இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பொதுவாக சனி பகவான் ராசிக்கு 8 ஆம்
இடத்தில் வருவதை தான் அஷ்டம சனி என்பார்கள். அஷ்டமத்தில் சனி வருவது குறிப்பாக
மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு மிகவும் அதிக சோதனையை தரும். மகரம், கும்பம்
ஆகிய ராசிகளுக்கு ராசி அதிபதியாகி சனி 8 இல் போவதால் அதனால் சில சங்கடங்கள் வரும்.
பொதுவாக எல்லா ராசிக்காரர்களுக்கும் என்னென்ன விதமான சங்கடங்கள் வரும் அல்லது வர
வாய்ப்பு உண்டு என்றால், முதலில் 8 ஆம் இடத்து சனி தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால்
தொழில் ரீதியாக அவப் பெயர், தேவை இல்லாத தொழில் மாற்றம், தொழில் ரீதியாக அலைச்சல்,
வேலை செய்தும் கூட மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக வேண்டிய நிலை. 8 ஆம்
இடத்துக்கு சனி வந்த பயனாய் திடீர் மருத்துவ செலவுகள். 2 ஆம் இடமான குடும்பம் +
வாக்கு ஸ்தானத்தை சனி பார்ப்பதால் பேச்சினால் அதிக விரோதிகளை சம்பாதிக்கும் நிலை.
குடும்பத்தில் கூட வெளி நபர்களால் குழப்பம். 4 ஆம் இடமான சுகஸ்தானத்தை அஷ்டமத்தில்
வரும் சனி பார்ப்பதால் நேரத்திற்கு தூங்க, சாப்பிட முடியாத நிலை. தவிர, இந்த அஷ்டம
சனி காலத்தில் வீடு, சொத்துக்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
வெளிநாடு
செல்பவர்கள் தேவை இல்லாமல் பணம் கட்டி ஏமாறும் நிகழ்ச்சிகள் எல்லாம் இந்த அஷ்டம
சனி காலத்தில் பலருக்கு சர்வ சாதாரணம். அதைவிட குடும்பத்தில் இருக்கும் வயதான
நபர்களை இந்த அஷ்டம சனி காலத்தில் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு
அஷ்டம சனி காலத்தில் திருமணம் நடக்கும், ஆனால் அது அவ்வளவு நல்லதல்ல. அஷ்டமத்தில்
சனி வந்த காலத்தில் பெருமாளை அதிகம் வழிபட வேண்டும் அல்லது ஸ்ரீ ருத்திரம்
ஸ்லோகங்கள் பாராயணம் செய்ய, கேட்க வேண்டும். சனி காயத்திரியும் அடிக்கடி
சொல்லலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக