Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 3 அக்டோபர், 2019

சந்தை நிலவரம்... கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்


கமாடிட்டி

ங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், காப்பர் போன்ற கமாடிட்டிகள் இந்த வாரம் எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.

தங்கம் (மினி) 

தங்கமானது தொடர்ந்து வலிமைகாட்டி வந்தாலும் தங்கத்தின் ஏற்றம் முடிவுக்கு வந்துள்ளது போலவே தெரிகிறது. கடந்த 05.09.19 அன்று ஒரு ‘ஈவினிங் ஸ்டார்’ தோன்றியுள்ளது. இந்த கேன்டில் அமைப்பு நமக்கு ஒரு அடையாளத்தைக் காட்டுகிறது. 

அதாவது, ஏற்றத்தின் முடிவாக அது இருக்கலாம் என்று கூறியிருத்தோம். அப்போது தங்கம் ரூ.38350 என்ற விலையில் இருந்தது. அங்கிருந்து தொடர்ந்து தங்கம் இறங்குமுகமாகவே மாறியுள்ளது. இந்த இறக்கத்தில் இதுவரை ஆயிரம் புள்ளிகளை இழந்துள்ளது. தற்போது முக்கியக் கட்டத்தில் உள்ளது.
சென்ற வாரம் சொன்னது… “தங்கம் ஒரு ஹெட் அண்டு ஷோல்டர் அமைப்பைத் தோற்றுவித்துள்ளது. எனவே, நெக்லைன் எனப்படும் 37130 என்ற எல்லையை உடைத்தால், வலிமையான இறக்கம் வரலாம். மேலே 37860 என்ற எல்லை உடனடித் தடை நிலையாக உள்ளது.”

தங்கம் சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 37860ஐ என்ற எல்லையை உடைத்து சற்றே ஏறி, அதிகபட்சமாக 38170 என்ற புள்ளியைத் தொட்டது. சென்ற வாரம் திங்கள் மற்றும் செவ்வாய் அன்று ஏறினாலும் புதன் அன்று வலிமையான இறக்கத்தைக் கண்டது. அதன்பின் இறங்குமுகமாக மாறியது. ஆனாலும், இன்னும் முக்கிய ஆதரவை உடைக்கவில்லை. எனவே, தற்போது மிக முக்கிய நிலையில் உள்ளதாக எடுத்துக்கொள்ளலாம்.

தங்கம் அக்டோபர் கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், நவம்பர் கான்ட்ராக்ட்டை எடுத்துக் கொள்ளலாம். தங்கம் இனி இறங்கிவந்துள்ள நிலையில் 37400 என்ற எல்லை முக்கிய ஆதரவு ஆகும். மேலே 38070 தடைநிலை ஆகும்.


சந்தை நிலவரம்... கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
வெள்ளி (மினி)

வெள்ளி சென்ற வாரம் தங்கம்கீழ் நோக்கி இறங்கியபோது, இன்னும் அதிக அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது. வெள்ளியானது, தங்கம் வேகமாக நகரும்போது மெள்ளமாகவும் தங்கம் மெள்ளமாக நகரும்போது வேகமாகவும் நகர்ந்து வருகிறது.

சென்ற வாரம் சொன்னது… “இந்த நிலையில், வெள்ளி 45600 என்ற எல்லையை ஆதரவாகவும் மேலே 47400 என்ற எல்லையைத் தடைநிலையாக வும் கொண்டுள்ளது.’’

வெள்ளி சென்ற வாரம் நாம் கொடுத்த தடை நிலையான 47400-ஐ உடைத்து ஏறி, உச்சமாக 48330-ஐ தொட்டது. ஆனால், அடுத்து புதன் அன்று மிக வலிமையாக இறங்கி 46500-ஐ தொட்டது. அடுத்தடுத்து இறங்கி நாம் கொடுத்த ஆதரவு எல்லையான 45600-ஐ உடைத்து 45100-ஐ நோக்கி நகர்ந்துள்ளது.
வெள்ளி, இறங்குமுகமாக மாறிய நிலையில், தற்போது 46400-ஐ உடனடித் தடைநிலை யாவும் கீழே 44700-ஐ ஆதரவாகவும் கொண்டுள்ளது.

கச்சா எண்ணெய் (மினி)

சென்ற வாரம் சொன்னது… “கச்சா எண்ணெய் தற்போது 4090 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 4250 என்ற எல்லையை உடனடித் தடை நிலையாகவும் கொண்டுள்ளது.’’

கச்சா எண்ணெய் 16.09.19 அன்று சவூதி அரேபிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தாக்கப் பட்டதால் ஏற்றம் கண்டது. ஆனால், அதன்பின் தொடர்ந்து இறங்குமுகமாகவே இருந்துவருகிறது. நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 4250-ஐ உடைத்து இறங்கி 3900-ஐ நோக்கி நகர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் வலிமையாக இறங்கினாலும் தற்போது 3840 என்ற ஆதரவு எல்லையைக் கொண்டுள்ளது. மேலே 4050 என்பது வலிமையான தடைநிலை ஆகும்.

காப்பர் 

மெகா லாட் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது, கவனமாக வியாபாரம் செய்யவும். சென்ற வாரம் சொன்னது… “காப்பர், சென்ற வாரம் நாம் கொடுத்த ஆதரவு எல்லையான 447-ஐ உடைத்து, 440-ஐ நோக்கி நகர்ந்துள்ளது. கடந்த வாரம் முழுவதும் இறங்குமுகமாகவே இருந்து வந்துள்ளது. ஆனாலும், தற்போது ஆதரவு எல்லைக்கு அருகில் உள்ளது.
காப்பர், நல்ல இறக்கத்திற்குப் பின், 438ஐ முக்கிய ஆதரவாகக் கொண்டுள்ளது. மேலே 444 என்பது உடனடித் தடைநிலை ஆகும்.

Disclaimer

இந்த இணைய தளத்தில் எழுதுபவர் பங்கு சந்தை நிபுணரோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சியாளரோ அல்ல. இந்த இணைய பக்கத்தின் நோக்கம் பங்கு சந்தை பற்றி கற்றதை பதிவு செய்வது மட்டுமே. பங்குகளில் முதலீடு செய்பவர்கள்,பங்குகளை வாங்குபவர்கள், வாங்க போகும் பங்குகள் பற்றிய விவரங்களை அவர்களின் சொந்த முயற்சியில் சேகரித்து வாங்குமாறு அறிவுருத்தபடுகிரார்கள். பங்கு வர்த்தகத்தில் ஏற்படும் லாப, நஷ்டங்களுக்கு முதலீடு செய்பவர்களே பொறுப்பு; இந்த இணைய தளத்திற்கோ அல்லது இதில் எழுதுபவர்க்கோ, இதனை படித்து முதலீடு செய்பவரின் லாப நட்டத்தில் எந்த பொறுப்பும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக