இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சிறந்த காலை உணவு
நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
விளையாட்டு சார்ந்த உணவியல் மற்றும் ஊட்டச்சத்து ஆரோக்கிய நிபுணர்கள் மிக அதிகாலையிலேயே சாப்பிடுவது நிறைய பேருடைய உடலுக்குப் பொருந்துவதில்லை. விடியற்காலையில் பசி இல்லையென்றால், உடற்பயிற்சிக்கு முன் உண்ணும் கட்டாயமில்லை. இன்னும் சிலரோ சாப்பிடாமலே சுறுசுறுப்புடன் திகழ்வர். சிலருக்கு அதிகாலை நேரத்தில் சாப்பிடும் உணவு சற்று கசப்புச் சுவையுடன் இருப்பது போல் தெரியும்.
கார்போ உணவுகள்
அதே நேரத்தில், கார்போ ஹைட்ரேட்டுகள் சோர்வை ஈடுகட்ட உதவும் என்பதால் ஒரு கைப்பிடி உணவோ அல்லது தானியங்களோ உங்களை சுறுசுறுப்புடன் பயிற்சியில் ஈடுபட உதவும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
இரவில் சரியாக சாப்பிடாமல், மாறாக, அதிகாலையில் எழுந்ததும், பெரும்பசி காரணமாக சக்தியற்று மிக பலவீனமாக உணரலாம். அதனாலென்ன, எளிதில் விரைவில் சக்தி அளிக்கும் காலை உணவுகள் வகைகள் நிறைய உள்ளன. அவற்றை கவனத்தில் கொண்டு சாப்பிடுங்கள்.
ஜீரணமாவதில் கவனம்
நீங்கள் காலை உணவை உட்கொள்ளும் முன், அதை ஜீரணிக்க எவ்வளவு நேரம் உள்ளது என்று கருத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக, நீங்கள் பயிற்சிக்கு 60 முதல் 90 நிமிடங்கள் முன்னதாக, சாப்பிட முயற்சிக்க வேண்டும். நீங்கள் அதிகாலையில் எழுவது என்பது பயிற்சிக்காகத்தான் மாறாக சாப்பிட அல்ல. இதற்கு பதிலாக நீங்கள் தூங்கி விடலாம். உங்களுக்கு ஜீரணிக்க நிறைய நேரம் இல்லாவிடில் உண்ணும் உணவின் அளவைக் குறைக்கவும்.
சூப்பர் ஃபுட் இதுதான்...
ஒரு கோப்பை தயிர், ஒரு வாழைப்பழம், வேர்க்கடலை வெண்ணெய் முதலியவற்றுக்கு பதிலாக ஒரு கோப்பை தயிர் மட்டும் உட்கொள்ளலாம். 4 அல்லது 5 மணி அளவில் நீங்கள் சாப்பிடும் உணவானது, உடற்பயிற்சிக்கான என்றும் காலை 7 அல்லது 8 மணி அளவில் நேரத்தில் உட்கொள்ளக் கூடிய உணவு காலை நேர உணவு என்றும் இருவகைகளாகப் பிரித்து சாப்பிடுங்கள். நீங்கள் முந்தைய இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பே தயார் செய்து வைத்தால், காலையில் சுலபமாக இருக்கும்.
பயிற்சிக்கு முன் சாப்பிட சிறந்தவை
இவை
சாப்பிடுவது போலவே தயாரிப்பதும் எளிதானது. சாக்லேட் மில்க் சமநிலையான புரதம்
மற்றும் கார்ப்ஸ், ஆற்றல் அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் கொண்டுள்ளதால்
பயிற்சிக்கு முந்தைய சிறப்பான காலை உணவாகும் என்றும் விளக்குகிறார். ஒருவேளை
நீங்கள்
தயார்
செய்ய சோம்பேறித்தனமாக உணர்ந்தால் தானியங்கள் அல்லது உலர்ந்த பழங்களை வாயில்
போட்டு மெல்லலாம் அல்லது பழச்சாறுகளை எடுத்துக்கொள்ளலாம். இவை தேவையான
சத்துக்களை
வழங்குவதோடு தயாரிக்க நேரம் செலவிட தேவை இல்லை என்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள்
பரிந்துரைக்கிறார்கள்.
-
சாக்லேட் பால்
-
அரை வாழைப்பழத்துடன் ஒரு டீஸ்பூன் வேர்க்கடலை வெண்ணெய்
-
பாலாடைக்கட்டி
-
ஒரு அவித்த முட்டை மற்றும் அரை துண்டு வறுத்த ரொட்டி
-
ஒரு கைப்பிடி தானியங்கள்
-
1/4 கப் உலர்ந்த பழம்
-
இயற்கையான பழச்சாறு
இவையே
காலை நேரத்தில் சாப்பிட உகந்தவை.
ஒருவேளை
உங்கள் பயிற்சி வகுப்பு 7 மணி வரை இல்லை எனில் உங்களுக்கு சாப்பிட்டு அனுபவிக்க
நிறைய நேரம் உள்ளது. ஒரு பெருத்த காலை உணவுடன் ஒரு கோப்பை காபி சாப்பிடலாம்.
புரோட்டீன் பார்களும், முதல் நாள் இரவில் மிச்சமான பயறு மற்றும் சூப் வகைகளும்
அடுத்த நாள் மிகவும் பிடித்தமான காலை உணவாகும். ஜாம் கலந்த வறுத்த ரொட்டி துண்டு
எளிதில் செரிமானமாவதால் அதையும் சாப்பிடலாம்.
கொழுப்பு
நீக்கப்பட்ட பால், ஓட்மீல்
கார்ப்ஸ்
மற்றும் புரதத்துடன் நன்கு சாப்பிடலாம்.
கொழுப்பு
நீக்கப்பட்ட பாலுடன் ஓட்ஸ்
புரோட்டீன்
பார்கள்
புரோட்டீன்
பவுடர், பால் அல்லது பாதாம் பால், உலர் பழம் மற்றும் கீரை ஆகியவற்றைக் கொண்டு
தயாரிக்கப்படும் கலவை
ஜாம்கலந்த
வறுத்த ரொட்டி
பருப்பு
சூப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக