புதன், 16 அக்டோபர், 2019

அசுரர்களை வழி நடத்தும் சுக்கிரனைப் பற்றிய அரிய தகவல்கள் !!

Image result for சுக்கிரன்
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com
சுக்கிரன் :

 நவகிரகங்களில் குருவிற்கு அடுத்தபடியாக வருபவர் சுக்கிரன். சுக்கிரன் பொதுச் சுபரே ஆவார். உலகத்தில் உள்ள எல்லா இன்பங்களுக்கும் காரண கர்த்தர் இவரே. வேதம் பயின்று அசுரர்களை வழி நடத்தும் அசுர குரு இவர்தான். குரு என்னும் ஸ்தானத்தில் அழைக்கப்படுவதால் குருவிற்கு கொடுக்கப்படும் அனைத்து மரியாதைகளையும் பெறுகிறார்.

 சுக்கிரன் உலக இன்பங்களில் குறிப்பாக காதல் உறவுக்குரிய தெய்வமாகவே ஜோதிட சாஸ்திரத்தில் வர்ணிக்கப்படுகிறார். கிரேக்க புராணங்களில் சுக்கிரனை காதல் தெய்வமாக கருதி வழிபட்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுக்கிரன் எவ்வாறு அசுரர்களுக்கு குருவானார் மற்றும் இவரின் கதையைப் பற்றி நாளை காண்போம்.

 சுக்கிரனுக்குரிய மலர் - வெண்தாமரை
 சுக்கிரனுக்குரிய தானியம் - வெள்ளை மொச்சை
 சுக்கிரனுக்குரிய வாகனம் - கருடன்
 சுக்கிரனுக்குரிய நவரத்தினம் - வைரம்
 சுக்கிரனுக்குரிய வடிவங்கள் - ஐங்கோணம், சதுர வடிவம்
 சுக்கிரனுக்குரிய ஆதிக்க எண் - 6
சுக்கிரனுக்குரிய அதிதேவதைகள் - மகாலட்சுமி, இந்திராணி.

சுக்கிரனின் இயல்புகள் :

 சுக்கிரன் பனி படலம் சூழ்ந்த வெள்ளை கிரகமாக இருப்பதால் சுக்கிரன் வெள்ளை நிறமாக பளிச்சென்று தெரிகிறார். இவரை விடிவெள்ளி என்றும் அழைப்பார்கள். சுக்கிரன் எதிர் பாலினத்தின் மீது ஈர்ப்பை கொடுக்கக் கூடியவர்.

சுக்கிரனின் காயத்ரி மந்திரம் :

ஓம் அச்வத்வஜாய வித்மஹே
தனூர் அஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ர ப்ரசோதயத்.

புராணத்தில் சுக்கிரன் :

 பிரம்மன் படைத்த சப்த ரிஷிகளில் பிருகு முனிவரும் ஒருவர். பிருகு ரிஷிக்கும், கயாதிக்கும் பிறந்தவர் தான் சுக்கிராச்சாரியார். இவருக்கு பிருகு மைந்தன் என்ற பெயரும் உண்டு. பிருகு முனிவர் ஜோதிடம் இயற்றிய 18 மகரிஷிகளில் ஒருவர்.

 சுக்கிராச்சாரியார் பல கலைகளையும், வேதங்களையும் பயின்று அதில் தேர்ச்சி அடைந்து ஆச்சார்யாராகியதால் தேவகுருவிற்கு இணையான இடத்தைப் பெற்றார்.

தோல்விக்கான காரணம் :

 தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே போர் எப்போதும் நடந்து கொண்டே இருந்தது. இதில் அசுரர்கள் பக்கமே அதிகமான உயிரிழப்பும், பாதிப்புகளும் இருந்தன. தேவர்கள் அமிர்தம் உண்டதால் மரணம் இல்லாமல் போரில் வெற்றி பெற்று கொண்டு இருந்தனர். மேலும் பிரகஸ்பதி போன்ற சிறந்த குருமார்கள் அவர்களை வழி நடத்தினார்கள் மற்றும் தேவையான சமயத்தில் ஆலோசனைகளையும் கூறினார்கள்.

ஆனால், தங்களுக்கோ வழி நடத்தவும், ஆலோசனை கூறவும் குரு இல்லாததால் தான் தங்களின் உயிர் இழப்பிற்கு காரணம் என்று அறிந்த அசுரர்கள் தங்களுக்கென ஒரு குரு வேண்டும் என முடிவெடுத்து அவரை தேடினார்கள்.

அசுர குருவை காணல் :

 சுக்கிரனின் வேத ஞானத்தையும், அவர் ஆச்சாரியார் ஆக இருப்பதையும் கண்டு அசுரர்கள் அவரிடம் தங்களின் குருவாக இருந்து எங்களை வழி நடத்த வேண்டும் என வினவி நின்றனர். இவர்கள் கூற்றுக்கு இணங்கி அன்று முதல் சுக்கிராச்சாரியார் என்னும் பிருகு மைந்தன் அசுரர்களுக்கு குருவானார்.

 சுக்கிராச்சாரியார் அசுரர்களின் ஆஸ்தான குருவாகி பல போர்களில் அசுரர்களை வழி நடத்தி வந்தார். இருப்பினும் அமிர்தம் உண்ட தேவர்களே வெற்றி பெற்றனர். அசுரர்களின் பக்கம் இழப்புகள் அதிகமாக இருந்தன.

 இதனை தவிர்க்க இறந்தோர்களை உயிர்பிக்கச் செய்யும் 'சஞ்சீவினி" மந்திரத்தை பரம்பொருளான சிவனிடம் கற்று அசுரர்களின் இழப்பினை ஈடு செய்யலாம் என எண்ணினார் சுக்கிராச்சாரியார்.

தவம் மேற்கொள்ளுதல் :

 'சஞ்சீவினி" மந்திரத்தை கற்க சிவனை நோக்கி சுக்கிராச்சாரியார் கடும் தவம் மேற்கொண்டார். இதனை தம் ஞான திருஷ்டியில் அறிந்து கொண்ட தேவகுருவான பிரகஸ்பதி அவரின் தவத்தை கலைக்க முயற்சிகளை மேற்கொண்டார்.

தேவேந்திரன் உதவுதல் :

 தேவகுரு இந்திரனை சந்தித்து சுக்கிராச்சாரியார் மேற்கொள்ளும் தவத்தை பற்றி எடுத்துக்கூறினார். பின் சுக்கிராச்சாரியாரின் தவத்தை எப்படியாவது கலைக்க வேண்டும், அதற்கு உன் மகளை அனுப்பி தவத்தை கலைக்கலாம் என யோசனைக் கூறினார்.

 தேவேந்திரனும் தேவகுருவின் ஆலோசனைப்படி தன் மகளான ஜெயந்தியை அழைத்து தங்கள் எண்ணங்களையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் எடுத்துக்கூறி அனுப்பி வைக்கின்றனர். ஏனெனில் ஜெயந்தியை கொண்டு அவரை மயக்கி, அவரின் தவத்தை கலைக்கலாம் என இருவரும் எண்ணினார்கள். ஆனால் நடந்ததோ வேறு.

சிஷ்டியாக மாறுதல் :

 ஜெயந்தி தன் தந்தையின் ஆணைக்கு இணங்கி சுக்கிராச்சாரியாரின் ஆசிரமத்திற்கு சென்று அவரிடம் சிஷ்டியாக ஏற்றுக் கொள்ளும்படி பணிந்து நின்றாள். தேவேந்திரனின் மகள் தன்னிடம் சிஷ்டியாக ஏற்றுக்கொள்ள பணிந்து நிற்க என்ன காரணம் என்பதை தன் ஞான திருஷ்டியில் அறிந்துக் கொண்டார் சுக்கிராச்சாரியார். இருப்பினும் எந்த தடைகளையும் சொல்லாமல் தன் சிஷ்டியாக தேவேந்திரனின் மகளை ஏற்றுக் கொண்டார்.

ஜெயந்தி மதி மயங்குதல் :

 ஜெயந்தியின் அழகில் சுக்கிராச்சாரியார் மயங்கவும் இல்லை. மேலும் ஜெயந்தி சுக்கிராச்சாரியாரின் பெருமைகளை அறிந்து வந்ததால் அவரை ஜெயந்தி மயக்கவும் முற்படவில்லை. மாறாக அவருக்கு ஒரு முழுமையான சிஷ்டியாக செயல்பட்டாள்.

 இதையறிந்த தேவேந்திரன் தன் மகளை அழைத்து நான் உனக்கு என்ன வேலை சொன்னால் நீ என்ன வேலை செய்கிறாய் என்று கோபத்துடன் கேட்டார். அதற்கு ஜெயந்தி மிகவும் பணிவுடன் தந்தையே சுக்கிராச்சாரியாரின் தவம் என்னால் எதுவும் பாதிக்கப்படவில்லை. மாறாக அவர் என் உணர்வுகளை கட்டுப்படுத்தி விட்டார் என்றும், காலம் வரும் போது தங்களின் ஆணையை நிறைவேற்றுவேன் என்றும் கூறினாள்.

 நாட்கள் கழிய கழிய தந்தையிடம் சொன்ன எந்த ஆணையையும் நிறைவேற்றாமல் சுக்கிராச்சாரியாருக்கு உரிய சிஷ்டியாக செயல்பட்டு அவரின் தவம் முழுமையடைய உறுதுணையாக இருந்தாள் ஜெயந்தி.

தவம் முழுமையடைதல் :

 சுக்கிராச்சாரியார் தன்னுடைய தவத்திற்கு எந்தவித தடையும் இல்லாமல் முறையாக தன்னுடைய தவத்தை தொடர்ந்து கொண்டு இருந்தார். அவரின் தவத்தை கண்ட சிவபெருமான் அவருக்கு காட்சி அளித்தார். சிவபெருமானை கண்ட சுக்கிராச்சாரியார் வணங்கி நின்றார். சிவபெருமானோ, உன் கடுந்தவத்தை கண்டோம், உன் தவத்தால் யாம் மெய்மறந்தோம் எனக் கூறி, வேண்டும் வரத்தினை கேட்பாயாக என்று கூறினார். அதற்கு சுக்கிராச்சாரியார் சிவபெருமானிடம் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் 'சஞ்சீவினி மந்திரத்தை" அளிக்க வேண்டும் எனப் பணிவுடன் கேட்டார்.

 அதற்கு சிவபெருமான், பிருகு மைந்தனே இந்த உலகில் பிறந்தவர்கள் இறந்து மறுபடியும் பிறக்க வேண்டும் என்பது இயற்கை. சஞ்சீவினி மந்திரம் மூலம் இறந்தவர்கள் உயிர் பெற்றால் அது இயற்கைக்கு மாறான செயல். இதன் மூலம் இயற்கை பாதிப்படையும். ஆகவே நீ வேறு வரத்தினை கேட்பாயாக என்று கூறினார்.

 என் தவம் சஞ்சீவினி மந்திரத்தை பெறுவதற்கு மட்டுமே அன்றி வேறு வரத்தை அடைவதற்கு இல்லை என கூறினார் சுக்கிராச்சாரியார். எனவே தாங்கள் இந்த அடியோரின் கூற்றை ஏற்று தாம் விரும்பிய வரத்தினை அருள்வாயாக என வேண்டினார்.

 வேண்டும் வரத்தை கேள் என்று கூறிய தாம், அவர்கள் விரும்பும் வரத்தினை தருவது தான் இயற்கை நியதியாகும். மும்மூர்த்திகளுக்கும் இது விதிவிலக்கல்ல என்பதை அறிந்த சிவபெருமான் சுக்கிரர் விரும்பிய இறந்தோர்களை உயிர் பிழைக்க வைக்கும் 'சஞ்சீவினி மந்திரத்தை" ஒரு நிபந்தனையுடன் அருளினார்.

 பிற்காலத்தில் நவகிரக மண்டலத்தில் இணைந்து நவகிரக பரிபாலத்தில் இடம்பெற்று விளங்குவாய். எனவே யாம் அருளிய இந்த சஞ்சீவினி மந்திரத்தை உயிர்த்தெழ தகுதியில்லாத மாபாவிகளுக்கும் வீண் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது.

யான் அருளிய இந்த மந்திரத்தை வேறு எவருக்கும் உபதேசிக்கக் கூடாது. உபதேசித்தால் இந்த மந்திரம் உனக்கு சித்தியளிக்காது. உபதேசம் செய்வதும் வேத ஞானம் பெற்ற தவசிக்கறக்கே செய்ய வேண்டும். சுயநலமின்றி பொதுநலத்துடன் இம்மந்திரத்தை பயன்படுத்த வேண்டும். மாறாக சுயநலத்திற்காகவோ, பெண்களுக்காகவோ இந்த மந்திரத்தை பயன்படுத்தினால் இது செயலற்று போகும். எனவே சர்வ ஜாக்கிரதையாக இதை பயன்படுத்த வேண்டும் என்ற உறுதி மொழியை பெற்றுக் கொண்ட பின் சுக்கிரனுக்கு 'சஞ்சிவினி" மந்திரத்தை உபதேசம் செய்தார் சிவபெருமான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்