Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 8 அக்டோபர், 2019

டெங்கு கொசுக்களை ஒழிக்க வரும் பிரேசில் கொசுக்கள்... புதிய முயற்சியில் ஆய்வாளர்கள்!

டெங்கு கொசுக்களை ஒழிக்க வரும் பிரேசில் கொசுக்கள்... புதிய முயற்சியில் ஆய்வாளர்கள்!



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


டெங்கு கொசுக்களை ஒழிக்க புதிய வகை பிரேசில் கொசுக்களை வளர்த்து பரப்ப ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

டெங்கு வைரஸை ஒழிக்கும் பேக்டீரியாவை பிரேசிலைச் சேர்ந்த ஒரு வகை கொசுக்களில் செலுத்தியுள்ளனர். பேக்டீரியா செலுத்தப்பட்ட பிரேசில் கொசுக்கள் பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோ ஆய்வகம் ஒன்றில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

டெங்கு வைரஸை உலகம் முழுவதிலிமிருந்து அகற்ற பேக்டீரியா செலுத்தப்பட்ட கொசுக்கள் களம் இறங்க உள்ளன. Wolbachia என்னும் பேக்டீரியாவை வளர்த்துவிட்டு ஏடிஸ் கொசுக்களில் காணப்படும் டெங்கு வைரஸை ஒழிக்கும் முயற்சி நடந்து வருகிறது.


இந்த பேக்டீரியாக்கள் மூலம் ஜிகா வைரஸ் மற்றும் சிக்குன்குனியா வைரஸ்களைக் கூட ஒழிக்க முடியுமாம். பிரேசிலில் டெங்கு பாதிப்பு உள்ள இடங்களில் கடந்த 2015-ம் ஆண்டு முதலே Wolbachia பேக்டீரியா செலுத்தப்பட்ட கொசுக்களை ஆய்வாளர்கள் பரப்பி வருகின்றனர். தொடர்ந்து செய்வதன் மூலம் Wolbachia பேக்டீரியா உடனான கொசுக்கள் பெருகும் எனக் கூறப்படுகிறது.

Wolbachia பேக்டீரியா ஒரு கொசுவின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதன் மூலம் டெங்கு வைரஸ் கொசுக்களைத் தாக்குவது குறைவாகும். அப்படியே தாக்கினாலும், Wolbachia பேக்டீரியா அந்த வைரஸை ஒரு கொசுவின் உடம்பிலிருந்து பெருக விடாமல் தடுக்கும் என்பதே இதனது அறிவியல் பணி விளக்கம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!