இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
விழுப்புரத்தில்
திருடுவதற்குச் சென்ற வீட்டின் மொட்டை மாடியில் ஊஞ்சலாடிய திருடனை சிசிடிவி
கேமராப் பதிவுகள் மூலம் அடையாளம் கண்டு கைது செய்திருக்கிறார்கள் காவல்துறையினர்.
விழுப்புரம் சுதாகர் நகரைச் சேர்ந்த
அரசுப் பள்ளி ஆசிரியர் இளங்கோ. இவர் தங்கள் பகுதியில் அடிக்கடி நடக்கும்
திருட்டுக்களைக் கண்டுபிடிப்பதற்காக தனது வீட்டைச் சுற்றி 6 இடங்களில் சிசிடிவி
கேமராக்களைப் பொருத்தியிருந்தார்.
கடந்த
மாதம் 18-ம் தேதி பக்கத்து வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடு
போனதைக் கேள்விப்பட்ட இவர், தனது வீட்டின் சிசிடிவி வீடியோ காட்சிகளை ஆய்வு
செய்தார்.
அப்போது
ஆசிரியர் இளங்கோவின் வீட்டில் தரைத் தளத்தில் நிற்க வைக்கப்பட்டிருந்த இருசக்கர
வாகனத்தில் அந்தத் திருடன் எதையோ கழற்ற முயற்சி செய்வது தெரியவந்தது.
சச்சிதானந்தம் |
பின்னர்,
சிறிதுநேரம் கழித்து மொட்டை மாடிக்கு வந்து தனது ஸ்மார்ட்போன் டார்ச்லைட் உதவியால்
எதையோ தேடுவதும், பின் அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு ஹாயாக ஓய்வெடுப்பதுமாக
பதிவான காட்சிகளால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர் இளங்கோ, அதுகுறித்து விழுப்புரம்
தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதனடிப்படையில்
தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தேடிவந்தனர்.
இந்நிலையில்தான், சம்பந்தப்பட்ட அந்த நபர் விழுப்புரம் வி.மருதூர் பகுதியைச்
சேர்ந்த சச்சிதானந்தம் (35) என்பதைக் கண்டுபிடித்து அவரைக் கைது
செய்திருக்கின்றனர் காவல்துறையினர். இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடி விற்பதை
வழக்கமாகக் கொண்டிருந்த சச்சிதானந்தம், சம்பவத்தன்று ஆசிரியர் இளங்கோ வீட்டில்
இருந்த இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடுவதற்காகச் சென்றிருக்கிறார்.
சச்சிதானந்தம் |
எதுவும் கிடைக்கவில்லை என்றவுடன் தான் அங்கிருந்த ஊஞ்சலில் ஆடி ரிலாக்ஸ் செய்திருக்கிறார். வெளியூருக்குச் செல்வதற்காக சச்சிதானந்தம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது அவரைக் கைது செய்திருக்கிறது காவல்துறை.
மேலும், `திருடுவதற்குச் சென்ற நீ ஏன் ஊஞ்சல் ஆடினாய்?' என்று சச்சிதானந்தத்திடம் காவல்துறையினர் கேட்டபோது, ``எனக்கு சிறு வயது ஞாபகம் வந்துவிட்டது. சிறு வயதில் மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடியிருக்கிறேன். ஊஞ்சலைப் பார்த்ததும் அந்த ஞாபகம் வந்துவிட்டதால் அதில் அமர்ந்து சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்தேன்” என்று கூறியிருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக