இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
வேட்டங்குடி
பறவைகள் சரணாலயம் சிவகங்கையில் இருந்து ஏறத்தாழ 41கி.மீ தொலைவிலும்,
காரைக்குடியில் இருந்து ஏறத்தாழ 34கி.மீ தொலைவிலும், மதுரையில் இருந்து ஏறத்தாழ
45கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள
கொள்ளுக்குடிப்பட்டி கண்மாயில், பல ஏக்கர் பரப்பளவில் வேட்டங்குடி பறவைகள்
சரணாலயம் அமைந்துள்ளது.
பசுமையாக இயற்கை எழிலுடன் காணப்படும் இந்த
சரணாலயம் குளிர்காலங்களில் இடம் பெயரும் பறவைகளுக்கான இயற்கை வாழ்விடமாகும்.
உண்ணி
கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சமர்பல் நிற நாரை, இரவு நாரை, பாம்புதாரா,
கருநீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நத்தை கொத்தி நாரை போன்ற பல வகையான பறவைகள்
மட்டுமல்லாமல், வெளிநாட்டுப் பறவைகள் மழைக்காலத்தில் இங்கு அடைகாத்தலுக்கு ஏற்ற
பாதுகாப்பான இடமாக உள்ளது.
இதமான தட்ப வெப்பநிலை காலங்களில் ஆயிரக்கணக்கான
பறவைகளை இவ்விடம் ஈர்க்கிறது.
விதவிதமான பறவைகள், காலையில் இரை தேடிச் சென்று,
மாலையில் சரணாலயத்தில் வந்து கூடுகட்டி, இனப்பெருக்கம் செய்கின்றன.
இக்கிராம மக்கள், தீபாவளி மட்டுமல்லாது எந்த
நிகழ்ச்சிக்கும் வெடி வெடிப்பதில்லை. பறவைகளுக்காகத் தங்களின் மகிழ்ச்சியைத்
தியாகம் செய்து வருகிறார்கள்.
இவர்களைப்
பாராட்டி, வனத்துறை ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு இனிப்புகளை வழங்கி வருகிறது.
எப்படி செல்வது?
சிவகங்கையில்
இருந்து காரைக்குடிக்கு பேருந்து வசதிகள் உள்ளது.
காரைக்குடி
மற்றும் மதுரையில் இருந்து பேருந்து மூலமாக வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தை
அடையலாம்.
எப்போது செல்வது?
அனைத்து
காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
சிவகங்கை,
காரைக்குடி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள்
உள்ளன.
இதர சுற்றுலாத்தலங்கள் :
கண்ணதாசன்
நினைவகம்.
ஆயிரம் ஜன்னல் வீடு.
ஆத்தங்குடி.
செட்டிநாடு அரண்மனை.
கானாடுகாத்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக