Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 4 நவம்பர், 2019

காணாமல் போன 3,400 வங்கிக் கிளைகள்!






















இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com





கடந்த ஐந்து ஆண்டுகளில் பொதுத் துறை வங்கிகளுக்குச் சொந்தமான 3,400 வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

ஹைலைட்ஸ்
  • 2017-18ஆம் ஆண்டில் மொத்தம் 2,083 கிளைகள் மூடப்பட்டுள்ளன.

  •   ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 2,568 வங்கிக் கிளைகளை மூடியுள்ளது.

இந்திய வங்கிகள் நீண்ட காலமாகவே பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளன. நிதி நெருக்கடியாலும், கடன் மோசடிகளாலும் தொடர்ந்து இயங்க முடியாமல் தவிக்கின்றன. நலிவடைந்துள்ள வங்கித் துறையை மீட்டெடுக்க அரசு தரப்பிலிருந்து வங்கி திவால் சட்டம் உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

அதில், ஒரு பகுதியாக வங்கிக் கிளைகள் இணைக்கப்பட்டும் மூடப்பட்டும் வருகின்றன. அவ்வாறு எத்தனை வங்கிக் கிளைகள் இதுவரையில் மூடப்பட்டிருக்கின்றன என்று மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சந்திரசேகர் கவுத், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு மத்திய ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில், இந்தியாவில் உள்ள 26 பொதுத் துறை வங்கிகள் 2014-15 முதல் 2018-19 வரையிலான ஐந்து நிதியாண்டுகளில் மொத்தம் 3,427 வங்கிக் கிளைகளை மூடியுள்ளன அல்லது மற்ற வங்கிக் கிளைகளோடு இணைத்துள்ளன, என்று தெரியவந்துள்ளது.

மூடப்பட்ட மொத்த வங்கிக் கிளைகளில் 75 சதவீத வங்கிக் கிளைகள் (2,568) இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்குச் சொந்தமாகும்.

 
2014-15ஆம் ஆண்டில் 90 கிளைகளும், 2015-16ஆம் ஆண்டில் 126 கிளைகளும், 2016-17ஆம் ஆண்டில் 253 கிளைகளும், 2017-18ஆம் ஆண்டில் 2,083 கிளைகளும், 2018-19ஆம் ஆண்டில் 875 கிளைகளும் மூடப்பட்டுள்ளன. நஷ்டத்தில் இயங்கும் வங்கிகளை ஒன்றிணைத்து வருவாய் ஈட்டும் வங்கிகளாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

 பாரதிய மகிளா பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகனெர் & ஜெய்பூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் ஆகிய வங்கிகள் 2017 ஏப்ரல் 1ஆம் தேதி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியுடன் இணைக்கப்பட்டன.
 
இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் தேனா வங்கியும் விஜயா வங்கியும் பேங்க் ஆஃப் பரோடாவுடன் இணைக்கப்பட்டன. அரசின் இந்த இணைப்பு நடவடிக்கைக்கு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், வங்கிகளின் எதிர்கால நலன் கருதி அரசு இந்த நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக