இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இந்தியாவின்
முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன்- ஐடியா மற்றும் ரிலையன்ஸ்
கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் சுமார் 1
லட்சம் கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தைச் சந்தித்துப் பெரும் அதிர்ச்சியைக்
கொடுத்துள்ளது.
இந்த
அதிர்வுகள் அடங்குவதற்குள் மும்பை பங்குச்சந்தையில் டெலிகாம் நிறுவன பங்குகள்
தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதற்கு என்ன காரணம் தெரியுமா..
இந்திய
டெலிகாம் துறை
இந்தியாவில்
கடந்த 5 வருடத்தில் வேகமாக வளர்ந்த 5 துறைகளில் மிகவும் முக்கியமானது டெலிகாம்
துறை என்றால் மிகையில்லை. இதில் ஜியோ-வின் வருகை ஒரு பக்கம் இருக்கட்டும், 2ஜியில்
இயங்கிய நாம் கடந்த 5 வருடத்தில் 3ஜி, 4ஜி தற்போது 5ஜி டெக்னாலஜியை பயன்படுத்த
தயாராகி வருகிறோம். சீனா - அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பிரச்சனை தீர்ந்தால்
அடுத்த ஒரு வருட காலத்தில் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளைப் போல இந்தியாவிலும் 5ஜி
சேவைகள் எளிதாகக் கிடைக்கக் கூடிய ஒன்றாக மாறிவிடும்.
ஜியோ
முக்கியதுவம்
இந்த
வேகமான வளர்ச்சிக்கும், மக்களின் அடிப்படை பயன்பாட்டில் மாற்றம்
ஏற்படுத்தியதிற்கும் ஜியோ முக்கியமான காரணம். இன்று இந்தியாவில் சின்னச் சின்னக்
கிராமங்களிலும் 3ஜி, 4ஜி வேகத்தில் இண்டர்நெட் பயன்படுத்துகிறோம் என்றால் அதற்கு
முகேஷ் அம்பானியின் ஜியோ-வின் அறிமுகம் தான்.
ஜியோவின்
அறிமுகத்தால் மக்களுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைத்தாலும், டெலிகாம் துறையில்
ஜியோவின் சக போட்டி நிறுவனங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது.
பாதிப்புகள்
ஜியோவின்
அறிமுகத்தின் முதலே ஏர்டெல், வோடபோன், ஐடியா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் போன்ற
அனைத்து நிறுவனங்களும் கடுமையான வர்த்தகப் பாதிப்பைச் சந்தித்தது. இந்தப்
பாதிப்பைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் செப்டம்பர் 30 உடன் முடிந்த
காலாண்டில் ஏர்டெல், வோடபோன்-ஐடியா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய 3
நிறுவனங்களும் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தைச் சந்தித்து
முதலீட்டாளர்களும், மத்திய அரசுக்கும், மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை
அளித்துள்ளது.
1
லட்சம் கோடி ரூபாய்
1
லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் என்பது பெரு நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய சுமை தான்.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் ஏர்டெல், வோடபோன்-ஐடியா நிறுவன பங்குகள் மும்பை
பங்குச்சந்தையில் பட்டையைக் கிளப்பி வருகிறது. இந்த அதிரடி ஆட்டத்திற்கு முக்கியக்
காரணம் மோடி அரசு அறிவித்துள்ள ஒரு முக்கிய அறிவிப்பு தான்.
ரிலையன்ஸ்
கம்யூனிகேஷ்ன்ஸ்
வர்த்தகத்தை
முழுவதுமாக மூடிவிட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கூட 3.39 சதவீதம் உயர்ந்து 0.61
ரூபாய்க்கு வர்த்தகமானது. செப்டம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
நிறுவனம் 30000 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தைச் சந்தித்த நிலையில் இந்நிறுவனத்தின்
4 உயர் அதிகாரிகள் ராஜினாமா செய்துவிட்டு நிறுவனத்தை விட்டு வெளியேறினர்.
வோடபோன்-ஐடியா
வெள்ளிக்கிழமையைத்
தொடர்ந்து திங்கட்கிழமையும் வோடபோன்-ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவன பங்குகள்
அதிகளவிலான வளர்ச்சியை அடைந்து வருகிறது. இதில் முக்கியமாக வோடபோன்-ஏர்டெல்
வெள்ளிக்கிழமை 24 சதவீதமும், இன்று காலையில் 21 சதவீத வளர்ச்சியும் அடைந்தது.
இதனால்
15ஆம் தேதி வெறும் 2.80 ரூபாய்க்கு வர்த்தகமான வோடபோன்-ஐடியா பங்குகள் இன்று 4.40
ரூபாய் வரையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
பார்தி
ஏர்டெல்
இதேபோல்
நாட்டின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாகக் கருதப்பட்ட (ஜியோ வருகைக்கு முன்)
பார்தி ஏர்டெல் 353 ரூபாயிலிருந்து வெறும் 2 நாள் வர்த்தகத்தில் 408.85 ரூபாய்க்கு
வர்த்தகம் செய்யப்படுகிறது. இவை எல்லாவற்றுக்கும் மோடி அரசு எடுத்துள்ள முக்கியமான
முடிவு தான்.
மோடி
அரசு
நஷ்டத்திலும்,
வர்த்தகப் பாதிப்பிலும் தவித்து வரும் டெலிகாம் நிறுவனங்களை மீட்டு எடுக்க மோடி
தலைமையிலான மத்திய அரசு புதிய முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவின் படி இனி மொபைல்
அழைப்புகள் மற்றும் மொபைல் டேட்டா-விற்கு மத்திய அரசு குறைந்தபட்ச கட்டணத்தை
நிர்ணயம் செய்யப்போவதாகத் திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக டெலிகாம் நிறுவன பங்குகள்
சரிவில் இருந்து நிச்சயம் மீட்டு வரும் எனத் திட்டமிடப்பட்டு உள்ளதாக ஜியோஜிட்
பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி தலைவர் வினோத் நாயர்
தெரிவித்துள்ளார்.
இதன்
காரணமாகவே கடந்த 2 வர்த்தக நாளில் சரிவில் இருந்த டெலிகாம் நிறுவன பங்குகள்
அனைத்தும் அளவு கடந்த வளர்ச்சியைச் சந்தித்து உள்ளது.
யாருக்கு
லாபம்..?
மோடி
அரசின் திட்டத்தின் படி, குறைந்தபட்ச கட்டணங்கள் நிர்ணயம் செய்வது டெலிகாம்
நிறுவனங்களுக்கு நிலையான வருமானத்தைப் பெற்று தரக்கூடியவை தான். ஆனால் அந்தக்
கட்டணம் தற்போது இருக்கும் அளவுகளை விடவும் அதிகமாக இருந்தால் மக்கள் தான் அதிகக்
கட்டணத்தைக் கொடுத்து மொபைல் சேவைகளைப் பயன்படுத்த வேண்டிய நிலைமை வரும் இது
மக்கள் மத்தியில் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும்.
குழப்பம்
தற்போது
சந்தையில் மொபைல் அழைப்புகளுக்குக் கிட்டதட்ட முற்றிலும் இலவசமாகவே உள்ளது. மொபைல்
டேட்டா-விற்கு மட்டும் தான் கட்டணங்களைச் செலுத்தி வருகிறோம். இப்படி இருக்கும்
சூழ்நிலையில் மத்திய அரசு எந்தக் கட்டணத்தை எப்படி மாற்றப்போகிறது என்பது தான்
பெரிய குழப்பமாகவே இருக்கிறது.
மக்களைப்
பாதிக்காமல் கட்டணத்தை நிர்ணயம் செய்தால் சிறப்பாக இருக்கும் என்பது சமானிய
மக்களின் கருத்து.
வாசகர்கள்
ஆகிய நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைக் கமெண்ட் பகுதியில் பகிரவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக