இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி, 1984-ம்
ஆண்டு தொடங்கப்பட்டது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில், இந்த வங்கி 137
கிளைகளைக்கொண்டு இயங்குகிறது. சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இந்த வங்கியில்
அதிக அளவு முதலீடுகளை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஹெச்.டி.ஐ.எல் ரியல்
எஸ்டேட் நிறுவனத்துக்குக் கடன் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது,
தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி அதிக அளவு
கடன் தொகையை வழங்கியுள்ளனர். ஹெச்.டி.ஐ.எல் நிறுவனத்தின் பல திட்டங்கள் தோல்வியில்
முடிந்துள்ளன. இது, பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிக்குப் பாதிப்பை
ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் வங்கியின் வைப்புநிதிக்கே ஆபத்தை விளைவித்துள்ளது.
ஹெச்.டி.ஐ.எல் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்குக்
கடனாக வழங்கியதாக வங்கிப் புத்தகத்தில் பதிவுசெய்யவில்லை. வங்கியின்
வைப்புத்தொகையை 40 முதல் 50 வங்கிக் கணக்குகளுக்குத் திருப்புவதன்மூலம் கடனை
மறைக்க முயற்சி செய்துள்ளனர். வங்கியின் மூத்த அதிகாரிகள், இந்த மோசடியில்
ஈடுபட்டுள்ளனர். போலியாக 2,000 கணக்குகள் தொடங்கப்பட, சந்தேகம் இல்லாமல் கடன்
தொகையை வழங்கி, அதற்கான கணக்கையும் காட்டிவிட்டனர். காவல்துறையில் அளிக்கப்பட்ட
புகாரில், 4,500 கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணையின் முடிவில், இந்தத் தொகை அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
பஞ்சாப் மகாராஷ்டிரா வங்கியின் முன்னாள் தலைவர்
ஒருவர், நிர்வாக இயக்குநர் ஜாய் தாமஸ் மற்றும் சில அதிகாரிகள்மீது வழக்குப்பதிவு
செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஹெச்.டி.ஐ.எல் நிறுவனத்தைச் சேர்ந்த சாரங் மற்றும்
ராகேஷ் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில்
தொடர்புடைய ஜாய் தாம்ஸ், 1989-ம் ஆண்டு வங்கியில் சேர்ந்துள்ளார். 1999-ம் ஆண்டு
நிர்வாக இயக்குநராகியுள்ளார்.
இந்த வங்கியின் 60 சதவிகித பரிவர்த்தனைகள்,
ஹெச்.டி.ஐ.எல் நிறுவனத்துடன்தான் நடந்துள்ளன. 2011-ம் ஆண்டு வரை ஹெச்.டி.ஐ.எல் நிறுவனத்தின்
பரிவர்த்தனைகள் சரியாகத்தான் இருந்துள்ளன. 2011-ம் ஆண்டு, மும்பை விமான நிலையம்
அருகே ஒரு புராஜெக்ட் மேற்கொண்டது. அது, தோல்வியில் முடிந்தது. அதன்பின், வங்கிப்
பரிவர்த்தனைகள் சரியாக நடக்கவில்லை. தொடர்ந்து கடன்பெற்று வந்துள்ளனர். வங்கி,
தனது வரம்புக்கு மீறி அதிக அளவு கடன் தொகையைக் கொடுத்துள்ளது. வாராக்கடன்
விவரங்களையும் ரிசர்வ் வங்கிக்குத் தெரியப்படுத்தவில்லை. வங்கி கணினி
மயமாக்கப்படாததால் இந்தத் தவறுகளை அடையாளம் காண முடியவில்லை. ரிசர்வ் வங்கியின்
ஆய்வின்போது, இந்தத் தவற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நிறைய வங்கிக்
கணக்குகளுக்கு, குறைவான அளவில் கடன் கொடுத்ததாகக் கணக்குக் காட்டியிருந்ததால்,
ரிசர்வ் வங்கி அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. வங்கி ஊழியர் ரிசர்வ்
வங்கியில் அளித்த புகாரின் பேரில், இந்தச் சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு
வந்துள்ளது. இதையடுத்து ரிசர்வ் வங்கி, பஞ்சாப் மகாராஷ்டிரா வங்கிக்கு பல்வேறு
கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதுதொடர்பாக, கடந்த 23-ம் தேதி ரிசர்வ் வங்கி
வெளியிட்ட அறிவிப்பில், `அடுத்த 6 மாதங்களுக்கு ரிசர்வ் வங்கியின்
அறிவுறுத்தலின்படியே செயல்பட வேண்டும். சேமிப்புக் கணக்கு, நடப்பு கணக்கு என
எந்தவகை கணக்குகளாக இருந்தாலும், இந்த வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு நாள்
ஒன்றுக்கு 1000 ரூபாய்க்கு மேல் வழங்கக்கூடாது. ரிசர்வ் வங்கியிடமிருந்து அடுத்த
அறிவிப்பு வரும்வரை கடன் வழங்குவது, முதலீடுகளைப் பெறுவது, நிலுவையில் உள்ள
கடன்கள் தொடர்பாகத் தீர்வு காண்பது உள்ளிட்ட எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது.
இந்தக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, வங்கி தனது பரிவர்த்தனையை மேற்கொள்ள எந்தத்
தடையும் இல்லை' என்று தெரிவித்துள்ளது. சூழலைப் பொறுத்து இந்த முடிவில் மாற்றம்
கொண்டுவருவது பற்றி பின்னர் முடிவுசெய்யப்படும் எனக் கூறப்பட்டது.otice
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு, பஞ்சாப்
மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ரிசர்வ் வங்கி தனது நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும் எனக் கோரி போராட்டத்தில்
ஈடுபட்டனர். இதையடுத்து, 10,000 ரூபாய் வரை எடுத்துக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி
கூறியது. தற்போது அதையும் தளர்த்தியுள்ளது. வாடிக்கையாளர்கள், தங்களது
வைப்புத்தொகையிலிருந்து 60 சதவிகிதம் வரை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக