Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 22 அக்டோபர், 2019

நரகாசுரன் : பிரம்ம தேவரை நோக்கி கடுந்தவம்... ஏன்... எதற்கு? பிரம்ம தேவரை நோக்கி கடுந்தவம் புரிந்த நரகாசுரன்..!!

 Image result for நரகாசுரன் : பிரம்ம தேவரை நோக்கி கடுந்தவம்.

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


வசுதேவரின் வாக்குகளை சற்றும் யோசிக்காமல் தங்கையின் அருகில் சென்றான் கம்சன். அப்பொழுது வசுதேவர் கம்சனிடம் இனி தேவகி பெற்றெடுக்கும் அனைத்து குழந்தைகளையும் நான் உன்னிடம் வந்து ஒப்படைத்து விடுகிறேன். நீ அவர்களை என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம் என்றும், எனது மனைவியான உனது தங்கையை உயிருடன் வாழவிடு என்று கேட்டார்.

வசுதேவர் நேர்மையானவர் என்பதை நன்கு உணர்ந்தவன் கம்சன். தன் தங்கையை கொல்லவும் அவனுக்கு மனம் வரவில்லை. வசுதேவரே!!... உமது உரையை நான் ஏற்கின்றேன். நீர் உமக்கு எட்டாவதாக பிறக்கும் குழந்தையை என்னிடம் தந்துவிட வேண்டும் என்று கூறி வசுதேவரின் வார்த்தைகள் மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் தன் தங்கையை கொல்லாமல் அவர்களை அவர்கள் ராஜ்ஜியத்தில் விட்டுவிட்டு தனது ராஜ்ஜியத்திற்கு சென்று அசரீரி கூறிய அந்த செய்தியை எண்ணியே காலங்களை கழித்துக் கொண்டிருந்தான்.

தனது அழிவு என்பது உறுதியாகிவிட்டது. இதை எவ்விதத்திலாவது தடுத்தாக வேண்டும் என்று அவன் மனம் எண்ணிக் கொண்டிருந்தது. காலங்கள் கடந்து செல்ல தேவகி முதல் குழந்தையை ஈன்றெடுத்தாள். வசுதேவர் கம்சனுக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தனக்குப் பிறந்த முதல் குழந்தையை கம்சனிடம் ஒப்படைக்க அவன் ராஜ்ஜியத்திற்கு சென்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத கம்சன் என்னவாயிற்று திடீர் வருகை தந்துள்ளீரே? என்று கேட்க, அவர் தனது மனைவி கர்ப்பமுற்று முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் என்றும், இதுவே அக்குழந்தை என்றும் கம்சன் முன்னிலையில் காண்பித்தார்.

மந்திரியின் பேச்சானது நரகாசுரனுக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. என் வீரத்தை பற்றி நீர் அறிவீரோ? என்று சினத்துடன் உரைத்தார். இல்லை அரசே நான் அவ்விதம் உரைக்கவில்லை என்றும், தங்களின் வீரத்திற்கு முன்பு அவர்கள் அற்பமானவர்களே. ஆனால், அவர்கள் எவ்வகையில் போரிட்டாலும் அவர்களை அழிக்க இயலாது என்றும், ஆகையால் நீங்களும் அவர்களுக்கு நிகராக சாகாவரம் பெற வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். மேலும், அதன் பொருட்டே நான் தங்களிடம் இவ்வாறாக எடுத்துரைத்தேன் என்று கூறினார்.

பின்பு மந்திரியின் கூற்றுகளில் இருந்த உண்மையை உணர்ந்த நரகாசுரன் உலகில் உயிரினங்களை படைப்பவரான பிரம்ம தேவரை நோக்கி கடுந்தவம் புரிந்தார். தனது சுகபோகங்களை தவிர்த்து தனது மனதை ஒருநிலைப்படுத்தி தனது எண்ணங்கள் யாவற்றிலும் பிரம்ம தேவரை நிலைநிறுத்தி பிரம்ம தேவரை எண்ணி தியானித்து அவரை நோக்கி கடுந்தவம் புரிந்தார். காலங்கள், நாட்கள், மாதங்கள் மற்றும் வருடங்கள் என அனைத்தையும் மறந்து பிரம்ம தேவரை எண்ணி கடுந்தவம் புரிந்து கொண்டிருந்தார்.
அவ்வேளையில் நாரதரும் கம்சனுடன் சில முடிவுகள் பற்றி பேசுவதற்காக வருகை தந்து அவருடன் இருந்தார். அப்போது கம்சன் எனக்கு நீர் எட்டாவதாக பிறக்கும் உமது குழந்தையை மட்டும் அளித்தால் போதுமானது. மற்ற குழந்தைகள் எனக்கு வேண்டாம் என்று எடுத்துரைத்தார்.

அருகில் இருப்பவர் நாரதர் ஆயிற்றே.. கலகம் என்பதை தோற்றுவிப்பவராயிற்றே.. அதுவே அவரது பணியும் ஆகும். அவர் அப்பொழுது, கம்சனிடம் உனது அறியாமையை எண்ணி நான் என்ன செய்வேன்? அவர்களுக்கு பிறக்கும் குழந்தையை அழிக்காமல் உனது மரணத்தை நீயே வாங்கி கொள்கின்றாய். உன் வீரத்தை நான் என் சொல்வேன் என்று புகழ்ந்துரைத்தார்.

தொடரும்...!!







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக