Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 4 அக்டோபர், 2019

Gmail Tips: நாளை அனுப்ப வேண்டிய இமெயிலை இன்றே Schedule செய்வது எப்படி?

 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


இப்படி ஒரு ஜிமெயில் தந்திரம் இருப்பது தெரியாமல் அலாரம் வைத்து இமெயில் அனுப்பி இருந்தால், நீயும் என் தோழனே / தோழியே! ஆனால் இனிமேல் அலாரத்திற்கும் ரீமைண்டருக்கும் வேலை இல்லை!


சாலையோரம் ஸ்கூட்டரை ஓரமாக நிறுத்தி விட்டு அல்லது பரபரப்பாக இயங்கும் பேருந்திற்குள் ஜன்னலோர சீட்டில் செட்டில் ஆகிவிட்டு டைப் செய்யும் அனைவருமே யாருடனோ வாட்ஸ்அப் சாட் செய்கிறார்கள் என்று அர்த்தமில்லை. அவர்கள் ஒருவேளை அலுவலகம் சார்ந்த இமெயில்களை கூட டைப் செய்து கொண்டு இருக்கலாம்.

யாருக்கு தெரியும்? அவரவர் இடத்தில் இருந்தால் தான் அந்த "வெப்பம்" புரியும். ஆனால் தோழமைகளே! கவலை வேண்டாம், நான் அதை மிகவும் எளிமையாக புரிந்து கொள்வேன், ஏனெனில் நான் ஊடகவாதி.

உணவு அருந்தும் போது கையை கழுவிட்டு மெயிலுக்கு ரிப்ளை செய்த அனுபவமும் எனக்கு உண்டு, பாதி குளியலில் "அச்சோ.. மறந்து விட்டோமே!" என்று முகத்தை மட்டும் துடைத்துக்கொண்டு வெளியே வந்து மெயில் அனுப்பிய அனுபவமும் உண்டு!

 ஒரு கட்டத்திற்கு மேல் "இப்படி" அவசர அவசரமாக மெயில் அனுப்பும் அனுபவத்தை நான் சந்திக்கவே இல்லை, ஏனெனில் ஜிமெயிலில் இமெயில்களை Schedule செய்யும் அம்சம் இருக்கிறது என்பது எனக்கு தெரிய வந்தது. அன்று முதல் இன்று வரையிலாக, ஒரு வகையான "சென்" நிலையில் தான் இமெயில்களை கையாண்டு வருகிறேன்.

அந்த "சென் நிலையை" நீங்களும் அடைய விரும்புகிறீர்களா? வாருங்கள் உங்களுக்கும் அந்த ஜிமெயில் தந்திரத்தை கற்றுக்கொடுக்கிறேன்.

யாருக்கெல்லாம் அணுக கிடைக்கும்?

இமெயில்களை Schedule செய்யும் அம்சம் ஆனது Android மற்றும் iOS ஆகிய இரண்டிற்குமான Gmail ஆப்பில் அணுக கிடைக்கிறது. ஆக ஆப்பிள் யூஸர் vs ஆண்டராய்டு யூஸர் என்கிற சண்டைக்கு இங்கே இடமில்லை! சரி இந்த ஜிமெயில் அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றி பார்க்கலாம்!

01. முதலில் நீங்களொரு இமெயிலை Compose செய்ய வேண்டும். அதற்காக முதலில் ஜிமெயில் ஆப்பை திறக்கவும்.

02. இப்போது கீழ்-வலது மூலையில் இருக்கும் பிளஸ் அடையாளம் போன்ற வட்ட பொத்தானை அகிளிக் செய்யவும்.

03. இது உங்களை Compose செய்யும் ஸ்க்ரீனுக்கு அழைத்துச் செல்லும்.

04, அங்கே மின்னஞ்சல் முகவரி, சப்ஜெக்ட் மற்றும் இமெயில் பாடி ஆகியவற்றை நிரப்புங்கள், அதாவது வழக்கமாக ஒரு மின்னஞ்சலை உருவாக்குவது போல.

05. இப்போது மேல்-வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும்.

06. இப்போது உங்கள் ஸ்க்ரீனில் ஒரு பாப் அப் தோன்றும், அதில் முதல் விருப்பமாக "Scheduled send" இருக்கும், அதை கிளிக் செய்யவும்.

07. இப்போது நான்கு விருப்பங்களை உள்ளடக்கிய ஒரு புதிய பாப் அப் தோன்றும். அதில் tomorrow morning, this afternoon, Monday Morning மற்றும் Pick Date & Time போன்ற விருப்பங்களை காண்பீர்கள்.

08. கடைசி மற்றும் நான்காவது விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்யும் பட்சத்தில், குறிப்பிட்ட இமெயிலை அனுப்பும் நேரம் மற்றும் தேதியை நீங்களே முடிவு செய்யலாம்.

09. குறிப்பிட்ட விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்ததும், உங்களின் தேர்வின் படி குறிப்பிட்ட நேரம் மற்றும் தேதியில் உங்கள் மின்னஞ்சல் "தானாக" அனுப்பப்படும்.


Schedule செய்யப்பட்ட Email-ஐ எங்கு சென்று சரிபார்ப்பது?

ஒருவேளை நீங்கள் schedule செய்த இமெயிலை நீங்கள் பார்க்க விரும்பினால், ஜிமெயில் ஆப்பிற்குள் நுழைந்து இடது மூலையில் உள்ள hamburger button-ஐ (மூன்று கோடுகள்) கிளிக் செய்யவும்.

பின்னர் Scheduled என்பதை கிளிக் செய்யவும். அங்கே schedule செய்யப்பட்ட மின்னஞ்சல்களின் பட்டியலை, அவற்றின் திட்டமிடப்பட்ட நேரம் மற்றும் தேதியுடன் இருப்பதை காணலாம்.

Schedule செய்த Email-ஐ ரத்து செய்வது எப்படி?

ஒருவேளை குறிப்பிட்ட schedule இமெயிலை நீங்கள் ரத்து செய்ய விரும்பினால், அதை வெறுமனே கிளிக் செய்து cancel send எனும் விருப்பத்தை கிளிக் செய்யுங்கள், அவ்வளவுதான். இந்த வழியாக தேதியை திருத்த முடியுமா என்று கேட்டால் - முடியாது! எனவே கவனமாக schedule செய்யவும்!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக