Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 4 நவம்பர், 2019

TikTok vs OnePlus: அறிமுகமானது டிக் டாக் ஸ்மார்ட்போன்! விலையை சொன்னால் நம்புவீர்களா?

 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


பிரபல TikTok நிறுவனம் Smartisan Jianguo Pro 3 எனும் ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஒன்பிளஸ் 7டி தொடரில் உள்ள அதே ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

காமெடி, லிப்-சின்க் மற்றும் டேலன்ட் வீடியோக்களை உருவாக்கி பகிர உதவும் பிரபல சமூக ஊடக தளமான டிக் டாக் நிறுவனம் - நம்பித்தான் ஆகவேண்டும் - ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

பைட்டான்ஸ் (ByteDance) அல்லது டிக் டாக் டெவலப்பர் என்று அழைக்கப்படும் சீன இணைய தொழில்நுட்ப நிறுவனமானது கடந்த வார இறுதியில் அதன் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது ஒரு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும் மற்றும் இது Smartisan பிராண்டின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பெயர் Smartisan Jianguo Pro 3 ஆகும். இந்த ஸ்மார்டிசன் ஜியாங்குவோ ப்ரோ 3 ஆனது க்வால்காமின் மிக சக்திவாய்ந்த சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் கொண்டு இயக்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 7டி தொடரில் உள்ள அதே ப்ராசஸர்!

கடந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட பெரும்பாலான பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் நீங்கள் இந்த ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் ஐ காணலாம். உதாரணமாக ஒன்பிளஸ் 7டி தொடரை கூறலாம். போதுமான அளவு பிரபலத்தன்மையை அடைந்துவிட்ட காரணத்தினால் டிக் டாக் நிறுவனம் இப்போது ஸ்மார்ட்போன் துறைக்குள் நுழைய விரும்புவதாக தெரிகிறது.

டிஸ்பிளே மற்றும் ப்ராசஸர்:

ஸ்மார்டிசன் ஜியாங்குவோ ப்ரோ 3 ஆனது ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் ப்ராசஸர் உடன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது. மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ஸ்மார்டிசன் ஜியாங்குவோ ப்ரோ 3 ஆனது 6.39 இன்ச் அளவிலான FHD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது 1080 × 2340 பிக்சல்கள் அளவிலான ஸ்க்ரீன் ரெசல்யூஷனை வழங்குகிறது.

 
கேமராத்துறை:

சுவாரசியமாக ஸ்மார்டிசன் ஜியாங்குவோ ப்ரோ 3 ஆனது அதன் பின்புறத்தில் குவாட்-கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இதன் பின்புற பேனலில், 48 எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 586 சென்சார் + 13 எம்பி வைட்-ஆங்கிள் லென்ஸ் + 8 எம்பி அளவிலான டெலிஃபோட்டோ லென்ஸ் + 5 எம்பி அளவிலான மேக்ரோ லென்ஸ் ஆகியவைகள் உள்ளன.

முன்பக்கத்தை பொறுத்தவரை ஸ்மார்டிசன் ஜியாங்குவோ ப்ரோ 3 ஆனது 20 எம்பி அளவிலான செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இந்த செல்பீ கேமராவானது டிஸ்பிளேவின் வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பிற்குள் அமர்ந்திருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஒரு தடிமனான கன்னப்பகுதியை காண முடிகிறது, மற்ற மூன்று பக்கங்களிலும் குறைந்த அளவிலான பெஸல்களே உள்ளன.


பேட்டரி:

இந்த ஸ்மார்டிசன் ஜியாங்குவோ ப்ரோ 3 ஆனது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட ஒரு 4000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும் இந்த சர்ட்போன் 4G VoLTE ஐயும் ஆதரிக்கிறது.

விலை நிர்ணயம்:

புதிய ஸ்மார்டிசன் ஜியாங்குவோ ப்ரோ 3 ஆனது மொத்தம் மூன்று மெமரி வேரியண்ட்களின் கீழ் அறிமுகமாகியுள்ளது. மெமரி மற்றும் விலையை பொறுத்தவரை, இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட் ஆனது (இந்திய மதிப்பின் படி) தோராயமாக ரூ.29,000 என்றும், இதன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி வேரியண்ட் ஆனது சுமார் ரூ.32,000 என்றும் மற்றும் இதன் ஹை எண்ட் மாடல் ஆன 12 ஜிபி ரேம் + 256 ஜிபி வேரியண்ட் ஆனது தோராயமாக ரூ.36,000 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக