இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
வோடபோன் நிறுவனம்
தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகிறது, அதன்படி
இந்நிறவனம் இன்று புதிய இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த
திட்டங்கள் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான்
கூறவேண்டும்.
வோடபோன்
நிறுவனம் தற்சமயம் மக்களுக்கு அதிகளவில் பயன்படும் சாசெட் பேக்குகளான ரூ.9 மற்றும்
ரூ.21 திட்டங்களை தான் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த திட்டங்களின் முழு
நன்மைகளையும் விரிவாகப் பார்ப்போம்.
வோடபோன்
ரூ.9-சாசெட் பேக்-ல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 100எம்பி டேட்டா,
வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் ஒரே ஒரு
நாளுக்கு மட்டும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வோடபோன் ரூ.21-சாசெட் பேக்
வோடபோன்
ரூ.21-சாசெட் பேக்-ல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 150எம்பி டேட்டா,
வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் இரண்டு
நாட்களுக்கு மட்டும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வோடபோன்
நிறுவனம் இதற்குமுன்பு அறிமுகம் செய்த ரூ.51-சாசெட் பேக் திட்டத்தில் ரீசார்ஜ்
செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. குறிப்பாக
இந்த திட்டத்தின் வேலிடிட்டி 7நாட்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ
ஜியோ
நிறுவனம் அன்மையில் ரூ.19 மற்றும் ரூ.52 திட்டங்களைத் தான் நீக்கியுள்ளது. குறிப்பாக
ரூ.19சாசெட் பேக் என்று கூறப்படும் திட்டம் ஆனது ஒரே ஒரு நாளைக்கு செல்லுபடியாகும்
ஒரு ப்ரீபெய்ட் திட்டமாகும். பின்பு ரூ.52 திட்டமானது மொத்தம் ஏழு நாட்களுக்கு
செல்லுபடியை கொண்டது ஆகும். குறிப்பாக ஜியோ நிறுவனம் இந்த சாசெட் பேக்குகளை
நீக்கியதை தொடர்ந்து வோடபோன் போட்டிக்கு தற்சமயம் இரண்டு திட்டங்களை அறிமுகம்
செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக