இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இந்திய தொலைத்தொடர்பு துறையில் பழமையான நிறுவனமான
பி.எஸ்.என்.எல் நிறுவனம் நீண்ட இழுபறிக்கு பின் தற்போது 4ஜி சேவையை வழங்க உள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.
ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் 4ஜி துறையில்
கடுமையனாக போட்டி போட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றிற்கு போட்டியாக விரைவில்
பி.எஸ்.என்.எல் நிறுவனமும் 4ஜி சேவையை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியோமி, விவோ, நோக்கியா, சோனி போன்ற பல்வேறு நிறுவனங்களின் 30 க்கும் மேற்பட்ட
போன்களில் இதன் சோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும், அலைக்கற்றை தொடர்பான பணிகளும்
நடந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே விரைவில் வாடிக்கையாளர்களின் 3ஜி சிம்களை 4ஜி ஆக
மாற்றவும், அதற்கான இலவச சிம் கார்டுகளை வழங்கவும் திட்டமிடப்பட்டு வருவதாக
தெரிகிறது. புதிதாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4ஜி தொழில்நுட்பத்தில் காலெடுத்து
வைப்பதால் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா வழக்கும் வகையில்
திட்டங்கள் வகுக்கப்படும் என கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக