர்கள் ரோந்து [பணியில் ஈடுபடுவது வழக்கம்.
இதற்கான முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும்
க்ரைம் நடவடிக்கை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் உள்ள போலீசார் இதற்காக ஒரு சிறிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதாவது ''தேஜஸ் யூனிட்'' என்ற ஒரு காவலர் அணியை தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்கள் 24 மணி நேரமும் சிட்டியை சுற்றி ரோந்தில் ஈடுபடுவார்கள்.
அதற்காக இவர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் காவல் துறை என்ற அடையாளம் இருக்காது. பொதுவாக மப்டியில் உள்ள சில போலீசார் காக்கி ஷூ அணிவது வழக்கம். மேலும் டியூட்டி முடிந்தவுடன் இயல்பு நிலைக்கு மாறிவிடுவர். ஆனால் இந்த குழுவானது எந்த நேரத்திலும் தங்களை ஒரு போலீசாக காட்டிக்கொள்ளாது.
அரசாங்கம் கொடுத்துள்ள ரோந்து வண்டியிலும் கூட எந்தவிதமான ஸ்டிக்கர்களும் இடம்பெறாது என கூறுகிறார்கள். இந்த குழு செயல்பட தொடங்கியதில் இருந்து குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கிறார்கள். மக்களோடு மக்களாக செயல்படும் இவர்கள் செயின் அறுப்பு சம்பவம், வாகன திருட்டு, ஏடிஎம் கொள்ளை போன்ற குற்ற செயல்களை அந்த நேரத்திலேயே தடுத்து குற்றவாளிகளை பிடிப்பதே தேஜஸ் யூனிட்டின் திட்டம் என்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக