Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 22 அக்டோபர், 2019

சூரசம்ஹாரம் - பகுதி 05..!

 Image result for சூரசம்ஹாரம் - பகுதி 05..!


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


கந்த சஷ்டி ஸ்பெஷல் : ஆறு தீப்பொறிகள்... உருவாகும் புதிய சக்தி... என்ன நடக்கிறது?


தேவர்களின் இன்னல்களை போக்க பார்வதிதேவியும், எம்பெருமானும் கைலாயத்தில் இருந்த குகைக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆனந்த தாண்டவத்தில் இருந்தனர். பின்பு தாண்டவத்தின் மகிழ்ச்சி நிலையில் எம்பெருமானுடைய சக்தியின் ஒரு பகுதியும், பார்வதிதேவியினுடைய சக்தியின் ஒரு பகுதியும் இணைந்து பார்வதிதேவி கருவுறாமல் ஒரு புதிய சக்தியின் தோற்றத்திற்கு அடிப்படையாக இருந்தன.

அவ்வேளையில் அக்னி தேவர் எம்பெருமானை காண அவர் வீற்றிருக்கும் இடத்தை அடைந்தார். இருப்பினும் சிவபெருமான் இருக்கும் இடத்தில் அவர் இல்லாததை கண்டு மனம் கலங்கி நின்றார். பின், கைலாயத்தில் இருந்த குகையில் வந்த வெளிச்சம் நேரம் ஆக ஆக அதிகரித்துக்கொண்டே இருந்தது. அந்த வெளிச்சத்தின் பிரகாசத்துடன் சிறிது வெப்பமும் உண்டாயிற்று. அக்னி தேவர் அந்த குகையின் உள்ளே சென்று பார்த்தார்.

அவ்வேளையில் எம்பெருமானும், பார்வதிதேவியும் தியான நிலையில் ஆனந்த தாண்டவம் புரிய அங்கு ஒரு மகத்தான சக்தி உருவானதை கண்டார். தேவர்களை சிறைப்பிடிக்க வந்து கொண்டிருந்த தாரகாசுரன் இச்செய்தியை அறிந்தவுடன் கைலாயத்தை நோக்கி தனது படையுடன் சென்றான். கைலாயத்தை அடைந்ததும் அங்கிருந்த பூத கணங்களுக்கும், தாரகாசுரனின் படைகளுக்கும் இடையே போர் உண்டாயிற்று.

அக்னி தேவர் சிவபெருமானை காண சென்று வெகுநேரம் ஆயிற்றே என எண்ணி தேவர்களும் கைலாயத்திற்கு சென்றார்கள். அந்த வேளையில் நந்தி தேவரும் அவருடன் இருந்த மற்ற பூத கணங்களும் அசுரர்களுடன் சண்டையிட்டு கொண்டிருப்பதை கண்ட தேவர்கள் போரில் ஈடுபட்டனர். எம்பெருமானும், பார்வதிதேவியும் தியான நிலையில் தாண்டவம் புரிந்து கொண்டே அமர்ந்திருக்க, அவர்கள் இருவரிடமிருந்து உருவான புதிய சக்திக்கு மேலும், ஆற்றலை அளித்து கொண்டு இருந்தார்கள்.

அந்த சக்தியானது அதிகரிக்க அதிகரிக்க அதனுடன் வெளிச்சமும், வெப்பமும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. அக்னி தேவர் அந்த குகையில் நுழைந்த போது சிவபெருமானுக்கும், பார்வதிதேவிக்கும் மற்றும் அங்கு உருவான சக்திக்கும் உள்ள தொடர்பு குறைந்து கொண்டே இருந்தது. ஒரு நிலையில் பார்வதிதேவியின் தொடர்பு முழுவதுமாக இன்றி அச்சக்தியானது சிவபெருமானுடன் மட்டும் தொடர்பு கொண்டு இருந்தது. இறுதியாக சிவபெருமான் தேவர்களை காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது நெற்றிக் கண்களைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக்கூடிய அதோ முகம் (மனம்) என்று ஆறுமுகங்கள் உண்டு) அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் அச்சக்தியுடன் இணைத்து, மேலும் அச்சக்திக்கு அதிக வலிமையையும் அளித்தார்.

தொடரும்..




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக