இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கோவில்
வரலாறு :
கி.பி.1113ல் கம்போடியாவை ஆண்ட மன்னன் சூரியவர்மன் இந்தப் பிரம்மாண்டக் கோவிலைக் கட்டினான். தான் தீவிர விஷ்ணு பக்தன் என்பதால் விஷ்ணுவுக்காக அந்த அற்புத கோவிலை உருவாக்கினான் சூரிய வர்மன்.
பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சூரியவர்மனால் துவங்கப்பட்ட இதன் கட்டிட பணிகளானது 27 வருடங்களில் நிறைவு பெற்றது. கட்டி முடித்த சிறிது காலத்திலேயே இரண்டாம் சூரியவர்மன் இறந்தார்.
பின்பு ஆறாம் ஜெயவர்மன் ஆட்சிக்கு வந்த பிறகு விஷ்ணு கோவிலாக இருந்த இக்கோவில் 14ம் நூற்றாண்டில் புத்த கோவிலாக மாறி, இன்று வரையிலும் பௌத்த கோவிலாகவே இருந்து வருகிறது.
கோவில்
அமைப்பு :
அங்கோர்வாட் விஷ்ணு ஆலயம் தாமரைப்பூ வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு மத்தியில் பெரிய கோபுரமும், அதைச்சுற்றி பல சிறிய கோபுரங்களும் அமைந்துள்ளன. ஆயத்திற்குள் செல்ல பெரிய கற்பாலம் அமைந்துள்ளது. இந்தப் பாலத்தின் கீழே பெரிய அகழி ஒன்று உள்ளது. கற்பாலத்தின் இரு புறங்களிலும் 50க்கும் மேற்பட்ட காவல் தெய்வங்கள் நின்ற நிலையில் காணப்படுகின்றன.
இந்த கோவிலானது சுமார் 200 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் ஒரு பக்க சுற்று சுவரே சுமார் 3.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது. விஷ்ணுவுக்காக கட்டப்பட்ட இந்தக் கோக்கோவில் கடவுள்களின் இருப்பிடமாகக் கருதப்படும் மேரு மலையினைக் குறிப்பதாக உள்ளது. மத்திய கோபுரங்கள், மேரு மலையின் ஐந்து சிகரங்களைக் குறிக்கின்றது.
மூன்று சதுர கூடங்கள், மத்திய கோபுரத்துடன் இணைந்துள்ளது. இக்கூடங்களும், கோபுரமும் அரசன், பிரம்மா, சந்திரன் மற்றும் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
முதல் மண்டபத்தின் வெளிப்புறம் சதுரத் தூண்களையும், உட்புறம் மூடிய சுவரையும் கொண்டுள்ளது. தூண்களுக்கு இடைப்பட்ட விதானம் தாமரை வடிவ அலங்காரங்களைக் கொண்டுள்ளது.
இரண்டாவது மண்டபத்தின் உட்சுவர்களில் வரிசையாக அமைந்த புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. மேற்குப் பக்கச் சுவரில் மகாபாரதக் காப்பியக் காட்சிகள் காணப்படுகின்றன.
மூன்றாவது மண்டபம், உயர்ந்த மேல்தளத்தின் மீது ஒன்றோடொன்று மண்டபங்களால் இணைக்கப்பட்ட ஐந்து கோவில்களைச் சூழ அமைந்துள்ளது. மண்டபங்களின் கூரைகள், பாம்புகளின் உடல்களையும், சிங்கம் அல்லது கருடனின் தலையையும் கொண்ட உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
ஆராய்ச்சியில்
இருந்து அறிந்தவைகள் :
1860ல் ஹென்றி முஹோட் என்ற ஆராய்ச்சியாளர் பட்டுப்பூச்சிகள் பற்றி ஆய்வு மேற்கொள்வதற்காக கம்போடியா சென்றார். அங்குள்ள காடுகளை அவர் வலம் வந்தபோது பாழடைந்து கிடந்த இந்த கோவிலை கண்டார். அவரைத் தொடர்ந்து பல தொல்பொருள் ஆய்வாளர்கள் அந்த பகுதிக்கு வந்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.
கி.பி.13ம் நூற்றாண்டில் அங்கோர்வாட் நாட்டின் அரண்மனைக்கு சென்ற ஒரு வரலாற்று சீனப்பயணி, அந்த அரண்மனையில் வேலைக்கார பெண்கள் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேல் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இவற்றை வைத்து பார்க்கும்போது, அந்த காலத்தில் உலகின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றாக அங்கோர்வாட் இருந்தது தெரிய வருகிறது. 15ம் நூற்றாண்டில்தான் அந்த பகுதி அழிந்துவிட்டது. பெரிய படையெடுப்பு, வெள்ளப்பெருக்கு அதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.
சிறப்புகள் :
இந்த 2015 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை. வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்தில் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது.
இந்த ஆலயத்தை சிறப்பிக்கும் வகையில் கம்போடிய நாட்டு அரசு தேசியக்கொடியில் தேசிய சின்னமாக அங்கோர்வாட் கோவிலின் படத்தை பொறித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக