Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

ஞாயிறு, 13 அக்டோபர், 2019

சாயா கிரகங்கள் என்றால் என்ன?

Image result for சாயா கிரகங்கள் என்றால் என்ன?
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



நிழல் கிரகங்கள் தான் சாய கிரகங்கள் ஆகும். அந்த கிரகங்களை பார்க்க முடியாது. அதில் ராகுவும், கேது, மாந்தி (குளிகன்) ஆகிய மூவரும் அடங்குவர். சிலர் சனியை சாயா கிரகம் என்பர். சாயாவின் மகன் சனி ஆவார். அதற்காக சனியானவர் சாய கிரகம் என்ற வாதத்தை சிலர் ஏற்க மாட்டார்கள்.
காரணம் சாய கிரகங்களை கண்களால் பார்க்க இயலாது. அவைகளை காட்ட விஞ்ஞானப்படி இயலாது. சிலர் ராகுவும்/ கேதுவும் பூமியின் இரு துருவங்கள் (north & south poles) என்பர்.
இந்த நிழல் கிரகங்கள் பெரும்பாலும் பாபக் கிரகங்கள் தான். இரவில் தான் இவை அதிக வலுவுடன் இருக்கும். அதாவது எங்கெல்லாம் சூரியன் அஸ்தமனம் அடைகிறதோ அங்கெல்லாம் இந்த சாய கிரகங்கள் பலம் பெரும். கிரகண காலத்தில் இவை பலம் பெரும். ஒருவர் ஜாதகத்தில் இவை பலம் பெற்றால் அரக்கர் போல அந்த ஜாதகர் இருப்பார்.
அவரது சிந்தனை, செயல் எல்லாம் அப்படித் தான் இருக்கும். பிரதோஷ காலம், சூரியன் அஸ்தமிக்கும் அந்த குறிப்பிட்ட நேரம், கிரகண காலம் ஆகிய காலத்தில் கணவன், மனைவி உடலுறவு கொண்டால் பிறக்கும் குழந்தை அதர்ம வழியில் செல்வான் என்கிறது சில சாஸ்த்திரங்கள். காலை வேளையில் அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் கணவன், மனைவி உடல் உறவு கொண்டால் தர்ம வழியில் நடக்க கூடிய நல்ல சந்ததி பிறக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக