Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 14 அக்டோபர், 2019

கிறுகிறுக்க வைக்கும் டிக்கெட்; ரயில்வே சட்டத்தை தூக்கி சாப்பிட்ட முதல் தனியார் ரயில்!


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


நாட்டின் முதல் தனியார் ரயில் ஆனது ரயில்வே கட்டணச் சட்டத்தை மீறி அதிக கட்டணம் வசூல் செய்துள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. இதனை ரயில்வே அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.


ஹைலைட்ஸ்
  • சர்ச்சையில் சிக்கிய நாட்டின் முதல் தனியார் ரயில்
  • அதுக்குனு இந்தளவிற்காக டிக்கெட் விற்கிறது?
பல்வேறு துறைகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன்படி, ரயில்வே துறையையும் தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.

கடந்த 4ஆம் தேதி நாட்டின் முதல் தனியார் ரயில் என்று அழைக்கப்படும் டெல்லி - லக்னோ தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஐ.ஆர்.சி.டி.சி மூலம் செயல்படத் தொடங்கியது. இதில் பயணிகளின் நலனிற்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.
 
இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதில் ரயில்வே கட்டணச் சட்டத்தை மீறி அதிக கட்டணம் வசூல் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை ரயில்வே மூத்த அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

டெல்லி - லக்னோ தேஜஸ் எக்ஸ்பிரஸ் எண் 82502:

* மொத்தமுள்ள 511 கி.மீ தூரத்தை 6 மணி 30 நிமிடங்களில் பயணிக்கிறது

* இடையில் காசியாபாத் - 2 நிமிடங்கள், கான்பூர் சென்ட்ரல் - 5 நிமிடங்கள் ரயில் நின்று செல்லும்

* ஏசி எக்ஸிகியூட்டிவ் வகுப்பு - ரூ.2,450 கட்டணம், கேட்டரிங் உள்ளிட்ட ஏசி சேர் காருக்கு - ரூ.1,565 கட்டணம்

 
டெல்லி - லக்னோ சதாப்தி எக்ஸ்பிரஸ் எண் 12004:

* பயண நேரம் 6 மணி 35 நிமிடங்கள் ஆகும்

* 5 நிறுத்தங்கள் - காசியாபாத், அலிகார், டண்ட்லா, எட்டாவா, கான்பூர் சென்ட்ரல்

* ஏசி எக்ஸிகியூட்டிவ் வகுப்பு - ரூ.1,855 கட்டணம், ஏசொ சேர் கார் - ரூ.1,165 கட்டணம்

மேலும் டெல்லி - லக்னோ வழித்தடத்தில் செல்லும் சுஹைல்தேவ் சூப்பர் ஃபாஸ்ட் ரயில், கரிப் ராத் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் ஏசி சேர் காருக்கான கட்டணம் முறையே ரூ.645 மற்றும் ரூ.480 மட்டுமே ஆகும்.

வருங்காலங்களில் அதிகப்படியான தனியார் ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே வசூல் வேட்டை தொடரும் என்பதில் சந்தேகமில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக