>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 16 அக்டோபர், 2019

    நம்மைப் பரவசப்படுத்தும்... தஞ்சாவூர் அரண்மனை...!!

    Image result for நம்மைப் பரவசப்படுத்தும்... தஞ்சாவூர் அரண்மனை...!!
    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

    Follow Us:

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com



    தஞ்சாவூரில் இருந்து ஏறத்தாழ 1கி.மீ தொலைவிலும், திருச்சியில் இருந்து ஏறத்தாழ 58கி.மீ தொலைவிலும், அரியலூரில் இருந்து ஏறத்தாழ 45கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள பழங்கால அரண்மனைதான் தஞ்சாவூர் அரண்மனை.
    பல நூறு ஆண்டுகளைக் கடந்திருந்தாலும் இந்த அரண்மனை, காலத்தால் அழிக்க முடியாத வரலாற்றுத் தலமாகக் காட்சியளிக்கிறது.
    இந்த அரண்மனையில் மன்னர்கள் பயன்படுத்திய போர்க்கருவிகள், உடைகள், ஆபரணங்கள், சிறைக்கூடம், சுரங்கப்பாதை, மாடமாளிகை, பழங்கால ஓவியங்கள் என இன்னும் ஏராளம் உள்ளன.
    இந்த அரண்மனை வளாகமானது ஏறத்தாழ 110 ஏக்கர் பரப்பளவுக்கு விரிந்துள்ளது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இது தமிழக தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது.
    தஞ்சையைத் தலைமையாகக் கொண்டு மன்னர்கள் ஆட்சி செலுத்திய மண்டபம் தர்பார் மண்டபமாகும்.
    தஞ்சாவூர் மாநகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது இந்த தஞ்சை மாளிகை. இது தஞ்சை மராத்தா மாளிகை என்றும், தஞ்சாவூர் அரண்மனை என்றும் அழைக்கப்படுகிறது.
    சோழர்கள் தஞ்சை மாநகரத்தில் இன்னும் பல அரண்மனைகள் கட்டியிருந்தாலும், இதுவே சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது.
    பல வண்ணங்களில் அமைந்த ஓவியங்கள் தர்பார் மண்டபத்தை அலங்கரிக்கின்றன. இந்த மண்டபத்துக்கு முன் பெரிய மைதானம் உள்ளது.
    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் கண்டு ரசிக்கக்கூடிய அழகிய அரண்மனையாக இது விளங்குகிறது.
    ஆயுத சேமிப்பு மாளிகை கோபுர வடிவில் காணப்படுகிறது. கோபுரத்துக்குச் செல்லும் படிகட்டுகள் மிகவும் சிக்கலான வளைவுகளைக் கொண்டவை.
    அரண்மனை வளாகத்தில் உள்ள சரஸ்வதி மஹால் நூலகமும் சுற்றுலாப் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று.
    மன்னர் கால மருத்துவ முறைகள், கட்டிடக்கலை, சிற்பக்கலை உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய மிகவும் பழமையான நூல்கள் மட்டுமல்லாமல், ஏராளமான ஓலைச்சுவடிகளும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
    சுற்றுலா என்பது நம்மைப் பரவசப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், பழங்காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்வது என்பது மிகவும் சிறப்பல்லவா?...
    எப்படி செல்வது?
    தஞ்சாவூருக்கு அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.
    எப்போது செல்வது?
    அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
    எங்கு தங்குவது?
    தஞ்சாவூரில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.





    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக