இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சென்னையில் கடந்த 30 ஆண்டுகளாக மனநலம் பாதித்த
மகனோடு போராட்டம் கலந்த வாழ்க்கையைப் பாசமாகக் கழித்துவந்துள்ளார் ஓய்வு பெற்ற
மத்திய அரசு ஊழியர் விஸ்வநாதன்.
சென்னை ஆழ்வார்பேட்டை, திரிவேணி அடுக்குமாடிக்
குடியிருப்பில் வசித்தவர் விஸ்வநாதன் (82). இவர், சென்னை சாஸ்திரி பவனில்
சுருக்கெழுத்தராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் மனைவி மீனாட்சி. இவர்களின்
ஒரே மகன் வெங்கட்ராமன் (44). கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் அந்தச் சோக சம்பவம்
விஸ்வநாதன் வீட்டில் நடந்தது.
பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த
வெங்கட்ராமனின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தன. வழக்கத்தைவிட கோபமாக இருந்த
வெங்கட்ராமன் தன்னையே மறந்து வீட்டிலிருந்த நாற்காலிகள், மேஜைப் பொருள்களை
உடைத்தார். மகனை, விஸ்வநாதன் மற்றும் அவரின் மனைவி மீனாட்சி இருவராலும்
கட்டுப்படுத்த முடியவில்லை.
விஸ்வநாதனின் வீடு |
மகனுக்கு
என்ன நடந்தது என்று தெரியாமல் இருவரும் குழப்பமடைந்தனர். வெங்கட்ராமனை,
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள்,
வெங்கட்ராமன் Schizophrenia என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று மருந்து
மாத்திரைகளைக் கொடுத்தனர். அதைச்சாப்பிட்ட பிறகாவது வெங்கட்ராமன் குணமாகிவிடுவான்
என்ற நம்பிக்கை விஸ்வநாதனுக்கும் மீனாட்சிக்கும் இருந்தது. ஆனால் அவர்களின்
நம்பிக்கையும் பொய்யானது.
விஸ்வநாதன்
வேலைக்குச் சென்றபிறகு வெங்கட்ராமனை மீனாட்சி கவனித்துவந்தார். நல்ல வேலை, கைநிறைய
சம்பளம் என்றாலும் விஸ்வநாதனின் வாழ்க்கையில் நிம்மதியில்லை. இருப்பினும் மகன்
செய்யும் சேட்டைகளுக்குக் கோபப்படாமல் குழந்தை போல பாசமாக இருவரும் கவனித்தனர்.
இந்தச் சமயத்தில் மகனுக்கு ஏற்பட்ட பாதிப்பு மீனாட்சியை மனதளவில் பெரிதும்
பாதித்தது. அதனால் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் மீனாட்சி இறந்தார்.
இதையடுத்து
வெங்கட்ராமனை விஸ்வநாதன் மட்டுமே கவனித்துவந்தார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற
பிறகு விஸ்வநாதனுக்கு மகனைக் கவனிப்பதே முழுநேர வேலையானது. விஸ்வநாதன்
குடியிருக்கும் வீட்டிலிருந்து அடிக்கடி சத்தம் கேட்கும். ஆனால் அந்த
அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ளவர்களுக்கு அது வழக்கமான ஒரு நிகழ்வானதால்
யாரும் பொருட்படுத்துவதில்லை.
இந்தச்
சமயத்தில்தான் கடந்த தீபாவளிக்குப் பிறகு விஸ்வநாதனின் வீடு உள்பக்கமாகப்
பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. கடந்த 31-ம் தேதி இரவு வீட்டுக்குள்ளிருந்து
தூர்நாற்றம் வீசுவதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்குத் தகவல்
தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ், சம்பவ இடத்துக்குச் சென்று கதவை உள்ளே
உடைத்துச் சென்றார். அப்போதுதான் வெங்கட்ராமன் இறந்துகிடந்தார். அவரின் சடலம்
அழுகிய நிலையில் காணப்பட்டது. மயக்க நிலையில் விஸ்வநாதன் இருந்தார். அவருக்கு
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 2-ம் தேதி
மருத்துவமனையில் மயக்கத்திலேயே விஸ்வநாதனின் உயிர் பிரிந்தது.
இதையடுத்து
விஸ்வநாதனின் சடலத்தை அவரின் சகோதரி மகன் சுப்பிரமணியம் என்பவரிடம் போலீஸார்
ஒப்படைத்தனர். இந்த வழக்கில் ஆரம்பத்தில் மகனை விஸ்வநாதன் கொலை செய்ததாகத் தகவல்
வெளியானது. ஆனால், விசாரணையில் வெங்கட்ராமன் தினமும் சாப்பிடும் மாத்திரையை
அதிகளவில் சாப்பிட்டதால் இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து
நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``விஸ்வநாதன் கண்விழித்திருந்தால்
வெங்கட்ராமன் எப்படி இறந்தார் என்ற தகவல் தெரிந்திருக்கும். `மாத்திரைகளை கேட்டு
வெங்கட்ராமன் அடிக்கடி அடம் பிடிப்பார். மேலும், அவர் கேட்கும் மாத்திரைகளை
விஸ்வநாதன் கொடுக்கவில்லையெனில் தந்தை என்றுகூட பார்க்காமல் அடித்து உதைப்பார்.
வெங்கட்ராமனால் கடந்த 30 ஆண்டுகளாக
விஸ்வநாதன் சொல்லக்கூட முடியாத அளவுக்கு சித்ரவதைகளை அனுபவித்துவந்தார்.
இருப்பினும் மகனுக்காக 82 வயதிலும் அனைத்தையும் பொறுத்துக் கொண்டார். குறிப்பாக
வீட்டுக்குள்ளேயே மலம், சிறுநீர் கழிக்கும் வெங்கட்ராமனை ஒரு குழந்தையைப் போல
கவனித்துவந்தார். தற்போது அவரும் உயிரிழந்துவிட்டார் என்று விஸ்வநாதனின் பக்கத்து
வீட்டைச் சேர்ந்தவர்கள் கூறினார்கள். அதன்பேரில் விசாரணை நடத்தினாலும் பிரேத
பரிசோதனை ரிப்போர்ட்டிலும் உயிரிழப்புக்கு அதிகளவில் மாத்திரைகளைச் சாப்பிட்டதே
காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
விஸ்வநாதனின்
உறவினர் சுப்பிரமணியமும், தன்னுடைய தாய்மாமன் விஸ்வநாதன் மற்றும் அவரின் மகன்
வெங்கட்ராமன் குறித்த தகவல்களை போலீஸாரிடம் கூறியுள்ளார். அதிகளவில் மாத்திரைகளைச்
சாப்பிட்ட வெங்கட்ராமன் மயங்கியதும் அதே மாத்திரைகளை விஸ்வநாதனும் சாப்பிட்டுத்
தற்கொலை செய்துள்ளார். இதனால்தான் இந்த வழக்கை இந்திய தண்டனைச் சட்டம் 174 என்ற
பிரிவின் கீழ் பதிவு செய்துள்ளோம்" என்றார்.
விஸ்வநாதன்
குறித்து ஒரு முக்கியத் தகவலை அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ளவர்கள்
போலீஸாரிடம் கூறியுள்ளனர்.
``முதுமை
காரணமாக விஸ்வநாதனுக்கும் உடல் ரீதியாக சில உபாதைகள் இருந்துவந்தன. இருப்பினும்
மகனைக் கவனிக்க வேறு யாரும் இல்லாததால் தள்ளாத வயதிலும் அவர் தன்னுடைய கடமையைக்
கடைசிவரை செய்துவந்தார். தங்களுக்குத் தேவையான உணவு மற்றும் பொருள்களை தனியாக
வெளியில் சென்று வாங்கிக் கொண்டுவருவார். சொந்த வீடு என்பதால் வாடகை பிரச்னை
இல்லை. இருப்பினும் கிடைக்கும் பென்சன் பணத்தை மகனின் மருத்துவச் செலவுக்கே
செலவழித்துவிடுவார்.
விஸ்வநாதன் கண்விழித்திருந்தால்
வெங்கட்ராமன் எப்படி இறந்தார்? என்ற தகவல் தெரிந்திருக்கும். மாத்திரைகளைக் கேட்டு
வெங்கட்ராமன் அடிக்கடி அடம் பிடிப்பார். மேலும், அவர் கேட்கும் மாத்திரைகளை
விஸ்வநாதன் கொடுக்கவில்லையெனில் தந்தை என்றுகூட பார்க்காமல் அடித்து உதைப்பார்.
அவருக்குச்
சொந்தமாக போன்கூட கிடையாது. ஆனால், அப்பாவின் வேதனை வெங்கட்ராமனுக்கு எதுவும்
தெரியாது. எப்போதும் விஸ்வநாதனின் வீடு பூட்டியே இருக்கும். விஸ்வநாதனின் வாழ்க்கை
போல அவரின் வீடும் இருளடைந்தே காட்சியளிக்கும். அவர் ரொம்ப நல்லவர். யாரிடமும்
அதிகம் பேசமாட்டார். தேவை என்றால் மட்டும் பேசுவார். கேட்ட கேள்விகளுக்கு
பதிலளிப்பார். மற்றவர்களுக்கு எந்தவித சிரமத்தையும் கொடுக்காத வகையில்
நடந்துகொள்வார். விஸ்வநாதனின் காலத்துக்குப் பிறகு வெங்கட்ராமனை யார்
பார்த்துக்கொள்வார்கள் என்று யோசித்துள்ளோம். ஆனால் இருவரும் அடுத்தடுத்து
இறந்துவிட்டார்கள். விஸ்வநாதனுக்கு ஏற்பட்ட நிலைமை வேறு யாருக்கும்
வரக்கூடாது" என்று கூறியதாக போலீஸார் நம்மிடம் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக