இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பொதுவாக
சூரியன் சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் இருப்பார். மேஷ ராசி சூரியனுக்கு உச்ச
வீடு, சூரியன் பலமாக இருக்கும் காலம். அதனால் தான் சித்திரை மாதத்தில் வெயில்
கொளுத்துகிறது. வைகாசி மாதத்தில் ரிஷப ராசியில் இருப்பார். ரிஷப ராசி சந்திரன்
உச்சம் அடையும் வீடு, அதனால் அவ்விடத்தில் வரும் சூரியன் வசந்தத்தை அளிக்கிறார்.
இதே போல, ஆனி மாதத்தில் மிதுனத்தில் இருப்பார்.
ஆடி
மாதத்தில் கடகத்தில் இருப்பார். கடகம் சந்திரனின் வீடு, சந்திரனுக்கு அம்பாள் தான்
அதிதேவதை அந்த விதத்தில் தான் ஆடி மாதத்தில் அம்மன் விழாக்கள் நிறைய நடக்கின்றன.
ஆவணி மாதத்தில் சிம்மத்தில் சூரியன் ஆட்சியாக இருப்பார். அதில் இருந்து பண்டிகை
காலங்கள் வரிசையாக ஆரம்பம் ஆகிறது. புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் இருப்பார்.
கன்னி
ராசி புதனின் வீடு. புதனின் அதிதேவதை விஷ்ணு அதனால் தான் அந்தக் காலத்தில்
பெருமாள் கோயில்களில் உற்சவங்கள் நடக்கிறது. ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியில்
சூரியன் இருப்பார். துலா ராசி சூரியனுக்கு நீச்ச வீடு அதனால் தான் அந்த மாதத்தில்
சூரியனின் வெப்பம் சற்றே தணிந்து இருக்கும். கார்த்திகை மாதத்தில் விருச்சிக
ராசியில் இருப்பார்.
விருச்சிக
ராசியின் அதிபதி செவ்வாய், செவ்வாயின் அதிபதி ஸ்ரீ முருகப் பெருமான். அதனால் தான்
அந்த மாதத்தில் முருகனுக்கு விசேஷம் நடக்கிறது . மார்கழி மாதத்தில் தனுசு ராசியில்
இருப்பார். தனுசு குருவின் வீடு. அதனால் அந்த மாதத்தில் தெய்வ காரியங்களுக்கு
மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும். திருமணம் போன்ற சுப காரியங்கள்
அக்காலத்தில் கூடாது.
தை
மாதத்தில் மகரத்தில் இருப்பார். அது தான் மகர சங்கராந்தி. மாசி மாதத்தில் கும்ப
ராசியில் இருப்பார். அதாவது சனியின் வீட்டில் பங்குனி மாதத்தில் மீன ராசியில்
இருப்பார். அது குருவின் வீடு, மீண்டும் தெய்வ காரியங்களுக்கு முக்கியத்துவம்
அளிக்கப்படும் எனினும் சுக்கிரன் உச்சம் பெரும் வீடும் இது தான் என்பதால் திருமணம்
போன்ற சுப காரியங்களுக்கு இந்தக் காலத்தில் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக