Hertfordshire,
இங்கிலாந்து: இந்த வாயில் நுழையாத இங்கிலாந்தின் Hertfordshire என்கிற பகுதியில்
இருக்கும், தான தர்மங்களைச் செய்யும் கடைக்கு ஒருவர் நுழைகிறார்.
அந்தக்
கடையில் பல பொருட்கள் இருக்கின்றன. அந்தப் பொருட்களுக்கு ஒரு விலை கொடுத்து
வாங்கி, உதவலாம். அப்படிப்பட்ட கடை அது. ஓ வெளிநாட்டில் இப்படி கூட தான
தர்மங்களைச் செய்யலாமா..?
அந்தக்
கடையில் நுழைந்தவர், பார்வைக்கு வைத்திருக்கும் அனைத்து பொருட்களையும்
ஒவ்வொன்றாகப் பார்க்கிறார்.
அந்த சீன குவளை
அவர்
கண்ணில் ஒரு சீன குவளை தென்படுகிறது. எலுமிச்சை நிற பேக் கிரவுண்டில், செடி
கொடிகள் படர்ந்தார் போல ஏதோ சீனத்திலோ, ஜப்பானிய மொழியிலோ, கொரிய மொழியிலோ ஏதோ
எழுதி இருக்கிறது. ஆனால் பார்க்க நன்றாக இருக்கிறது. முன் பக்கம் குவளை போன்றும்
பின் பக்கம் சுவரில் மாட்டி வைப்பது போலும் ஒரு வித்தியாசமாக இருக்கிறது என ஒரு
பவுண்ட் ஸ்டெர்லிங் கொடுத்து வாங்குகிறார். நம்மூர் பணத்தில் 90 ரூபாய்.
விற்றுவிடலாம்
பார்க்க
அழகாகத் தான் இருக்கிறது. ஆனால், நம் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்ய…? ஆக ஒரு
நல்ல விலைக்கு விற்று விடலாம் என இ பே இ காமர்ஸ் வலைதளத்தில் ஒரு விலையைக்
குறிப்பிட்டு விற்பதற்காக பதிவு செய்துவிட்டார். ஒரு சீன குவளைக்கு என்ன விலை
சொல்லி விடுவார்கள்..! என்று தான் அவருக்கு தோன்றியது.
ஆச்சர்யம்
ஆனால்
எதிர்பார்த்ததை விட நல்ல விலை கொடுத்து வாங்க, பலரும் ஆர்வம் காட்டினார்கள்.
என்னய்யா இது, ஒரு சீன குவளைக்கு இத்தனை மவுசா..? அப்படி என்ன இருக்கிறது என இவரே
ஆராய்ந்து பார்த்து இருக்கிறார். ஒன்றும் பிடிபடவில்லை. இங்கிலாந்தின் எசெக்ஸ்
(Essex) பகுதியில் இருக்கும் Sworders Fine Art Auctioneers நிறுவனத்திடம் கொண்டு
செல்கிறார்.
விலை ஏற்றம்
அந்த
மஞ்சள் நிற சீன குவளையின் அருமை பெருமைகள் எல்லாம் தெரிய வர விலை பகிரங்கமாக
எகிறியது. விலைப் போர் தொடங்கியது. இறுதியில் ஒரு சீனர், கட்டணங்கள், வரிகள்
எல்லாவற்றையும் சேர்த்து 4,84,000 பவுண்ட் ஸ்டெர்லிங் விலை கொடுத்து வாங்குகிறார்.
இந்திய மதிப்பில் 4,43,70,369 ரூபாய். ஆக 90 ரூபாய்க்கு வாங்கி 4,43,70,369
ரூபாய்க்கு விற்கிறார். லாபம் 4,43,70,279 ரூபாய்.
என்ன
செய்யப் போகிறார்
இந்த சீன
குவளையை விற்றதால் கிடைத்த பெரிய தொகையை என்ன செய்யப் போகிறார் என்று கேட்டதற்கு,
தன் மகளின் எதிர்காலத்துக்காக பயன்படுத்த இருப்பதாகச் சொல்லி இங்கிலாந்திலும்
நெகிழ வைத்து இருக்கிறார் அந்த தகப்பன் சாமி. வழக்கம் போல பெரிய தொகை கிடைத்ததை
நினைத்து கண்ணீர் விடாத குறையாக மகிழ்ந்து இருக்கிறார் மனிதர். குறிப்பு: தன்
பெயரை எங்கும் குறிப்பிட வேண்டாம் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறாராம். ஆகையால்
அவரின் விவரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக