Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 1 நவம்பர், 2019

கங்கையம்மன் கோவில் திருவண்ணாமலை

 Image result for கங்கையம்மன் கோவில் திருவண்ணாமலை


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


கங்கையம்மன் கோவில் திருவண்ணாமலையிலுள்ள சந்தாவாசல் என்னும் ஊரில் அமைந்துள்ளது.

மூலவர் - கங்கையம்மன்
உற்சவர் - கங்காதேவி
தல விருட்சம் - வில்வம்
தீர்த்தம் - பெருமாள் தீர்த்தம்
பழமை - 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் - சந்தவாசல்
மாவட்டம் - திருவண்ணாமலை

தல வரலாறு :

தட்சயாகத்திற்கு பின், அம்பிகையைப் பிரிந்த சிவன் பூலோகம் வந்தார். இதனால் உக்கிரத்துடன் இருந்த சிவனின் வெம்மையை, அவரது தலையில் இருந்த கங்காதேவியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

சிவனை சாந்தப்படுத்தும்படி அவள் மகாவிஷ்ணுவை வேண்டினாள், அவரும் அவ்வாறே செய்தார். அவரது உக்கிரமான பார்வையால் எரிந்த பகுதிகளைச் சுற்றிலும் ஏழு நீர் நிலைகளை உண்டாக்கி அணைத்தார். இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் இங்கு பெருமாள், கங்காதேவிக்கு கோவில் கட்டினார். காலப்போக்கில் இக்கோவில்கள் மறைந்து போனது.

தென்னாட்டுக் கோவில்களை அந்நியர்கள் ஆக்கிரமிப்பு செய்தபோது, குமாரகம்பணன் என்ற வடநாட்டு சிற்றரசர் படையெடுத்து சென்று அந்நியர்களை அழித்து, கோவில்களை மீட்டார். அவர் தென்னாடு வரும் வழியில், இவ்வூரில் தங்கினார். இப்பகுதியை ஆண்ட ராஜநாராயண சம்போராயர், குமாரகம்பணன் படையெடுத்து வந்ததாகக் கருதி அவருடன் போரிட்டார். போரில் கம்பணன் வென்றார். தோற்ற மன்னன் ராஜகம்பீர மலையில் ஒளிந்து கொண்டார்.

அப்போது, குமாரகம்பணனின் மனைவி, இத்தலத்தின் மகிமையறிந்து கங்காதேவிக்கு கோவில் எழுப்பினாள். போரில் வென்ற குமாரகம்பணர், ராஜநாராயண சம்போராயரை அழைத்து, நாட்டை திருப்பிக்கொடுத்தார்.

தலச் சிறப்பு :

கங்காதேவிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தையே இங்கு பிரதான பிரசாதமாகத் தருகின்றனர். தண்ணீர் வடிவ தெய்வமான கங்கைக்கே, பூஜை செய்த தீர்த்தமென்பதால், இதை மிகவும் புனிதமானதாகக் கருதுகின்றனர்.

கங்காதேவி இடது காலை மடித்து, வலக்காலை தொங்கவிட்டபடி, ஐந்து தலை நாகத்தின் கீழ் அமர்ந்திருக்கிறாள். கீழே சிம்ம வாகனம் இருக்கிறது. கைகளில் தண்டம், உடுக்கை மற்றும் அமுத கலசம் உள்ளது.

பிராத்தனை :

திருமணத்தடை, புத்திரதோஷம் உள்ளவர்கள் இங்கு அம்பிகைக்கு துணி முடிதல் என்ற வழிபாட்டைச் செய்கின்றனர். கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்கவும், அவரது நன்மைக்காகவும் அம்பிகைக்கு தாலி அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!