Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 3 அக்டோபர், 2019

சென்னை தூர்தர்ஷன் அதிகாரி சஸ்பெண்ட்.. பிரதமர் மோடி நிகழ்ச்சியை நேரலை செய்யாததால் நடவடிக்கை?


Image result for சென்னை தூர்தர்ஷன் அதிகாரி சஸ்பெண்ட்.. பிரதமர் மோடி நிகழ்ச்சியை நேரலை செய்யாததால் நடவடிக்கை?
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி பிரிவின் உதவி இயக்குநர் வசுமதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் சென்னை ஐஐடியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரலை செய்யவில்லை என்ற புகார் உள்ளது.
இந்நிலையில் சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி பிரிவின் உதவி இயக்குநர் வசுமதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  வசுமதியை பணியிடை நீக்கம் செய்து பிரசாத் பாரதியின் தலைமை செயல் அதிகாரி சசி ஷேகர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த பணியிடை நீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள வசுமதி சென்னையில் உள்ள தலைமை அலுவலத்தில் தங்கி இருக்கும்படியும், வெளியே செல்ல அவசியம் ஏற்பட்டால் முறையான அனுமதி பெற்றுச் செல்லும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை நேரலை செய்யாத நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!