Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 22 அக்டோபர், 2019

கீரை சாகுபடி !!

 Image result for கீரை சாகுபடி !!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


வீட்டிலிருந்தே சம்பாதிக்க.... சிறிதளவு இடம் மட்டும் போதும்... தினசரி வருமானம்...!!

தினசரி வருமானம் தரும் கீரை சாகுபடி !!
நிலமானது நல்ல மண்வளம் மற்றும் நீர் வளத்துடன் காலியாக இருந்தால் அந்த பகுதியில் கீரை சாகுபடி செய்து விளைவித்து தினசரி வருமானம் பெற முடியும்.

வளர்க்கும் முறை :

 கீரை சாகுபடி செய்வதற்கு நிலத்தை நன்கு உழுது கட்டிகள் இல்லாமல் செய்து சிறு சிறு பாத்திகளாக கரை பிடிக்க வேண்டும்.
 பாத்திகளின் அளவு நமது நிர்வாகத் திறமைக்கு ஏற்றபடி சாகுபடி பரப்பளவை அமைத்துக்கொள்ளலாம். கீரை சாகுபடிக்கு அதிகம் தேவைப்படும் உரம் நன்கு மக்கிய தொழு உரமாகும்.
 தொழு உரம் நன்கு மக்காமல் இருந்தால் அதில் களைச்செடிகளின் விதைகள் மடியாமல் இருந்து, தொழு உரத்தை பாத்தியில் போடும்போது அதிக அளவில் களைச்செடிகள் முளைத்துவிடும். அதுமட்டுமல்லாமல் எரு நன்கு மக்காமல் இருப்பின் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு உடனே கிடைக்காது.

 மேலும் எரு நன்கு மக்கியிருக்கும்போது இதை இடும் இடத்தில் மண் இளக்கமாக இருக்கும். அதோடு எரு இட்ட இடத்தில் வடிகால் வசதி நன்றாக இருக்கும். இயற்கை எருவினை சாகுபடி காலத்திற்கு முன்பாகவே சேகரித்து வைத்துக் கொண்டு அதன் மேல் அதிக சூரியஒளி படாமல் பாதுகாக்க வேண்டும்.
 எனவே, எருவினை சமயம் கிடைக்கும்போது கட்டி இல்லாமல் பொடி செய்து குவித்து வைத்து ஓலைகளைக் கொண்டு மூடி வைத்துக் கொள்ள வேண்டும். இதோடு வளமான செம்மண் மற்றும் மணல் இவைகளையும் சேகரித்து வைத்துக் கொண்டு, வயலில் சாகுபடி செய்யும் சமயம் இவைகளை எருவுடன் கலந்து இடலாம்.
 வசதி கிடைக்கும்போது குளத்து வண்டல் மண்ணினை சேகரித்து இதனுடன் எருவினை நன்கு கலந்து சாகுபடி செய்யும் பாத்திகளுக்கு இடலாம். எருவினை பாத்தியில் போட்டால் மட்டும் போதாது. அவைகளை சாகுபடி செய்யும் நிலங்களுக்கு இட்ட உடனே பாத்தியை நன்கு கொத்தி விட வேண்டும்.
 அப்போதுதான் எரு நன்கு மண்ணோடு கலந்து கீரை செடிகளை தளதளவென்று வளர வைக்கும். கீரை சாகுபடியில் முடிந்தவரையில் இயற்கை உர உதவியுடன் செய்வது நல்லது.
 உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் தண்டுக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பாலாக்கீரை, வெந்தயக்கீரை, பசலைக்கீரை போன்ற ரகங்களை பயிரிடலாம்.

 கீரை பாத்திகளை சுற்றிலும் அகத்தி கீரைகளை விதைத்து கொள்ளலாம். பாத்திகளின் வரப்புகளில் கொத்தமல்லி விதை மற்றும் சிறிய வெங்காயத்தின் விதைகளை ஊன்றி விடலாம்.
 கீரைவயலின் வெளிப்புறத்தைச் சுற்றிலும் மஞ்சள் நிற பூக்களை கொண்ட சாமந்தி செடிகளை வளர்த்தால், சாமந்திப் பூக்களால் பூச்சிகள் அதிகம் கவரப்படும். இதனால் கீரைகளுக்கு பூச்சிகளால் ஏற்படும் நோய் பாதிப்பு குறையும்.
 பாத்திகளில் விதைகளை தூவி பிறகு மேல் பகுதியில் சிறிதளவு மண் மூடாக்கு இட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஐந்தாம் நாள் விதைகள் முளைத்துவிடும். விதை முளைத்த 15 நாட்களுக்குள் கை களையாக கீரைகளுக்கு இடையில் களை எடுக்க வேண்டும். அதிக வெயில் காலமாக இருந்தால் வைக்கோல் மூடாக்கு இடலாம்.
அறுவடை முடியும் தருவாயில் மேலும் பத்து சென்டுக்கு கீரை சாகுபடியை ஆரம்பிக்கலாம். இப்படி செய்வதால் தொடர்ந்து கீரை கிடைக்கும்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக