இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மனிதர்களை இயந்திரங்களாக்கவும், இயந்திரங்களை
மனிதர்களாக்கவும் முயன்று கொண்டிருக்கும் காலம் இது. 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர வேலை,
பாக்கி 8 மணி நேர இனிமையான பொழுதுகளை குடும்பத்துடனோ நமக்கு பிடித்தவர்களுடனோ கழிப்பது
எல்லாம் இன்று தரம் கெட்ட கனவுகள்.
உழைக்க வேண்டும், ஒரு நாளில் 25 மணி நேரம்
சம்பாதிப்பதற்காக உழைக்க வேண்டும். அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்த பின்னரும்
லேப்டாப்பில் டொக்கு டொக்கு என தட்டிக் கொண்டிருக்க வேண்டும்.
அவ்வளவு ஏன் அலுவலகத்தில் இருந்து, வீட்டுக்கும்,
வீட்டில் இருந்து அலுவலகத்துக்கும் வரும் பேருந்தில் கூட வைஃபை வசதி வைத்து வேலை செய்யச்
சொல்கிறார்கள் நிறுவனங்கள்.
விடுப்பு
அவ்வளவு கொடூரமாக கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கின்றன
நிறுவனங்கள். லாபத்தை ஒவ்வொரு வருடமும் இரட்டிப்பாக்க வெறித்தனமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறன.
இந்த வெறித்தன உழைப்பில் சாதாரண மக்களும் ஈடுபட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள்.
அதனால் தான் 25 மணி நேரமும் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது. இதில் விடுப்பு
எல்லாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத விஷயம்.
நோ
கேள்வி
நான் ஏன் ஒரு நாளுக்கு 25 மணி நேரம் உழைக்க
வேண்டும் என நம் வாயில் இருந்து வர வேண்டாம், நம் சிந்தனையில் இருப்பதைக் கண்டு பிடித்தால்
கூட போதும், நம் சீட்டு கிழிந்துவிடும். அந்த அளவுக்கு வேலைப் பளு அதிகரித்து இருக்கிறது.
இது சாதாரண மளிகைக் கடை தொடங்கி பெரிய பெரிய ஐடி, ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வரை அவரவர்கள்
துறைக்கு தகுந்தாற் போல வேலை பளு இருக்கிறது. இந்த சிக்கலை எல்லாம் மீறி ஒருவர் விடுப்பு
எடுத்தால் என்ன ஆகும். இதோ ஏர் இந்தியாவில் நடந்து இருக்கிறதே.. என்ன நடந்தது எனப்
பார்ப்போம்.
விமான
பணிப் பெண்கள்
மற்ற துறைகளில் இருக்கும் வேலைப் பளுவைப்
போலவே, Flight Attendants என்று சொல்லப்படும் விமானப் பணியாட்கள் (பொதுவாக விமான பணிப்
பெண்கள்) வேலை பார்ப்பதிலும் பல சிக்கல்கள் இருக்கின்றன. அதில் ஒரு முக்கிய விஷயம்
விடுப்பு. இங்கு நான்கு பேர் விடுப்பு எடுத்ததற்காக, அவர்களை வேலையில் இருந்தே நீக்கிவிட்டார்கள்
என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். என்னய்யா அநியாயமா இருக்கு... விடுப்பு எடுத்தா நிரந்தரமா
வீட்டுக்கு அனுப்பி விடுவார்களா..?
ஏர்
இந்தியா தரப்பு
கடந்த நவம்பர் 02 மற்றும் 03 ஆகிய தேதிகளில்,
ஏர் இந்தியாவின் 238 விமானப் பணியாட்கள் (விமான பணிப் பெண்கள்) உடல் நலக் குறைவைக்
காரணம் காட்டி விடுப்பு எடுத்து இருக்கிறார்கள். இந்த தேதிகளில் வட இந்தியாவில் கர்வா
சோத் என்கிற பண்டிகை கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏன் திடீரென இத்தனை பேர் விடுப்பு
எடுத்து இருக்கிறார்கள் என நிர்வாகத்துக்குள்ளேயே விசாரித்த போது, பலரும் முன் கூட்டியே
விடுப்புக்கு விண்ணப்பித்து இருப்பதாக தகவல்கள் கிடைத்து இருக்கிறது.
அட்டவணை
எனவே அனைவரையும் மீண்டும் பணிக்கு அழைத்து
இருக்கிறது ஏர் இந்தியா நிர்வாக தரப்பு. ஒரு வேளை பணிக்கு வரவில்லை என்றால், வேலையில்
இருந்து நீக்கப்படுவார்கள் என எச்சரித்ததாகவும் சொல்கிறது ஏர் இந்தியா தரப்பு. அதோடு
நிற்காமல், விடுப்பு எடுத்த 238 பேரையும் சேர்த்து, எந்த விமானங்களுக்கு, யார் விமான
பணிப் பெண்களாகச் செல்ல வேண்டும் என அட்டவணையையும் தயார் செய்துவிட்டார்கள்.
4 பேர்
இந்த எச்சரிக்கையை மீறியும் நான்கு விமானப்
பணியாட்கள் (விமானப் பணிப் பெண்கள்), டெல்லி முதல் மும்பை வரைச் செல்ல வேண்டிய விமானத்தில்
வேலை பார்க்கச் சொல்லி இருந்தார்கள். ஆனால் இந்த நான்கு பேருமே வேலைக்குச் செல்லவில்லை.
ஆகையால் இந்த நான்கு பேருக்குமே, அவர்களை ஏன் வேலையில் இருந்து நீக்கக் கூடாது என டெர்மினேஷன்
நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்களாம். அதாவது கிட்ட தட்ட வேலையை விட்டு நீக்கிவிட்டார்கள்.
கூடுதல்
ஆட்கள்
ஏர் இந்தியாவின் இந்த பிரச்னை பற்றித்
தெரிந்த ஒருவர், எகமானிக்ஸ் டைம்ஸுக்கு சொன்ன விவரத்தில், நவம்பர் 02 & 03 தேதிகள்
ஏர் இந்தியாவில் போதுமான விமான பணிப் பெண்கள் வேலைக்கு இருந்ததாகவும் சொல்கிறார்கள்.
அப்படியே இந்த பிரச்னை வெளியே கசியத் தொடங்கியது. இப்போது, வேலையை விட்டு நீக்கப்பட்ட
நான்கு பேரில் மூன்று பேரை மீண்டும் வேலைக்கு அழைத்துக் கொள்ளப்படுவார்கள் எனச் சொல்லி
இருக்கிறது ஏர் இந்திய நிர்வாகத் தரப்பு. இந்த சம்பவங்கள் எல்லாமே 2 வாரத்துக்கு முன்
நடந்து இருக்கிறது.
பாவம்
பணியாளர்கள்
என்ன செய்ய உடல் நலக் குறைவு எனச் சொல்லி
விடுப்பு எடுத்தவர்களைக் கூடி மிரட்டி மீண்டும் வேலைக்கு வர வைக்கிறார்கள். வரவில்லை
என்றால் வேலையை விட்டு துரத்திவிடுகிறார்கள். இத்தனைக்கும் ஏர் இந்தியா இப்போது வரை
ஒரு அரசு நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஊழியர்களும் பணியாளர்களும்,
என்ன மாதிரியான கொடுமைகளை எல்லாம் சந்திக்க நேரிடுமோ தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக