>>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    ஞாயிறு, 13 அக்டோபர், 2019

    நேர்மை..!

     Image result for நேர்மை.

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

    Follow Us:

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com





    பழமுதிர் சோலை என்ற நாட்டை ஆதவன் என்ற மன்னன் ஆண்டு வந்தார். அவர் நீதி நெறி தவறாதவர், உண்மையை மட்டும் பேசுபவர். தன்னைப் போலவே தன் குடிமக்களும் இருக்க வேண்டும் என்று விரும்புபவர். ஆனால், அவருக்கு திருமணமாகி நீண்ட நாட்களாகியும் குழந்தைகள் இல்லை. தனக்கு பின் தன் நாட்டை ஆள்வதற்கு தக்க வாரிசுகள் இல்லாததால், தன் நாட்டு மக்களில் நீதியும், நேர்மையும் தவறாத உண்மையான ஒரு இளைஞனைக் கண்டுபிடித்து, அவனை மன்னனாக்க வேண்டும் என்று விரும்பினார்.

    அதற்காக நாட்டில் உள்ள வீரமிக்க இளைஞர்களை அழைத்து வில் போட்டி நடத்தி பரிசீலனை செய்தார். அதன்பின்பு, வாய் மொழிக் கேள்விகள், சமயோசிதமான கேள்விகள் என்று ராணுவத்திற்கு ஆள் எடுப்பதைப் போல அவர்களிடம் கேள்விகளை கேட்டு சோதித்தார். இறுதியாக, பத்து இளைஞர்களை தேர்ந்தெடுத்தார். பின்பு அவர்கள் அனைவரிடமும் தனித்தனியாக ஒரு செடியின் விதையைக் கொடுத்தார்.

    இந்த விதையை ஒரு தொட்டியில் போட்டு வளர்த்து கவனமுடன் கண்காணித்து ஆறு மாதம் சென்ற பிறகு வளர்த்த செடியுடன் என்னிடம் வர வேண்டும். இதுதான் நான் உங்களுக்கு வைக்கக்கூடிய இறுதி கட்டச் சோதனை என்று கூறினார். எல்லோரும் மன்னர் சொன்னபடி அந்த விதையைத் தொட்டியில் போட்டு உரங்களையும், எருவையும் இட்டு வளர்க்க ஆரம்பித்தனர்.

    ஆனால், அதில் சரண் என்பவனுக்கு மட்டும் என்ன காரணத்தினாலோ அவனது விதை முளைத்துச் செடியாகவில்லை. மற்றவர்களின் வீட்டுக்கு சென்று அவர்கள் செடி வளர்ந்திருக்கிறதா என்று அவன் பார்த்த போது, மற்றவர்களின் விதையானது நன்றாக முளைவிட்டு செழித்து வளர ஆரம்பித்திருந்தது. தன்னிடமுள்ள விதை செடியாக எல்லா விதமான முயற்சிகளையும் செய்தான்.

    ஆனால், அந்த விதை முளைக்கவில்லை. ஆறு மாதம் வரை பொறுத்திருந்து பார்ப்போம். அப்போதும் விதை முளைக்காவிட்டால், அரசரிடம், என் விதை மட்டும் முளைவிக்கவில்லை என்று உண்மையைக் கூறுவோம் என்று எண்ணினான். ஆறு மாதத்திற்கு பிறகு வெற்றிப் பெருமிதத்துடன் ஒன்பது பேரும் தங்கள் கையில் தொட்டியை ஏந்தி வந்தனர். அதில் இரண்டடி நீளத்துக்குச் செடி வளர்ந்திருந்தது. மன்னர் எல்லாருடைய தொட்டிகளையும் பார்த்துக் கொண்டே வந்தார். சரணிடம் வந்ததும் மன்னரின் முகம் மாறியது. அவனை உற்றுப் பார்த்த மன்னர் அவனிடம் அதிகாரமாக உன்னுடைய பெயர் என்ன? என்று கேட்டார். என் பெயர் சரண். தயவு செய்து என்னை மன்னிக்க வேண்டும்.

    அரசே.! நான் ஆறு மாத காலமாக இந்த விதையைச் செடிகளாக்க பாடுபட்டேன். ஆனால், உண்மையிலேயே என்னால் அதைச் செடியாக்க முடியவில்லை. என்னை நம்புங்கள் அரசே! என்று மண்டியிட்டு கதறினான். மன்னர் கீழே குனிந்து அவனைத் தூக்கி மார்போடு அணைத்து எதிர்கால மன்னனைத் தேர்ந்தெடுக்கவே இப்போட்டிகளை வைத்தேன். அதில் வென்றவனாக இந்த சரணை அறிவிக்கிறேன்.

    இதைக் கேட்ட அனைவரும் வியப்படைந்தனர். முதல் மந்திரி எழுந்து, அரசே, தாங்கள் சொன்னபடி ஒரு செடி கூட வளர்க்கத் தெரியாத இந்த வாலிபனா எதிர்கால மன்னன்? வெறும் பூந்தொட்டியைக் காட்டிய இவனா இந்த நாட்டுமன்னன்? என்று கேட்டார்.

    அமைச்சரே, நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டீர்கள். நான் பத்து இளைஞர்களுக்கும் செடி வளர்க்கக் கொடுத்த பத்து விதைகளும் நன்றாக வேகவைக்கப்பட்டு உலர்த்தப்பட்ட விதைகள். அதில் எந்தச் செடியும் முளைக்காது. என்னிடமிருந்து பரிசுகளோ, பதவியோ பெறுவதற்காக மற்ற இளைஞர்கள் வேகவைக்கப்பட்ட விதைகளைத் தூக்கி எறிந்துவிட்டு, அதற்குப் பதிலாக அதே போன்ற நல்ல விதைகளை வாங்கிப் பயிரிட்டுச் செடிகளாக்கிக் கொண்டு வந்திருக்கின்றனர்.

    ஆனால் சரண் அப்படிச் செய்யவில்லை. அரச கட்டளையை ஏற்று ஆறு மாத காலம் போராடிப் பார்த்திருக்கிறான். விதை முளைக்கவில்லை என்றதும், அதை உள்ளபடியே என்னிடம் அறிவிக்கக் காலித் தொட்டியுடன் வந்தான். இப்படி நேர்மையாக நடந்து கொண்டதன் மூலமாக அவனால் நிச்சயம் நாடு செழிக்கும், அதனால்தான் அவனை மன்னனாக அறிவித்தேன் என்றார். மன்னரின் அறிவுக்கூர்மையை எண்ணி அனைவரும் வியந்து பாராட்டினர்.


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக