இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இயற்கை காட்சிகள் கொண்ட மலைகளால்
சூழப்பட்ட ஆழியார் அணை, தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்குத்
தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.
வேளாண்மையை மேம்படுத்தும் நோக்கில் காமராஜர்
அவர்களால் 1962ஆம் ஆண்டு ஆழியாற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணை
சுமார் 81மீட்டர் உயரமும், 7கி.மீ. நீளமும் கொண்டுள்ளது.
சிறப்புகள் :
ஆழியார் அணையின் மூலம் பொள்ளாச்சி மற்றும்
அருகிலுள்ள பகுதிகள் பாசன வசதி பெறுகின்றன.
பொறியாளர்களின் ஓர் உன்னதமான வடிவமே
பரம்பிக்குளம் ஆழியார் திட்டமாகும். பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தின் ஒரு
பகுதியே ஆழியார் அணையாகும்.
வால்பாறையில் உள்ள சோலையாறு அணை,
பரம்பிக்குளம் அணை, நீரார் அணை ஆகிய அணைகள் கிடைமட்ட கால்வாய் மூலம்
இணைக்கப்பட்டுள்ளது.
ஆழியார் அணையின் தோற்றம், கம்பீரம் மற்றும் அழகு
காண்போர் மனதை கொள்ளை கொள்ளும். அணையின் மூன்று புறமும் மலைகள் சூழ்ந்த சூழல்
மிகவும் மனதைக் கவர்வதாக உள்ளது.
பார்க்க வேண்டிய இடங்கள் :
ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்...
உற்சாகமான படகு சவாரி...
சுடசுட மீன் வறுவல்...
மினி தீம் பார்க்...
வண்ண மீன் காட்சியகம்...
குழந்தைகள் விளையாடி மகிழ பூங்கா...
தேயிலைத் தோட்டங்களும், சோலை வனக் காடுகளும்...
இதர சுற்றுலாத் தலங்கள் :
அறிவுத் திருக்கோவில்...
குரங்கு நீர்வீழ்ச்சி...
ஆனைமலை...
வால்பாறை...
சோலையார் அணை...
பூஞ்சோலை...
திருமூர்த்தி அணை...
எப்படி செல்வது?
வால்பாறை சாலையில்
கோயம்புத்தூரிலிருந்து 67கி.மீ தூரத்திலும், பொள்ளாச்சியிலிருந்து 24கி.மீ
தூரத்திலும் ஆழியார் அணை அமைந்துள்ளது.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக