இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பொதுவாக
நம் ஊரில் வேலைக்கு போவது என்றால்... முறையாக படித்து முடித்த சான்றிதழ், முந்தைய
பணி அனுபவம், ஒரு நல்ல ரெஸ்யூம்... போன்ற இத்தியாதிகளைத் தான் எடுத்துச் செல்வோம்.
அதன்
பின், பணித் தேர்வு, ஹெச் ஆர் இண்டர்வியூ என எல்லாம் முடிந்த பின், நம் ரெஸ்யூம்
அவர்களிடம் தான் இருக்கும். இந்த விவரங்களை வைத்து, நம்மைப் பற்றி வெளியில்
விசாரித்து தான் நமக்கு வேலை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றால்
நம்புவீர்களா..?
அது...
வந்து... என எல்லாம் இழுக்க வேண்டாம். அது தான் உண்மை என நெற்றியில் அடித்தாற்
போலச் சொல்லி இருக்கிறது ஹயர் ரைட் (Hire Right) என்கிற ஹெச்ஆர் நிறுவனம்.
சமீபத்தில்
ஹயர் ரைட் (Hire Right) நிறுவனம், உலகம் முழுக்க, பல்வேறு நிறுவனங்களில் வேலை
செய்யும் 4,000 ஹெச் ஆர் அதிகாரிகளிடம் ஒரு சர்வே எடுத்து இருக்கிறார்கள். இந்த
4,000 பேரில் 10 சதவிகிதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த
சர்வேயில் கேட்கப்பட்ட ஒரு முக்கிய கேள்வி "வேலைக்கு எடுக்கப்படுவதற்கு முன்,
வேலைக்கு சேர இருப்பவர்களைப் பற்றி விசாரிப்பீர்களா..?"
ஆம்
இதற்கு
விடை, ஆம். விசாரிப்போம் எனச் சொல்லி இருக்கிறார்கள் 80 சதவிகித இந்திய
நிறுவனங்கள். இந்த சரி பார்ப்பு நடவடிக்கையால், சரியான ஊழியர்களை தேர்ந்து எடுக்க
உதவியாக இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள். வேலைக்கு சேர இருப்பவர்களைப் பற்றி,
என்ன மாதிரி விசாரிப்பார்கள் என அடுத்த கேள்வி கேட்கத் தோன்றுகிறதா..? எனக்கும்.
என்ன விசாரணை
இந்திய
நிறுவனங்களைப் பொறுத்த வரை, 88 சதவிகித இந்திய நிறுவனங்கள், புதிதாக வேலைக்கு சேர
இருப்பவரைப் பற்றி முந்தைய நிறுவனத்தில் கேட்பார்களாம். 83 சதவிகித இந்திய
நிறுவனங்கள் நாம் படித்த கல்லூரிகளில் விசாரிக்கிறார்களாம். இதற்குப் பின் தான்
குற்றப் பின்னணி கொண்டவரா... போன்ற சட்ட ரீதியிலான விஷயங்களை விசாரிக்கிறார்களாம்.
உலகம்
ஆக,
சிவாஜி, எம் ஜி ஆர் காலத்தில் செய்தது போலத் தான், இப்போதும் வேலைக்கு எடுக்க
இருப்பவர்களைப் பற்றி முந்தைய நிறுவனங்களிலும், கல்லூரிகளிலும் விசாரித்துக்
கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உலகம், இன்று வேலைக்கு எடுக்க இருப்பவர்களின் சமூக
வலைதளங்கள், அவர்களின் சிறப்புக் கல்வித் தகுதி உரிமங்கள், அவரின் சிபில் ஸ்கோர்
போன்றவைகளை எல்லாம் சோதித்துக் கொண்டு இருக்கிறார்களாம்.
மறு சோதனை
வெளிநாடுகளில்,
ஒரு ஊழியருக்கு புதிதாக ஒரு பொறுப்பு கொடுக்க இருக்கிறார்கள் அல்லது முக்கிய
வேலைகளைக் கொடுக்க இருக்கிறார்கள் என்றால், மீண்டும் அந்த ஊழியரைப் பற்றி
விசாரிக்கிறார்கள். வெளி நாடுகளில் 29 சதவிகித நிறுவனங்கள் இந்த மறு சோதனை
செய்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அப்படி இரண்டாவது முறை விசாரிப்பது வெறும் 14
சதவிகிதமாக இருக்கிறதாம்.
பொய் வேண்டாம்
பொதுவாக
இன்றைய இணைய காலத்தில், ரெஸ்யூமில் பொய் சொல்வது மிகவும் குறைந்து இருக்கிறது.
ஆனாலும் அவ்வப் போது, செய்யாத வேலைகளை எல்லாம் ரெஸ்யூமில் சொல்லி வைக்கிறார்கள்.
அந்த ஊழியரைப் பற்றி முந்தைய நிறுவனங்களில் விசாரிக்கும் போது மாட்டிக் கொள்ளும்
செய்திகள் நம் நண்பர்கள் வழியாக வந்து கொண்டே தான் இருக்கிறது. எனவே இனி
ரெஸ்யூமில் செய்யாத வேலைகளைச் சொல்லி மாட்டிக் கொள்ளாதீர்கள் புள்ளீங்களா.
வாழ்த்துக்கள்
அதோடு
கூடிய விரைவில் நம் சமூக வலைதள கணக்குகள், நம் சிபில் ஸ்கோர் போன்றவைகளும்
சோதனைக்கு உள்ளாகலாம். எனவே உஷாராக இருங்கள். இன்று வேலை கிடைப்பது மிகவும்
சிரமம். அப்படி கிடைக்கும் வேலையை வெறும் வேலையாக மட்டும் பார்க்காதீர்கள்...
உங்களையும், உங்களைச் சார்ந்தவர்களையும் உயர்த்தும் நல்ல வாய்ப்பாக பாருங்கள். நம்
புள்ளிங்களுக்கு நல்ல வேலை கிடைத்து, மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக