இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நடுத்தர
மற்றும் ஏழை மக்களுக்கும் குறைந்த விலையில் வீடுகள் கிடைக்கும் விதத்தில், நாடு
முழுவதும் நூற்றுக்கணக்கான கட்டுமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
2022 - ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் வீடு என்ற இலக்கை எட்ட மத்திய
அரசு பல்வேறு குடியிருப்புக் கட்டுமான திட்டங்களை ஊக்குவித்து வருகிறது.
குறிப்பாக,
நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை, ரியல் எஸ்டேட் துறையிலும்
கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக,
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசியபோது,
"நடுத்தர வர்க்கத்தினர், ஏழை மக்களுக்கும் நியாயமான விலையில் வீடு கிடைக்கும்
நோக்கத்துடன் நாடு முழுவதும் பல்வேறு கட்டுமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு
வருகின்றன.
இவற்றில்,
பொருளாதார மந்த நிலை காரணமாக, சுமார் 1,600 கட்டுமான திட்டங்கள் முடங்கியுள்ளன.
இத்திட்டங்களுக்குப்
புத்துயிர் அளிக்கும் நோக்கத்துடன் 25,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்புத்
திட்டம் செயல்படுத்தப்படும்.
இதில்
10,000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கும். மீதமுள்ள 15,000 கோடி ரூபாய், இந்திய
ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி), ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ)
உள்ளிட்டவற்றிடமிருந்து பெறப்படும். இந்தச் சிறப்புத் திட்டத்துக்கு பிரதமர்
தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்
அளிக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
இந்த
25,000 கோடி ரூபாயில் மும்பையில் நடைபெற்று வரும் 2 கோடிக்கும் குறைவான
புராஜெக்ட்களுக்கும், சென்னை மற்றும் சென்னை மாதிரியான மெட்ரோ நகரங்களில்
நடைபெற்று வரும் ஒரு கோடிக்கும் குறைவான புராஜெக்ட்களுக்கும், டெல்லி என்.சி.ஆர்
பகுதிகளில் நடைபெற்று வரும் 1.5 கோடி ரூபாய் புராஜெக்ட்களுக்கும் முதலீடு
செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த
25,000 கோடி முதலீட்டின் மூலம், முடங்கியுள்ள 1,600 கட்டுமானத்திட்டங்களில், 4.58
லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக