இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சிற்றூர்
எனும் ஊரில் கணவன், மனைவி இருவரும் வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் மனைவி நீண்ட
தொலைவில் இருந்து இரண்டு குடம் தண்ணீர் எடுத்துவந்து, வீட்டின் கதவை லேசாக திறந்து
முன்னாடியே இரண்டு குடத்தையும் வைத்துவிட்டு, அடுத்த இரண்டுகுடம் தண்ணீரை கொண்டுவர
சென்றுவிட்டாள்.
அந்தநேரம்
அவளின் கணவன் மதிய வேளை சாப்பாட்டிற்காக வீட்டிற்கு வருகிறான். நல்ல வெயில்.
பசிவேறு அவனுக்கு. வெயிலில் வந்ததால் உள்ளே இருந்த குடத்தை கவனிக்காமல்
தட்டிவிட்டு கீழே விழுந்து விடுகிறான். இரண்டுகுடம் தண்ணீரும் கொட்டிவிடுகிறது.
அப்போது
அவனுக்கு கடுமையான கோபம் வந்து விடுகிறது. கொஞ்சமாவுது அறிவு இருக்கா? இப்படியா
முன்னாடியே தண்ணீர் குடத்தை வைப்பது? வரட்டும் பேசிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே
இன்னும் இரண்டு குடத்தோடு அவன் மனைவி வருகிறாள்.
தூக்கிவந்த
குடத்தைக்கூட இறக்கவிடாமல் அவளைத் திட்டிக் கொண்டிருந்தான். உன்னையெல்லாம்
உங்கவீட்டில எப்படித்தான் பெத்து, வளர்த்தாங்களோ! உனக்கெல்லாம் மூளையே இல்லையா?
என்றபடி கண்டபடி திட்டினான். இதைக்கேட்ட அவளுக்கு கோபம் தலைக்கேறியது. நான்
எவ்வளவு கஷ்டப்பட்டு எவ்வளவு தூரத்திலிருந்து இந்த தண்ணிய கொண்டுவரேன் தெரியுமா?
கண்ணை
எங்க வச்சுக்கிட்டு போனீங்க என்று அவள் கேட்க, இப்படியே ஒருவருக்கொருவர் பேசி
வார்த்தை பெரிதாகி, அவன் அவளை அறைந்துவிடுகிறான். உடனே அவள் இனி ஒரு நிமிஷம்கூட
உன்கூட வாழமாட்டேன் என்று சொல்லிவிட்டு அவளின் அம்மா வீட்டிற்கு சென்று
விடுகிறாள்.
இப்போது
நாம் பார்த்தது கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட ஒரு சின்ன பிரச்சனையால், எவ்வளவு பெரிய
தவறான முடிவை எடுத்து அவர்கள் பிரியும் நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது என்பதைக்
கூறும் கதை.
ஆனால்,
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். இந்தக் கதையின் முடிவு இப்படி இருந்தால் எப்படி
இருக்கும்? வாருங்கள் பார்ப்போம்...
வீட்டிற்கு
வரும் கணவன் குடம் தடுக்கி விழுந்து, தண்ணீரை கொட்டிவிட்டான். உடனே அவன், அடடா
இப்படி கவனிக்காமல் இரண்டுகுடத் தண்ணீரையும் கொட்டிவிட்டோமே! பாவம் அவள். தண்ணீர்
எவ்வளவு தூரத்தில் இருந்து கொண்டு வருகிறாள்? அவள் வந்தவுடன் முதல் வேலையாக
அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பிறகு நாமே சென்று இரண்டுகுடம் தண்ணீரையும்
எடுத்து வரவேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கும்போது அவள் தண்ணீரோடு வருகிறாள்.
அவள்
வந்ததும் ஓடிப்போய் அந்தக் குடங்களை இறக்கியவாறு நடந்ததைச் சொல்லி, நான்
கவனிக்காமல் குடத்தின் மேல் விழுந்து தண்ணீரைக் கொட்டிவிட்டேன். நீ எவ்வளவு
தூரத்தில் இருந்து இந்த தண்ணீரைக் கொண்டு வருகிறாய்! பாவம் நீ. என்னை
மன்னித்துவிடு. நான் போய் தண்ணீர் கொண்டு வருகிறேன் என்று கூறுகிறான்.
உடனே
அவள் பதறுகிறாள். ஐயையோ விழுந்துட்டீங்களா? உங்களுக்கு ஒன்றும் ஆகலையே? தண்ணீர்
போனா போகட்டுங்க. நீங்க தெரியாமத்தானே! பண்ணீங்க. அங்க தண்ணியவச்சது என்னோட
தப்புதான். நான் போய் எடுத்துக்கொள்கிறேன் என்று கூறுகிறாள்.
பிறகு
கணவரிடம் வாங்க சாப்பிடலாம். நீங்க நல்லா பசியோடு வந்திருப்பீங்க பாவம் என்று
கூறினாள். (அவள் திட்டியிருந்தால்கூட அவன் மனம் வருந்தி இருக்கமாட்டான். இப்போது
அவன் அப்படியே நெகிழ்ந்து போகிறான். அதன்பின் அவள் மேல் அவனுக்கு இன்னும் அளவு
கடந்த பாசம் உண்டானது.
இப்படித்தான்
நம் வாழ்க்கையும்! கணவனோ, மனைவியோ தெரிந்து யாரும் தப்பு செய்வதில்லை. இருவரில்
ஒருவர் ஒருபடி இறங்கினால், மற்றவர் கண்டிப்பாக பத்துப்படி இறங்கி வருவார்.
புரிதலும், விட்டுக்கொடுத்தலும் இருந்தால் மட்டுமே வாழ்க்கையை சிறப்பாக
வாழமுடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக