இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பிரம்மதேவரும் போருக்கான காரணம்
சந்திரன் என்பதை அறிந்து அவரை அழைத்து தாராதேவியை குருதேவருடன் அனுப்பும்படி
கூறினார்.
அதற்கு சந்திரன் நான் தாராதேவியை
கட்டாயப்படுத்தி என்னுடன் வைத்திருக்கவில்லை. அவர்கள் விருப்பப்பட்டால்
செல்லட்டும் நான் அவர்களை தடுக்கவில்லை என்றார்.
தாராதேவி தன்னுடன் விருப்பப்பட்டு
தங்கிவிட்டதால், தன்மீது தவறு ஏதும் இல்லை என சத்திரிய தர்மத்தை பிரம்மதேவருக்கே
உபதேசித்தார்.
சத்திரிய தர்மத்தை பற்றி
பிரம்மதேவருக்கு உபதேசம் செய்ததால் கோபம் அடைந்த பிரம்மதேவர், சந்திரனை பாவியாக
போகும்படி சாபமிட்டார்.
சாபத்திற்கான பரிகாரத்தை பிரம்மதேவர் அருளுதல் :
அதிர்ந்த சந்திரன் அடைக்கலம் என்று
வந்த தாராதேவிக்கு, அடைக்கலம் கொடுக்க வேண்டியது சத்திரியனான தன் கடமை என்பதை
வலியுறுத்தினார். கோபம் தணிந்த பிரம்மதேவரும் சந்திரன் மீது உள்ள உண்மையை அறிந்து
சாபத்திற்கான பரிகாரத்தினை கூறினார்.
நான் வழங்கிய சாபம் விலக வேண்டுமாயின்
தாராதேவியை குருவுடன் இணைத்து வைக்க வேண்டும். குருவின் கனிந்த பார்வையால் நான்
இட்ட சாபம் விலகும் என்று கூறினார்.
சந்திரன் சாப நிவர்த்தி பெறுதல் :
சந்திரன், சிவன்பெருமானிடம் தான்
செய்த தவறை மன்னித்து அருள வேண்டும் என வேண்டினார். தன் தவறை உணர்ந்த சந்திரனை
சிவபெருமானும் மன்னித்தார். சந்திரன் தாராதேவிக்கு தகுந்த அறிவுரைகளை கூறி
குருவுடன் இணைத்து வைத்தார்.
குருவும் நடந்த அனைத்து விஷயங்களையும்
மறந்து தாராதேவியை ஏற்றுக் கொண்டார். பின் சந்திரனின் சாபம் நீங்க குரு தேவரும்
அருள் புரிந்தார்.
தாராதேவி கருவுற்றல் :
இந்த நிலையில் தாராதேவி கருவுற்றாள்.
அந்த கருவிற்கு காரணம் சந்திரன் என தாராதேவி கூறினார்.
பின் தாராதேவி ஒரு அழகான ஆண்
குழந்தையை ஈன்றெடுத்தாள். அந்த குழந்தையை தாராதேவியுடன் வளர விரும்பாத குருதேவர்,
அந்த குழந்தையை சந்திரனிடமே ஒப்படைக்கிறார்.
பிரகஸ்பதி சந்திரனை மன்னித்து ஏற்றுக்
கொண்டாலும் சந்திரனுக்கும், தாராதேவிக்கும் பிறந்த புதல்வனான புதனை வெறுத்தார்.
தேவ, அசுர யுத்தம் :
குரு பெருந்தன்மையான குணம் கொண்டவராக
இருந்தாலும், அசுரர்களின் குருவான சுக்கிர தேவரைப் குருவிற்குப் பிடிக்காது.
குருபகவான் தேவர்களுக்கு குருவாக செயல்பட்டதைப் போல சுக்கிரன் அசுரர்களுக்கு
குருவாக செயல்பட்டார்.
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும்
அடிக்கடி போர்கள் ஏற்பட்டன. போரில் தேவர்களும், அசுரர்களும் மாறி மாறி ஜெயித்துக்
கொண்டே இருந்தனர். இதில் என்ன ஆச்சர்யம் என்றால், தேவர்கள் அமிர்தம் உண்டவர்கள்.
ஆதலால் அவர்களுக்கு அழிவு என்பதே இல்லை. ஆனால், அசுரர்கள் போரில் ஈடுபட்டு
மாண்டார்கள்.
மாண்ட அனைவரையும் சுக்கிர தேவர்
தன்னிடமிருந்த 'சஞ்சீவினி" மந்திரம் மூலம் உயிர் பெறச் செய்தார். இதனால் போர்
தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டே இருந்தது.
தேவர்கள், குருதேவரிடம் உதவி கேட்டல் :
இவ்வாறு நடைபெறும் போரினால் அசுரர்களை
விட தேவர்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். ஏனெனில் தேவர்கள் எந்த துன்பமும் இன்றி
சுகமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தனர். போரினால் தேவர்களின் சுகமான
வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மேலும், அவ்வப்போது யுத்தத்தில்
வெற்றி கொள்ளும் அசுரர்கள், தேவர்களின் அரசனான இந்திரனை விரட்டி விட்டு இந்திரனின்
பதவியை கைப்பற்றி விடுவதால் தேவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
ஆகவே, இந்த பிரச்சனையில் இருந்து
விடுபட தங்களது குருவான குருதேவரை சந்தித்து இதற்கு நிரந்தர தீர்வு காண ஏதாவது
உபாயம் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.
அசுரர்களின் பலத்திற்கான மூலக்காரணம் :
அசுரர்களின் பலத்திற்கு மூலக்காரணமே
சுக்கிராச்சாரியாரிடம் உள்ள 'சஞ்சீவினி" மந்திரம் என்பதை அறிந்த குருதேவர்
அதனை பலமிழக்க செய்ய வேண்டும் என எண்ணினார்.
சுக்கிராச்சாரியாரிடம் உள்ள சஞ்சீவினி
மந்திரம் அவருக்கு மட்டுமே சித்தியளிக்கும். சஞ்சீவினி மந்திரத்தை யாருக்காவது
அவர் உபதேசித்தால் அது பயனற்று போகும் என்பதை அறிந்த குருதேவர் ஒரு திட்டம்
தீட்டினார்.
குருதேவருக்கு கச்சன் என்ற மகன்
இருந்தார். கச்சனை அசுர குருவாகிய சுக்கிராச்சாரியிடம் அனுப்பி சஞ்சீவினி
மந்திரத்தை கற்று சுக்கிராச்சாரியாரிடம் உள்ள சஞ்சீவினி மந்திரம் செயலற்று
போகும்படி செய்ய திட்டம் தீட்டினார்.
பின், தன் மகனை அழைத்து தன்
எண்ணத்தைக் கூறி சுக்கிராச்சாரியாரிடம் அனுப்பி வைக்கிறார். கச்சனும் தன்
தந்தையின் சொல்லை ஏற்று அசுர குருவான சுக்கிராச்சாரியாரை காண அவரது ஆசிரமத்திற்கு
செல்கிறார்.
அசுர குருவை காணல் :
அசுர குருவை கண்ட கச்சன் தான்
பிரகஸ்பதியின் மகன் என்றும், தங்களிடம் சிஷ்யனாக சேர்ந்து வேதங்களையும்,
கலைகளையும் கற்க வந்திருப்பதாக கூறினான்.
தேவ குருவுக்கு தெரியாத வேதங்களா?
நான் என்ன இவருக்கு உபதேசிப்பது என யோசித்தார் அசுர குரு. பின், தேவ குரு ஏதாவது
திட்டத்துடன் தான் தன் மகனை தன்னிடம் வேதம் கற்க அனுப்பி உள்ளார் என்பதை
யூகித்தார் அசுர குரு.
மேலும், தேவ குருவாலும் என்னை எதுவும்
செய்ய முடியவில்லை. இவன் என்னை என்ன செய்ய முடியும் என்ற கர்வமும், அவரிடம்
இருந்தது. பிராமணான ஒருவன் தகுதியிருந்தும் தன்னை சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளும்படி
வேண்டினால் முதலில் அவரை சோதித்து சிஷ்யனாக சேரும் தகுதி உள்ளதா என அறிந்து அதன்
பின் சிஷ்யனாக சேர்த்து கொள்ள வேண்டும் என்பதே குருவின் முதலாவது கடமையாகும்.
அசுர குருவும் கச்சனை சோதித்தார்.
சோதனையில் கச்சன் தேர்ச்சி அடைந்ததும் இவன் தன்னிடம் சிஷ்யனாக சேர முழு தகுதி
உள்ளவன் என்பதை அறிந்தார் அசுர குரு. மேலும், சகல வல்லமை படைத்த என்னை யாராலும்
அழிக்க முடியாது என்ற ஆணவமும், அலட்சியமும் அவரிடம் இருந்தது. அந்த அலட்சியத்துடன்
கச்சனை தன்னுடைய சிஷ்யனாக சேர்த்துக் கொண்டார் அசுர குரு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக