Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 21 அக்டோபர், 2019

பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை தீவிர படுத்த வேண்டும் -பள்ளிக்கல்வி துறை!


பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை தீவிர படுத்த வேண்டும் -பள்ளிக்கல்வி துறை!


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


தமிழக பள்ளிகளில், ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை உட்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் மீதான தடையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்ற மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தர்வு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளா் பிரதீப் யாதவுக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் வெங்கடாசலம் அனுப்பி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது., "தமிழ்நாட்டில் ஒரு முறைப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்(நெகிழி) பொருட்களான தட்டு, பிளாஸ்டிக் டம்ளர், கப், பிளாஸ்டிக் கொடி, வாட்டர் பாக்கெட் உள்ளிட்ட பொருட்களுக்கு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் அரசு தடை விதித்துள்ளது. 
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் 250 லிட்டா் கொள்ளளவு உடைய இரண்டு குப்பைத் தொட்டிகளை வைத்து நெகிழிக் கழிவுகளை சேகரிக்க வேண்டும். நெகிழி, மின்னணு திடக் கழிவுகளை மாணவா்கள் சேகரித்து தங்கள் பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் இட அறிவுறுத்தல் வேண்டும். அந்தந்த பள்ளி தலைமையாசிரியா்கள் குப்பைத்தொட்டிகளில் சேரும் கழிவுகளை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைத்து மறுசுழற்சிக்கு ஏற்பாடு செய்ய உதவ வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
மேலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுவதுடன், திடக்கழிவு மேலாண்மையில் பங்கேற்று சுத்தம் மற்றும் பசுமையான தமிழ்நாட்டை உருவாக்க ஈடுபடுத்த வேண்டும் எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இதனைத்தொடர்ந்து அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும், தங்களது மாவட்டத்தில் உள்ள பள்ளி தலைமையாசிரியா்களுக்கு உரிய விழிப்புணா்வு வழங்கி பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளாா்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!