Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 22 அக்டோபர், 2019

இது தான் உலகநியதி!!


Image result for இதுதான் உலக நியதி!!
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com





ஒரு கிராமத்தில் ராமன் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது. வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு பத்து கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் நகரத்திற்கு நடந்து சென்றே ஒரு மளிகை கடையில் மட்டும் விற்றுவிட்டு வருவது வழக்கமாக கொண்டிருந்தார்.

முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார். ராமன் கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமானது. இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம் சம்பாதித்து விடுவார்.

பல வருடமாக ராமன் முருங்கைக்காய் கொண்டு வருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை. ராமன் சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார். காரணம் ராமனின் நேர்மையும், நாணயமும் எல்லோரும் அறிந்தது.

இதுபோல் ஒரு நாள் ராமன் பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்சென்றார். சிறிது நேரத்தில் பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாக வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்டார். உடனே அவருக்காக மளிகை கடைக்காரர் எடைபோட்டார். அதில் ஒன்பது கிலோ மட்டுமே இருந்தது.

அன்று முழுவதும் மளிகை கடைக்காரருக்கு தூக்கமே வரவில்லை. ராமன் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம். இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே. இத்தனை வருடங்களாக இப்படி முட்டாள்தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே. அடுத்த முறை ராமன் வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார்.

நான்கு நாட்கள் கழித்து ராமன் மிகவும் சந்தோஷமாக மளிகை கடைக்கு வந்தார். நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார். கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்று எத்தனை கிலோ என்று கடைக்காரர் கேட்டார். ராமனும் பத்து கிலோ என்றார். அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்த்த போது ஒன்பது கிலோ தான் இருந்தது. அவருக்கு வந்த கோபத்தில் மளிகை கடைக்காரர் பளார், பளார் என ராமனை கன்னத்தில் அறைந்தார்.

இத்தனை வருடமாக இப்படித்தான் ஏமாத்திட்டு இருக்கியா? கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கனு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன். இப்படி துரோகம் பண்ணிட்டியே என திட்டினார். நிலைகுலைந்து போன ராமன், ஐயா.. என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவிற்கு என்கிட்ட காசு இல்ல. ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டுவருவேன்.

இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா என்று காலை பிடித்து அழுதார். மளிகை கடைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது. தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை அப்போது உணர்ந்தார். இத்தனை வருடங்களாக ராமனை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும், அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டுதான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது!.

இது தான் உலகநியதி! நாம் எதை செய்கிறோமோ? அதுதான் நமக்கு திரும்ப வரும். நல்லதை செய்தால் நல்லது வரும், தீமையை செய்தால் தீமை வரும். அவற்றை வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம். ஆனால் நிச்சயமாக வரும்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக