இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஆந்திராவில்
மனைவி கொடுத்த மோரைப் பருகிய புதுமாப்பிள்ளை மயங்கி விழுந்துள்ளார்.
ஆந்திர
மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லிங்கமையா. இவருக்கு மதனந்தபுரம்
(Madanantapuram) கிராமத்தைச் சேர்ந்த நாகமணி என்ற பெண்ணுக்கும் கடந்த சில
தினங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமான 9வது நாளில் நாகமணியை அவரது
வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக லிங்கமையா இன்று காலை மதனந்தபுரம் கிராமத்துக்கு
வந்துள்ளார்.
அப்போது
நாகமணி தன் கணவருக்கு மோர் கொடுத்துள்ளார். இதைப் பருகிய சில நிமிடங்களில் அவர்
மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் மருத்துவமனைக்குக்
கொண்டு சென்றனர். தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது.
இதுதொடர்பாக
வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து
பேசிய லிங்கமையாவின் பெற்றோர்கள், இந்தத் திருமனம் நாகமணியின் சம்மதம் இன்றி
நடந்திருக்கலாம் எனச் சந்தேகமாக இருக்கிறது. ஒருவேளை அவரது பெற்றோரின் நிர்பந்தம்
காரணமாகத் திருமணத்துக்கு ஒத்துக்கொண்டிருக்கலாம் எனச் சந்தேகப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்துப்
பேசிய காவல்துறை அதிகாரிகள், ``லிங்கமையா மோர் அருந்தும்போதே ஒரு விதமான வாடை
வந்துள்ளது. சரி புளித்திருக்கும் அதனால் ஒரு விதமான வாடையாக இருக்கும் எனக் கருதி
குடித்துள்ளார். சிறிது நேரத்தில் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை உடனடியாக
அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தற்போது அவருக்கு அனந்தபூர் மாவட்ட
மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. விஷத்தின் சரியான தன்மை
தெரியவில்லை. இதில் நாகமணியின் பங்கு ஏதேனும் இருக்கிறதா என்று விசாரித்து
வருகிறோம். விசாரணைக்குப் பின்னரே திட்டமிட்ட செயலா, உணவில் இருந்த
நச்சுத்தன்மையின் காரணமா எனத் தெரியவரும்” என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக