Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 19 அக்டோபர், 2019

ராகு, கேதுவைப் பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?

 Image result for ராகு, கேது :
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


ராகு, கேது :

நிழல் என்பது உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்களுக்கும் உண்டு. நம் நிழல் நாம் செய்யும் பாவ, புண்ணிய காரியங்களில் கூடவே இருக்கும். தன்னைப் பற்றி அறிந்தவன் தானே என்னும் செருக்கு கொண்டவர்களுக்கு தெரியாது, தன்னைப் பற்றி இன்னொருவன் நன்கு அறிவான் என்று. அவன் தான் நம்முடைய நிழல்.

 அந்த நிழலை போல், நாம் செல்லும் இடங்கள் செய்யும் கர்ம காரியங்களை குறிப்பெடுத்து, அதனால் விளையும் நன்மை, தீமைகளை இனி வரும் பிறவிகளில் சரிவர அனுபவிக்க வைக்கும் நிழல் கிரகம் எனப்படும் ராகு, கேதுவை பற்றி நாம் இனி காண்போம்.

ராகு பகவானுக்குரிய மலர் = மந்தாரை மலர்

ராகு பகவானுக்குரிய தானியம் = உளுந்து

 ராகு பகவானுக்குரிய நவரத்தினம் = கோமேதகம்

 ராகு பகவானின் ஆதிக்க எண் = 4

 ராகு பகவானின் அதிதேவதை = பத்ரகாளி, துர்க்கை

 ராகு பகவானின் வடிவம் = முச்சில் வடிவம்


 கேது பகவானுக்குரிய மலர் = செவ்வரளி

 கேது பகவானுக்குரிய தானியம் = கொள்ளு

 கேது பகவானுக்குரிய நவரத்தினம் = வைடூரியம்

 கேது பகவானின் ஆதிக்க எண் = 7

 கேது பகவானின் அதிதேவதை = விநாயகர், இந்திரன்

 கேது பகவானின் வடிவம் = நீண்ட உருவம்


காயத்ரி மந்திரம் :

ராகு :

நாக த்வஜாய வித்மஹே!

பத்ம ஹஸ்தாய தீமஹி!

தந்நோ ராகு ப்ரசோதயாத்!

கேது :

அச்வ த்வஜாய வித்மஹே!

சூல ஹஸ்தாய தீமஹி!

தந்நோ கேது ப்ரசோதயாத்!

ராகு, கேதுவின் இயல்புகள் :

 ராகு, கேதுவிற்கு கிரகங்களே சுய உருவங்களோ இல்லை. இவர்கள் நிழல் கிரகங்களே.

 ராகு மனதில் விபரீத ஆசைகளை தூண்டக்கூடியவர்.

 கேது மனதில் ஆன்மிக எண்ணங்களை ஊக்குவித்து மோட்ச நிலைக்கு அழைத்து செல்பவர்.

பிரம்மதேவரின் கட்டளை என்ன? :

 பிரம்மதேவன் படைத்தல் தொழிலை மேற்கொண்டார். அப்போது படைத்தல் தொழிலுக்கு உதவியாக ஏழு சப்த ரிஷிகளைப் படைத்தார். அந்த சப்த ரிஷிகளில் ஒருவர் மரீசியும் ஆவார். மரீசியின் மகன் கசியபர் ஆவார்.

 கசியபர் பல வேதங்களையும், உபநிடங்களும் கற்று பண்டித்துவம் பெற்று விளங்கினார். இவர் தட்சப் பிரஜாபதியின் பெண்களில் 13 பெண்களை மணந்து, இந்த பூவுலகில் ஓரறிவு முதல் ஆறறிவு வரையான அனைத்து உயிர்களையும் படைத்தார்.

  கசியருக்கும், அவரது இரண்டாவது மனைவியான திதிக்கும் கீரண்யன், கீரண்யாட் சன் என்ற இரு அசுரர்களும், சிம்கிகை என்ற அசுர புத்திரியும் பிறந்தனர். கசியருக்கும், அவரது மற்றொரு மனைவி தனுவிற்கும் விப்ரசித்து என்ற புத்திரன் பிறந்தார்.

 விப்ரசித்துவானவன் சிம்கிகையை திருமணம் செய்து கொண்டான். ஆனால், இவர்கள் இருவரும் அண்ணன் தங்கை என்ற போதிலும் அக்காலத்தில் பிரஜா உற்பத்தி என்பதற்காக சகோதர உறவு முறையில் திருமணம் நடைபெற்றதை ஏற்றுக் கொண்டனர்.

 பிற்காலங்களில் இதை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பதற்காக ரிஷிமூலம், நதிமூலமும் பார்க்கக்கூடாது என்று கூறினார். பிரம்மதேவரின் கட்டளைப்படி ரிஷிகள் உயிர்களின் உற்பத்தியை தொடங்கினார்கள். அதில் அசுரர்கள், மானிடர்கள் மற்றும் தேவர்கள் என்னும் குழுமங்களாக பிரிந்தனர். இதில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி போர்கள் ஏற்பட்டன. இதில் இரு பக்கங்களிலும் இழப்புகள் இருந்தன.

தேவர்கள் யாரின் உதவியை நாடினர்? :

 தேவர்களும் அசுரர்களின் தாக்குதலில் இருந்து மரணம் என்பதை அடையாமல் இருக்க ஏதாவது வழி உள்ளதா என மகாவிஷ்ணுவிடம் அணுகி சாகா வரத்தினை கேட்டனர்.

 அப்போது அருள் பாவித்த விஷ்ணு, திருப்பாற்கடலை கடைந்தால் அமுதம் வரும் அதை உட்கொண்டால் மரணமில்லா வாழ்வை வாழலாம் என கூறினார். தேவர்கள் விஷ்ணுவின் கூற்றை நினைவிற்கொண்டு கடக ராசியில் உள்ள திருப்பாற்கடலை கடைய முடிவெடுத்தனர்.

 கடலை கடைய வேண்டும் என்றால் பெரிய மத்தும், கயிறும் தேவைப்படும். எனவே மந்தார மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிராகவும் அமைத்து கடலை கடைய முற்பட்டனர். அப்போது தேவர்களின் எண்ணிக்கை போதவில்லை. அதனால் அவர்கள் நாத மகரிஷியின் உதவியை நாடினார்.

 எங்கள் பலத்திற்கு ஈடான அசுரர்களை சேர்ந்து உதவினால் கடலை கடைய முடியும் என்றனர். நாதமுனிவரும் அசுரர்களின் அரசனான மகாபலிச் சக்கரவர்த்தியை சந்தித்து ஆசை வார்த்தைக் கூறி அவர்களையும் கடைய அழைத்து வந்தார். அதாவது கிடைக்கும் அமிர்தத்தில் இருவரும் சரியாக பிரித்து எடுத்து கொள்வோம் என்பதே ஆசை வார்த்தையாகும்.

 இரு தரப்பினரும் கடைய முற்பட்டபோது யார் தலையை பிடிப்பது, யார் வாலை பிடிப்பது என்பது பற்றி விவாதம் ஏற்பட்டது. அதில் அசுரர்கள் தலைப்பகுதியை தான் பிடிப்போம் என்றும், வால் பகுதியை பிடிக்க மாட்டோம் என்றும் கூறினார். பின் தேவர்களும் சரியென ஒப்புக் கொண்டு கடைந்தனர். அவர்கள் இருவரும் மலையை கடைய ஆரம்பித்தனர்.

 கடலின் ஆழம் அதிகமாக இருந்தது. பின் அங்குள்ள சேற்றால் மலை சுழல சிரமமாக இருக்க மகாவிஷ்ணு கூர்ம அவதாரம் எனும் ஆமை உருவம் எடுத்து மலையை தனது முதுகு ஓட்டின் மீது நிலை நிறுத்திக் கொண்டார். பின் இரு தரப்பினரும் இணைந்து மலையை வைத்து எளிதாக திருப்பாற்கடலை கடைந்தனர்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக